PTM 3.5

உந்தியில் நான்முகனைப் படைத்து அவனைக்கொண்டு நான்மறைகளை வெளிப்படுத்தியவன் நாராயணன்

2717 தன்நாபிவலயத்துப் பேரொளிசேர் *
மன்னியதாமரை மாமலர்ப்பூத்து * அம்மலர்மேல்
முன்னந்திசைமுகனைத் தான்படைக்க *
2717 taṉ nāpi valayattup per ŏl̤i cer *
maṉṉiya tāmarai mā malar pūttu * am malarmel
muṉṉam ticaimukaṉait tāṉ paṭaikka * 5

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2717. The god created a shining lotus on his navel and the four-headed Brahmā on it. (5)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தன் நாபி வலயத்து தன் நாபீ கமலத்தில்; பேர் ஒளி சேர் சிறந்த ஒளி பொருந்தியதும்; மன்னிய என்றும் அழியாததுமான; தாமரை தாமரைப்பூவை; மா மலர் பூத்து மலரச்செய்து; அம் மலர் மேல் அந்த மலர் மேல்; முன்னம் முதல் முதலாக; திசை முகனை நான்முகக் கடவுளைத்; தான் படைக்க தான் ஸ்ருஷ்டிக்க
than nābi valayaththu in the region of his navel; pĕr ol̤i sĕr being with great radiance; manniya thāmarai māmalar pūththu making the forever indestructible lotus flower to blossom; a malar mĕl atop that lotus flower; munnam thisaimuganaith thān padaikka even as he created brahmā during the time of creation (after deluge)