PTM 4.13

தேவர் உலகத்து இன்பம் வேண்டாம்; தெய்வ இன்ப வழியில் செல்வோம்

2725 மின்னிடையாரோடும் விளையாடிவேண்டிடத்து *
மன்னும்மணித்தலத்து மாணிக்கமஞ்சரியின் *
மின்னினொளிசேர் பளிங்குவிளிம்படுத்த *
மன்னும்பவளக்கால் செம்பொன் செய்மண்டபத்துள் *
அன்னநடைய அரம்பையர்தம்வகை வளர்த்த *
இன்னிசை யாழ்ப்பாடல்கேட்டின்புற்று * -
2725
miṉ iṭaiyāroṭum vil̤aiyāṭi veṇṭu iṭattu *
maṉṉum maṇit talattu māṇikka mañcariyiṉ *
miṉṉiṉ ŏl̤i cer pal̤iṅku vil̤impu aṭutta *
maṉṉum paval̤ak kāl cĕm pŏṉ cĕy maṇṭapattul̤ *
aṉṉa naṭaiya arampaiyar tam kai val̤artta
iṉ icai yāzhp pāṭal keṭṭu iṉpuṟṟu * 14

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2722

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் நுண்ணிய; இடையாரோடும் இடையை உடையவர்களோடு; வேண்டு இடத்து பல இடங்களில்; விளையாடி விளையாடி; மன்னும் அங்குள்ள இடங்கள்; மணித் தலத்து ரத்தினங்களால் கட்டப்பட்டு; மாணிக்க மாணிக்க மயமான; மஞ்சரியின் பூங்கொத்துக்களை உடையதும்; மின்னின் ஒளி சேர் மின்னல்போலே ஒளியுள்ள; பளிங்கு விளிம்பு ஸ்படிகக் கற்களாலே; அடுத்த கொறடு கட்டப்பெற்றதும்; மன்னும் பவள சிறந்த பவழ; கால் ஸ்தம்பங்களை உடையதும்; செம் பொன் செம்பொன்னால்; செய் செய்யப்பட்டதுமான; மண்டபத்துள் மண்டபத்தில்; அன்ன நடைய அன்ன நடையுடைய; அரம்பயர் தம் தெய்வப் பெண்களின்; கை வளர்த்த கைவரிசையில்; இன் இசை யாழ் வீணையின் இன்னிசை; பாடல் கேட்டு பாடல் கேட்டு; இன்புற்று ஆனந்தித்து
min idaiyarŏdum with celestial damsels who have their waists slender like lightning; vĕṇdidaththu vil̤aiyādi playing joyfully in places which they desire; mannum maṇi thalaththu having a floor studded with distinguished gem stones; māṇikka manjariyin having flowery decorations made with ruby stones; minnin ol̤isĕr pal̤ingu vil̤imbu aduththa having cornice (similar to thiṇṇai that we see in traditional houses) made with crystals which have radiance similar to lightning; mannum paval̤akkāl having glittering pillars of red coral; semponsey maṇdabaththul̤ inside the hall made of reddish gold (pure gold); annam nadaiya arambaiyar tham kaival̤arththa being nurtured by caressing with their own hands, by celestial women who have a gait similar to that of a swan; in isai yāzh pādal the song from vīṇai (a stringed, traditional musical instrument) which has sweet notes; kĕttu inbuṝu hearing it and feeling joyful