My daughter is one who has performed great penance.
பெருந்தவம் செய்தவள் என் மகள்
2071 தேராளும்வாளரக்கன்செல்வம்மாளத்
தென்னிலங்கைமுன்மலங்கச்செந்தீயொல்கி *
போராளனாயிரந்தோள்வாணன்மாளப்
பொருகடலைஅரண்கடந்துபுக்குமிக்க
பாராளன் * பாரிடந்துபாரையுண்டு
பாருமிழ்ந்துபாரளந்து பாரையாண்ட
பேராளன் * பேரோதும்பெண்ணைமண்மேல்
பெருந்தவத்தளென்றல்லால்பேசலாமே?