2724 மின் அனைய நுண் மருங்குல் மெல் இயலார் வெண் முறுவல் *
முன்னம் முகிழ்த்த முகிழ் நிலா வந்து அரும்ப *
அன்னவர் தம் மான் நோக்கம் உண்டு ஆங்கு அணி மலர் சேர் *
பொன் இயல் கற்பகத்தின் காடு உடுத்த மாடு எல்லாம் *
மன்னிய மந்தாரம் பூத்த மதுத் திவலை *
இன் இசை வண்டு அமரும் சோலைவாய் மாலைசேர் *
மன்னிய மா மயில் போல் கூந்தல் * மழைத் தடங் கண் 13
2724 miṉ aṉaiya nuṇ maruṅkul mĕl iyalār vĕṇ muṟuval *
muṉṉam mukizhtta mukizh nilā vantu arumpa *
aṉṉavar tam māṉ nokkam uṇṭu āṅku aṇi malar cer *
pŏṉ iyal kaṟpakattiṉ kāṭu uṭutta māṭu ĕllām *
maṉṉiya mantāram pūtta matut tivalai *
iṉ icai vaṇṭu amarum colaivāy mālaicer *
maṉṉiya mā mayil pol kūntal * mazhait taṭaṅ kaṇ 13