2052 மின்னுருவாய்முன்னுருவில்வேதம்நான்காய்
விளக்கொளியாய்முளைத்தெழுந்ததிங்கள்தானாய் *
பின்னுருவாய்முன்னுருவில்பிணிமூப்பில்லாப்
பிறப்பிலியாய்இறப்பதற்கேஎண்ணாது * எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில்பூதம்ஐந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில்திகழும்சோதி *
தன்னுருவாய்என்னுருவில்நின்றஎந்தை
தளிர்புரையும்திருவடிஎன்தலைமேலவே. (2)
2059 நீரகத்தாய் நெடுவரையி னுச்சிமேலாய்!
நிலாத்திங்கள்துண்டகத்தாய்! நிறைந்தகச்சி
ஊரகத்தாய்! * ஒண்துரைநீர்வெஃகாவுள்ளாய்
உள்ளுவாருள்ளத்தாய்! * உலகமேத்தும்
காரகத்தாய்! கார்வானத்துள்ளாய்! கள்வா!
காமருபூங்காவிரியின்தென்பால்மன்னு
பேரகத்தாய்! * பேராதுஎன்நெஞ்சினுள்ளாய்!
பெருமான்உன்திருவடியேபேணினேனே. (2)