Chapter 3

Sages in Moksha - (தன் நாபி)

மோக்ஷத்தில் முனிவர்கள்
Verses: 2717 to 2721
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
  • PTM 3.5
    2717 தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர் *
    மன்னிய தாமரை மா மலர் பூத்து * அம் மலர்மேல்
    முன்னம் திசைமுகனைத் தான் படைக்க * 5
  • PTM 3.6
    2718 மற்று அவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள் *
    அம் மறை தான் மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் *
    நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? * 6
  • PTM 3.7
    2719 நான்கினிலும் பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது * ஓர்
    தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும் *
    என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி *
    துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் * வெம் சுடரோன் 7
  • PTM 3.8
    2720 மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும் *
    இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து *
    தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால் *
    இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் *
    என்னவும் கேட்டு அறிவது இல்லை * உளது என்னில் 8
  • PTM 3.9
    2721 மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் *
    அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் * வீடு என்னும்
    தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே * 9
    அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து * ஆங்கு
    அன்னவரைக் கற்பிப்போம் யாமே * அது நிற்க 10