மற்றவனும்- இவன் சிருஷ்டித்த அநந்தரம்-இவனோ ஈஸ்வரன் -என்று மசக்குப் பாலிடலாம் படி பெருத்த அந்தச் சதுர முகனும் – முன்னம் படைத்தனன் நான்மறைகள் – அந்தச் சதுர முகனும் முன்பு உண்டாக்கின நான்மறைகள் என்றால் போலே இருக்கிறது சர்வேஸ்வரன் இவ் வேத அஷர ராசியை ஸூ ப்த பிரபுத்த ந்யாயத்தாலே முன்புத்தை ஆநு பூர்வியை ஸ்மரித்துச் சொல்லும் என்று வேதத்தின் உடைய அபௌ ருஷேயத்வம் சொல்லா நிற்க