My daughter desires only to hear the glory of Tirumāl.
திருமால் புகழ் கேட்கவே என் மகள் விரும்புகிறாள்
2065 முளைக்கதிரைக்குறுங்குடியுள்முகிலை மூவா
மூவுலகும்கடந்துஅப்பால்முதலாய்நின்ற *
அளப்பரியஆரமுதை அரங்கம்மேய
அந்தணனை அந்தணர்தம்சிந்தையானை *
விளக்கொளியைமரதகத்தைத்திருத்தண்காவில்
வெஃகாவில்திருமாலைப்பாடக்கேட்டு *
வளர்த்ததனால்பயன்பெற்றேன்வருகவென்று
மடக்கிளியைக்கைகூப்பிவணங்கினாளே. (2)