PTM 2.3 2715 வான் இயங்கு தாரகை மீன் * என்னும் மலர்ப் பிணையல் ஏய்ந்த * மழைக் கூந்தல் 3
PTM 2.4 2716 தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வடமலையும் * என்னும் இவையே முலையா வடிவு அமைந்த ** அன்ன நடைய அணங்கே * அடி இணையைத் தன்னுடைய அங்கைகளால் தான் தடவத் தான் கிடந்து * ஓர் உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட பின்னை * 4