PTM 4.12

தேவர் உலகத்து இன்பம் வேண்டாம்; தெய்வ இன்ப வழியில் செல்வோம்

2724 மின்னனைய நுண்மருங்குல் மெல்லியலார் வெண்முறுவல் *
முன்னம்முகிழ்த்த முகிழ்நிலாவந்தரும்ப *
அன்னவர்தம்மானோக்க முண்டாங்கணிமலர்சேர் *
பொன்னியல்கற்பகத்தின் காடுடுத்தமாடெல்லாம் *
மன்னியமந்தாரம் பூத்தமதுத்திவலை *
இன்னிசை வண்டமரும் சோலைவாய் மாலைசேர் *
மன்னியமாமயில்போல்கூந்தல் * - மழைத்தடங்கண்
2724 miṉ aṉaiya nuṇ maruṅkul mĕl iyalār vĕṇ muṟuval *
muṉṉam mukizhtta mukizh nilā vantu arumpa *
aṉṉavar tam māṉ nokkam uṇṭu āṅku aṇi malar cer *
pŏṉ iyal kaṟpakattiṉ kāṭu uṭutta māṭu ĕllām *
maṉṉiya mantāram pūtta matut tivalai *
iṉ icai vaṇṭu amarum colaivāy mālaicer *
maṉṉiya mā mayil pol kūntal * mazhait taṭaṅ kaṇ 13

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2722

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மின் அனைய மின்னல் போல் மெலிதான; நுண் மருங்குல் இடையையுடைய; மெல் இயலார் மாதர்கள்; வெண் முறுவல் முன்னம் முகிழ்த்த புன் முறுவல் செய்ய; முகிழ் நிலா வந்து அரும்ப இள நிலா வந்து மேலே அரும்ப; அன்னவர் தம் அப்படிப்பட்ட மாதர்களுடைய; மான் மான் போன்ற; நோக்கம் உண்டு பார்வையை அநுபவித்து; ஆங்கு அவ்வளவிலே; அணி மலர்சேர் அழகிய மலர்கள் நிறைந்துள்ள; பொன் இயல் கற்பகத்தின் பொன்மயமான கற்பக; காடு உடுத்த காடுகள் நிறைந்த; மாடு எல்லாம் பிரதேசங்கள் எல்லாவற்றிலும்; மன்னிய மந்தாரம் பாரிஜாத பூக்களிலுள்ள; பூத்த மதுத் திவலை மகரந்த பிந்துக்களில்; இன் இசை இனிமையாக ரீங்கரிக்கும்; வண்டு அமரும் வண்டுகள் அமரும்; சோலை வாய் சோலைகளில்; மாலை சேர் புஷ்பங்களை அணிந்தும்; மன்னிய மாமயில் மயில் தோகை போன்ற; போல் கூந்தல் கூந்தலை உடையவர்களாயும்; மழைத் தடம் குளிர்ந்து விசாலமான; கண் கண்களை உடையவர்களாயும்
marungu irundha being nearby; minnanaiya nuṇmarungul melliyalār tender women having waist as subtle as lightning; munnam mugizhththa revealed at the beginning itself; veṇ muṛuval (their) white teeth; mugizh nil̤a vandhu arumba young moon, spreading; annanvar tham women-folk like that; mān nŏkkam uṇdu enjoying their look which is like the look of a doe; āngu at the same time; aṇimalar sĕr with abundance of beautiful flowers; pon iyal kaṛpagaththin kādu uduththa surrounded by a forest of golden hued kaṛpaga trees (wish-fulfilling, celestial tree); mādu ellām manniya mandhāram pūththa madhu thivalai in the drops of honey secreting from the flowers of pārijātha trees (another celestial tree, with fragrant flowers), which are seen on all sides; in isai vaṇdu amarum sŏlai vāy in the orchards, inside which beetles are humming with sweet music; mālai sĕr manniya māmayil pŏl kūndhal being decked with flowers and having tresses which look like the long feathers of peacocks, fitting well; mazhai thadam kaṇ having expansive eyes which are cool and dark like rain bearing cloud