PTM 3.9

மோட்சத்தைக் கண்டவரைக் காட்டுங்கள்

2721 மன்னுங்கடுங்கதிரோன் மண்டலத்தின் நன்னடுவுள் *
அன்னதோரில்லியினூடுபோய் * - வீடென்னும்
தொன்னெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள் சொல்லாதே *
அன்னதேபேசும் அறிவில் சிறுமனத்து * ஆங்
கன்னவரைக் கற்பிப்போம்யாமே * - அதுநிற்க
2721 maṉṉum kaṭuṅ katiroṉ maṇṭalattiṉ nal naṭuvul̤ *
aṉṉatu or illiyiṉ ūṭu poy * vīṭu ĕṉṉum
tŏl nĕṟikkaṇ cĕṉṟāraic cŏllumiṉkal̤ cŏllāte * 9
aṉṉate pecum aṟivu il ciṟu maṉattu * āṅku
aṉṉavaraik kaṟpippom yāme * atu niṟka 10

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2721. If you know any people who have reached Mokshā, crossing / piercing through the world of heat of sun (9) tell us who they are. Without knowing their names just to say that we know that they reached Mokshā shows that they are ignorant. We will talk about them later. (9-10)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மன்னும் கடுங் கதிரோன் என்றும் வெப்பமான சூரிய; மண்டலத்தின் நல் நடுவுள் மண்டலத்தின் நடுவில்; அன்னது ஓர் இல்லியின் ஒரு நுட்பமான துவாரத்தின்; ஊடு போய் வழியே போய்; வீடு என்னும் மோக்ஷமென்னும் உளது என்னில் - மோக்ஷம் உண்டு என்றால்; சென்றாரை வந்தவர்களை; சொல்லுமின்கள் காட்டுங்கள்; சொல்லாதே அப்படிக் காட்டமாட்டாமல்; அன்னதே பேசும் பழைய பேச்சையே பேசும்; அறிவில் விவேகமில்லாத; சிறு மனத்து சிறிய மனத்தினராகிய; ஆங்குஅன்னவரை அப்படிப்பட்டவர்களுக்கு; யாமே கற்பிப்போம் நாம் என்ன கற்பிக்கமுடியும்?; அது நிற்க அது நிற்க
ul̤adhu ennil in the event that (the mŏksha whose presence ī deny completely) is present; mannum kadum kadhirŏn maṇdalaththin nal naduvul̤ right at the central region of sun, whose rays are permanent and fierce; annadhu ŏr illiyin ūdu pŏy through the path of that subtle hole, which cannot be described by words; vīdu ennum thol neṛikkaṇ senṛārai sollumingal̤ show those who have gone to that location which you call as mŏksham, and returned; sollādhĕ instead of showing such persons; annadhĕ pĕsum repeating the oft-repeated saying (that ṣāsthram indicates that there is mŏksham); aṛivu il siṛu manaththu avarai those who do not have rationale and who have narrow minds; kaṛpippŏm yāmĕ should we instruct them?; adhu niṛka let the discussion on mŏksham remain as it is.