Chapter 3

Sages in Moksha - (தன் நாபி)

மோக்ஷத்தில் முனிவர்கள்
Verses: 2717 to 2721
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PTM 3.5

2717 தன்நாபிவலயத்துப் பேரொளிசேர் *
மன்னியதாமரை மாமலர்ப்பூத்து * அம்மலர்மேல்
முன்னந்திசைமுகனைத் தான்படைக்க *
2717 தன் நாபி வலயத்துப் பேர் ஒளி சேர் *
மன்னிய தாமரை மா மலர் பூத்து * அம் மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான் படைக்க * 5
2717 taṉ nāpi valayattup per ŏl̤i cer *
maṉṉiya tāmarai mā malar pūttu * am malarmel
muṉṉam ticaimukaṉait tāṉ paṭaikka * 5

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2717. The god created a shining lotus on his navel and the four-headed Brahmā on it. (5)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தன் நாபி வலயத்து தன் நாபீ கமலத்தில்; பேர் ஒளி சேர் சிறந்த ஒளி பொருந்தியதும்; மன்னிய என்றும் அழியாததுமான; தாமரை தாமரைப்பூவை; மா மலர் பூத்து மலரச்செய்து; அம் மலர் மேல் அந்த மலர் மேல்; முன்னம் முதல் முதலாக; திசை முகனை நான்முகக் கடவுளைத்; தான் படைக்க தான் ஸ்ருஷ்டிக்க
than nābi valayaththu in the region of his navel; pĕr ol̤i sĕr being with great radiance; manniya thāmarai māmalar pūththu making the forever indestructible lotus flower to blossom; a malar mĕl atop that lotus flower; munnam thisaimuganaith thān padaikka even as he created brahmā during the time of creation (after deluge)

PTM 3.6

2718 மற்றவனும் முன்னம்படைத்தனன் நான்மறைகள் * -
அம்மறைதான் மன்னுமறம் பொருளின்பம் வீடென்று உலகில் *
நன்னெறிமேம்பட்டன நான்கன்றே * -
2718 மற்று அவனும் முன்னம் படைத்தனன் நான்மறைகள் *
அம் மறை தான் மன்னும் அறம் பொருள் இன்பம் வீடு என்று உலகில் *
நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே? * 6
2718 maṟṟu avaṉum muṉṉam paṭaittaṉaṉ nāṉmaṟaikal̤ *
am maṟai tāṉ maṉṉum aṟam pŏrul̤ iṉpam vīṭu ĕṉṟu ulakil *
nal nĕṟi mempaṭṭaṉa nāṉku aṉṟe? * 6

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2718. Brahmā created the four Vedās that show the path to Dharma (righteousness, moral values), Artha (prosperity, economic values), Kama (earthly pleasure, love, psychological values) and Mokshā (liberation, spiritual values). (6)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மற்று அவனும் அந்த நான்முகனும்; முன்னம் நான்மறைகள் முதலில் நான்கு வேதங்களை; படைத்தனன் படைத்தான்; அம் மறை தான் அந்த வேதங்களானவை; மன்னும் அறம் பொருள் நிலை நின்ற தருமம் அர்த்தம்; இன்பம் வீடு என்று காமம் மோக்ஷம் என்பது; உலகில் இந்த உலகில்; நல் நெறி நல்ல நெறியும்; மேம் பட்டன சிறந்ததுமான; நான்கு அன்றே? இவை நான்கன்றோ?
maṝavanum that brahmā too; munnam nānmaṛaigal̤ padaiththanan he obtained the four vĕdhas (from supreme being); ammaṛaidhān those vĕdhas; mannum aṛam porul̤ inbam vīdu enṛu being firmly established as righteousness, wealth, love and mŏksham (attaining paramapadham or ṣīvaikuṇtam); ulagil nal neṛi mĕmbattana nāngu anṛĕ these are the four ultimate benefits as said in this world as being attained through correct means.

PTM 3.7

2719 நான்கினிலும் பின்னையது பின்னைப்பெயர்த்தருமென்பது * ஓர்
தொன்னெறியைவேண்டுவார் வீழ்கனியுமூழிலையும் *
என்னுமிவையே நுகர்ந்து உடலம்தாம்வருந்தி *
துன்னுமிலைக்குரம்பைத் துஞ்சியும் * வெஞ்சுடரோன்-
2719 நான்கினிலும் பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது * ஓர்
தொல் நெறியை வேண்டுவார் வீழ் கனியும் ஊழ் இலையும் *
என்னும் இவையே நுகர்ந்து உடலம் தாம் வருந்தி *
துன்னும் இலைக் குரம்பைத் துஞ்சியும் * வெம் சுடரோன் 7
2719 nāṉkiṉilum piṉṉaiyatu piṉṉaip pĕyartarum ĕṉpatu * or
tŏl nĕṟiyai veṇṭuvār vīzh kaṉiyum ūzh ilaiyum *
ĕṉṉum ivaiye nukarntu uṭalam tām varunti *
tuṉṉum ilaik kurampait tuñciyum * vĕm cuṭaroṉ 7

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2719. Last out of the said 4, Mokshā can only be attained after the body has gone to the other world. Those who want to reach it should eat fallen fruits, dried leaves, make their bodies thin, sleep in a hut roofed with leaves (7)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நான்கினிலும் இந்த நான்கிலும்; பின்னையது பின்னை கடைசியில் சொல்லப்பட்ட; பெயர் தரும் என்பது மோக்ஷம் என்னும் பரமபதம்; ஓர் தொல் நெறியை அந்த பரமபதத்தை; வேண்டுவார் வேண்டுவோர்; வீழ் கனியும் தானே பழுத்து விழுந்த பழங்கள்; ஊழ் இலையும் சருகான இலைகள்; என்னும் இவையே நுகர்ந்து போன்றவற்றையே உண்டு; உடலம் தாம் வருந்தி உடல் வருந்தியும்; துன்னும் நெருக்கமான; இலைக்குரம்பை பர்ணசாலைகளில்; துஞ்சியும் கிடந்தும்; வெம்சுடரோன் வெம்மையான சூரியனின்
nānginum among these four benefits; pinnai peyar tharum enbadhu after this physical body is gone [after death], it will get another body (as mentioned in ṣāsthras); ŏr thol neṛiyai that paramapadham (or archirādhi mārga, the way to reach paramapadham) is distinguished and is existing for a very long time; vĕṇduvār nbsp;; vīzhkaniyum ūzh ilai ennum fruits which had ripened and had fallen on their own as well as leaves which dried up; ivaiyĕ nugarndhu eating these two; udalam varundhi tormenting the physical body; thunnum ilaikkurumbaith thunjiyum lying inside hermitages which are close to each other

PTM 3.8

2720 மன்னுமழல் நுகர்ந்தும் வண்தடத்தினுட் கிடந்தும் *
இன்னதோர் தன்மையராய் ஈங்குடலம்விட்டெழுந்து *
தொன்னெறிக்கண்சென்றா ரெனப்படுஞ்சொல்லல்லால் *
இன்னதோர்காலத்து இனையாரிது பெற்றார் *
என்னவுங் கேட்டறிவதில்லை * உளதென்னில்-
2720 மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும் *
இன்னது ஓர் தன்மையராய் ஈங்கு உடலம் விட்டு எழுந்து *
தொல் நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல் அல்லால் *
இன்னது ஓர் காலத்து இனையார் இது பெற்றார் *
என்னவும் கேட்டு அறிவது இல்லை * உளது என்னில் 8
2720 maṉṉum azhal nukarntum vaṇ taṭattiṉul̤ kiṭantum *
iṉṉatu or taṉmaiyarāy īṅku uṭalam viṭṭu ĕzhuntu *
tŏl nĕṟikkaṇ cĕṉṟār ĕṉappaṭum cŏl allāl *
iṉṉatu or kālattu iṉaiyār itu pĕṟṟār *
ĕṉṉavum keṭṭu aṟivatu illai * ul̤atu ĕṉṉil 8

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2720. and do tapas standing in the heat of the sun and plunging into the water in ponds. One can only say that these are the people who could reach Mokshā. This is what one knows. No one can tell others could reach Mokshā by any other way unless they see them there. (8)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னும் அழல் நுகர்ந்தும் வெய்யிலில் காய்ந்தும்; வண் தடத்தினுள் குளிர்ந்த தடாகத்தில்; கிடந்தும் மூழ்கியும்; இன்னது ஓர் ஆக இவ்விதம்; தன்மையராய் தவம் செய்பவர்கள்; ஈங்கு உடலம் இவ்வுலகில் சரீரத்தை; விட்டு எழுந்து விட்டு மேலே சென்று; தொல் நெறிக்கண் திரும்பிவராத ஒரு இடத்தை; சென்றார் எனப்படும் அடைந்தார் என்று; சொல் அல்லால் சொல்வதைத்தவிர; இன்னது ஓர் காலத்து இன்ன தினத்தில்; இனையார் இது பெற்றார் இன்ன மநுஷ்யன் மோக்ஷத்தில்; என்னவும் கேட்டு போய்ச் சேர்ந்தார்; அறிவது இல்லை என்று சொல்லக் கேட்டதே யில்லை; உளது என்னில் மோக்ஷம் உண்டு என்றால்
venjudarŏn sun who has cruel rays; mannum azhal nugarndhum eating (the sun’s) hot rays which are established firmly; vaṇ thadaththin utkidandhum immersing in the bountiful ponds; innadhŏr thanmaiyar āy thus, having such nature; īngu udalam vittezhundhu leaving the physical body in this world and rising up; thol neṛikkaṇ senṛār enappadum sol allāl other than saying that he reached an ancient place; innadhu ŏr kālaththu idhu peṝār on a specific day, a particular person reached mŏksham (ṣrīvaikuṇtam); ennavum kĕttaṛivadhillai has not been heard, as told by someone

PTM 3.9

2721 மன்னுங்கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் *
அன்னதோரில்லியினூடுபோய் * - வீடென்னும்
தொன்னெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே *
அன்னதேபேசும் அறிவில் சிறுமனத்து * ஆங்
கன்னவரைக் கற்பிப்போம்யாமே * - அதுநிற்க
2721 மன்னும் கடுங் கதிரோன் மண்டலத்தின் நல் நடுவுள் *
அன்னது ஓர் இல்லியின் ஊடு போய் * வீடு என்னும்
தொல் நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே * 9
அன்னதே பேசும் அறிவு இல் சிறு மனத்து * ஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே * அது நிற்க 10
2721 maṉṉum kaṭuṅ katiroṉ maṇṭalattiṉ nal naṭuvul̤ *
aṉṉatu or illiyiṉ ūṭu poy * vīṭu ĕṉṉum
tŏl nĕṟikkaṇ cĕṉṟāraic cŏllumiṉkal̤ cŏllāte * 9
aṉṉate pecum aṟivu il ciṟu maṉattu * āṅku
aṉṉavaraik kaṟpippom yāme * atu niṟka 10

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2721. If you know any people who have reached Mokshā, crossing / piercing through the world of heat of sun (9) tell us who they are. Without knowing their names just to say that we know that they reached Mokshā shows that they are ignorant. We will talk about them later. (9-10)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னும் கடுங் கதிரோன் என்றும் வெப்பமான சூரிய; மண்டலத்தின் நல் நடுவுள் மண்டலத்தின் நடுவில்; அன்னது ஓர் இல்லியின் ஒரு நுட்பமான துவாரத்தின்; ஊடு போய் வழியே போய்; வீடு என்னும் மோக்ஷமென்னும் உளது என்னில் - மோக்ஷம் உண்டு என்றால்; சென்றாரை வந்தவர்களை; சொல்லுமின்கள் காட்டுங்கள்; சொல்லாதே அப்படிக் காட்டமாட்டாமல்; அன்னதே பேசும் பழைய பேச்சையே பேசும்; அறிவில் விவேகமில்லாத; சிறு மனத்து சிறிய மனத்தினராகிய; ஆங்குஅன்னவரை அப்படிப்பட்டவர்களுக்கு; யாமே கற்பிப்போம் நாம் என்ன கற்பிக்கமுடியும்?; அது நிற்க அது நிற்க
ul̤adhu ennil in the event that (the mŏksha whose presence ī deny completely) is present; mannum kadum kadhirŏn maṇdalaththin nal naduvul̤ right at the central region of sun, whose rays are permanent and fierce; annadhu ŏr illiyin ūdu pŏy through the path of that subtle hole, which cannot be described by words; vīdu ennum thol neṛikkaṇ senṛārai sollumingal̤ show those who have gone to that location which you call as mŏksham, and returned; sollādhĕ instead of showing such persons; annadhĕ pĕsum repeating the oft-repeated saying (that ṣāsthram indicates that there is mŏksham); aṛivu il siṛu manaththu avarai those who do not have rationale and who have narrow minds; kaṛpippŏm yāmĕ should we instruct them?; adhu niṛka let the discussion on mŏksham remain as it is.