Chapter 16

God in the form of a dwarf - (மற்று இன்றியும்)

எம்பெருமான் ஒரு குள்ள வடிவத்தில்
Verses: 2768 to 2771
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PTM 16.56

2768 மற்றன்றியும்
தன்னுருவம் ஆருமறியாமல் தானங்கு * ஓர்
மன்னும்குறளுருவில் மாணியாய் * மாவலிதன்
2768 மற்று இன்றியும்
தன்னுருவம் ஆறும் அறியாமல் தானங்கோர், *
மன்னும் குறள் உருவில் மாணியாய் * மாவலி தன் 58
2768 maṟṟu iṉṟiyum
taṉṉuruvam āṟum aṟiyāmal tāṉaṅkor, *
maṉṉum kuṟal̤ uruvil māṇiyāy * māvali taṉ 58

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2768. “Taking the form of a dwarf whom no one could recognize (58)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மற்று இன்றியும் தவிரவும் மேலும்; தன் உருவம் ஆரும் தனது ஸ்வரூபத்தை யாரும்; அறியாமல் அறியாதபடி; தான் அங்கு ஓர் மன்னும் பரமபுருஷனான தான் ஒரு; குறள் உருவில் பிரம்மசாரி உருவில்; மாணியாய் மாவலி தன் மகாபலியின் வேள்வியில்
maṝu anṛiyum apart from that; than uruvam ārum aṛiyāmal making his nature unknown to anyone else; thān ŏr mannum kuṛal̤ uruvin māṇi āy he, who is the most supreme among all men, made himself into a divine dwarf bachelor; māvali than mahābali’s

PTM 16.57

2769 பொன்னியலும்வேள்விக்கண் புக்கிருந்து * போர்வேந்தர்
மன்னைமனங்கொள்ள வஞ்சித்துநெஞ்சுருக்கி *
என்னுடையபாதத்தால் யானளப்பமூவடிமண் *
மன்னா! தருகென்று வாய்திறப்ப * -
2769 பொன் இயலும் வேள்விக்கண் புக்கு இருந்து போர் வேந்தர்
மன்னை மனம் கொள்ள வஞ்சித்து நெஞ்சு உருக்கி
என்னுடைய பாதத்தால் யான் அளப்ப மூவடி மண்
மன்னா தருக என்று வாய் திறப்ப 59
2769 pŏṉ iyalum vel̤vikkaṇ pukku iruntu por ventar
maṉṉai maṉam kŏl̤l̤a vañcittu nĕñcu urukki
ĕṉṉuṭaiya pātattāl yāṉ al̤appa mūvaṭi maṇ
maṉṉā taruka ĕṉṟu vāy tiṟappa 59

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2769. he went as a bachelor to the golden sacrifice of king Mahābali. He cheated the heroic king, melted his heart by pretending to be a sage. He asked the king, ‘O king, I want three feet of land and I will measure the distance with my feet. ’ (59)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் தங்கம் தானம்; இயலும் செய்யப்படும்; வேள்விக் கண் யாக பூமியில்; புக்கு இருந்து போய்ச்சேர்ந்து; போர் போர் செய்யவல்ல; வேந்தர் மிடுக்கை உடைய; மன்னை மனம் அந்த மகாபலியை; கொள்ள யாசிப்பதற்காகவே வந்தானென்று; வஞ்சித்து நம்பும்படியாக மயக்கி நடையழகு சொல்லழகு; நெஞ்சு உருக்கி ஆகியவற்றால் மனதை உருக்கி; என்னுடைய பாதத்தால் என்னுடைய பாதத்தால்; யான் அளப்ப நானே அளந்து கொள்ளும்படி; மூவடி மண் மூவடி மண்; மன்னா தருக! மன்னனே எனக்குத் தருவாயாக; என்று வாய் திறப்ப என்று யாசிக்க
pon iyalum vĕl̤vikkaṇ pukkirundhu taking abode in the yāgabhūmi (the place where mahābali conducted the ritual) where gold was being gifted; pŏr vĕndhar mannai that māvali who is the chief of kings who have the strength to indulge in war; manam kol̤l̤a vanjiththu bewildering him to make him believe (that this bachelor has come only to seek alms); nenju urukki softening his heart (through the beauty of his gait, speech etc); manna ŏh ḵing!; ennudaiya pādhaththāl yān al̤appa by measuring with my foot; mū adi maṇ tharuga enṛu saying ‘give me three steps of land’; vāy thiṛappa as he asked, opening his mouth

PTM 16.58

2770 மற்றவனும்
என்னால்தரப்பட்டதென்றலுமே *
அத்துணைக்கண் மின்னார்மணிமுடிபோய் விண்தடவ *
மேலெடுத்த
2770 மற்று அவனும்
என்னால் தரப்பட்டது என்றலுமே *
அத்துணைக்கண் மின் ஆர் மணி முடி போய் விண் தடவ
மேல் எடுத்த 60
2770 maṟṟu avaṉum
ĕṉṉāl tarappaṭṭatu ĕṉṟalume *
attuṇaikkaṇ miṉ ār maṇi muṭi poy viṇ taṭava
mel ĕṭutta 60

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2770. Before the dwarf could finish speaking, the king said, ‘I have already given that. ’ At those words, the god grew tall and his crown, shining like lightning, touched the sky and his ankleted feet crossed over all the seven worlds. (60)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மற்று அவனும் மகாபலியும்; என்னால் தன்னால்; தரப்பட்டது மூவடி நிலம் கொடுக்கப்பட்டது; என்றலுமே என்று சொல்ல; அத்துணைக்கண் அந்தக்ஷணத்திலேயே; மின் ஆர் மணி முடி மணிமகுடம்; போய் விண் தடவ ஆகாசத்தே போய் அளாவ; மேல் எடுத்த மேலே தூக்கின
avanum that mahābali (who heard that); ennāl tharappattadhu enṛalum as he said that “the three steps of land have been given by me”; aththuṇaikkaṇ at that very moment; min ār mudi pŏy viṇ thadava the radiant crown went and stroked the ethereal layer; mĕl eduththa that which was lifted high up

PTM 16.59

2771 பொன்னார்கனைகழற்கால் ஏழுலகும்போய்க்கடந்து * அங்கு
ஒன்னாவசுரர் துளங்கச்செலநீட்டி *
மன்னிவ்வகலிடத்தை மாவலியைவஞ்சித்து *
தன்னுலகமாக்குவித்த தாளானை * -
2771 பொன் ஆர் கனை கழல் கால் ஏழ் உலகும் போய்க் கடந்து * அங்கு
ஒன்றா அசுரர் துளங்கச் செல நீட்டி *
மன் இவ் அகல் இடத்தை மாவலியை வஞ்சித்து *
தன் உலகம் ஆக்குவித்த தாளானை * 61
2771 pŏṉ ār kaṉai kazhal kāl ezh ulakum poyk kaṭantu * aṅku
ŏṉṟā acurar tul̤aṅkac cĕla nīṭṭi *
maṉ iv akal iṭattai māvaliyai vañcittu *
taṉ ulakam ākkuvitta tāl̤āṉai * 61

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2771. All the gods and the Asurans saw him and trembled as his feet went upwards and took over the wide world and the sky. He cheated Mahābali with his feet and made all the world his own. ” (61)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன்னார் பொன்னாலான; கனை கழல் கால் வீரத்தண்டை அணிந்த திருவடி; ஏழ்உலகும் ஏழு உலகங்களையும்; போய்க் கடந்து தாண்டி; அங்கு ஒன்னா அந்த யாக பூமியிலுள்ள; அசுரர் நமுசி முதலிய அசுரர்கள்; துளங்க துன்பப்படும்படி; செல நீட்டி மேலும் வியாபிக்கச்செய்து; மன் இந்த நித்யமாய் விசாலமான; அகலிடத்தை இப்பூ மண்டலத்தை; மாவலியை வஞ்சித்து மகாபலியை வஞ்சித்து; தன் உலகம் இந்த உலகத்தைத் தன்னுடையதாகவே; ஆக்குவித்த ஆக்கிகொண்ட; தாளானை திருவடிகளையுடைய பெருமானை
pon ār kanai kazhal kāl the coveted divine foot, decorated with valorous anklet and making a sound; ĕzh ulagum pŏy kadandhu going across all the worlds above; angu onnā asurar thul̤anga making the inimical demons (such as namuchi et al) in those seven worlds to suffer; sela nītti extending further (to go beyond); mannu i agal idaththai this permanent, expansive; māvaliyai vanjiththu deceiving mahābali (like this); than ulagam ākkuviththa thāl̤ānai having divine feet, which made [such worlds] as his world