TNT 2.11

"Where is Tiruvaraṅgam?" asks my daughter.

திருவரங்கம் எங்கே என்கிறாள் என்மகள்

2062 பட்டுடுக்கும் அயர்த்திரங்கும்பாவைபேணாள்

பனிநெடுங்கண்ணீர்ததும்பப்பள்ளிகொள்ளாள் *

எள்துணைப்போது என்குடங்காலிருக்ககில்லாள்

எம்பெருமான்திருவரங்கம்எங்கே? என்னும் *

மட்டுவிக்கிமணிவண்டுமுரலும்கூந்தல்

மடமானைஇதுசெய்தார் தம்மை * மெய்யே

கட்டுவிச்சிசொல்லென்னச்சொன்னாள் நங்காய்!

கடல்வண்ணர்இதுசெய்தார்காப்பாராரே?

Text size