PTM 16.57

தசாவதாரம் எடுத்தவனே என்னை மயக்கியவன்

2769 பொன்னியலும்வேள்விக்கண் புக்கிருந்து * போர்வேந்தர்
மன்னைமனங்கொள்ள வஞ்சித்துநெஞ்சுருக்கி *
என்னுடையபாதத்தால் யானளப்பமூவடிமண் *
மன்னா! தருகென்று வாய்திறப்ப * -
2769 pŏṉ iyalum vel̤vikkaṇ pukku iruntu por ventar
maṉṉai maṉam kŏl̤l̤a vañcittu nĕñcu urukki
ĕṉṉuṭaiya pātattāl yāṉ al̤appa mūvaṭi maṇ
maṉṉā taruka ĕṉṟu vāy tiṟappa 59

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2769. he went as a bachelor to the golden sacrifice of king Mahābali. He cheated the heroic king, melted his heart by pretending to be a sage. He asked the king, ‘O king, I want three feet of land and I will measure the distance with my feet. ’ (59)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் தங்கம் தானம்; இயலும் செய்யப்படும்; வேள்விக் கண் யாக பூமியில்; புக்கு இருந்து போய்ச்சேர்ந்து; போர் போர் செய்யவல்ல; வேந்தர் மிடுக்கை உடைய; மன்னை மனம் அந்த மகாபலியை; கொள்ள யாசிப்பதற்காகவே வந்தானென்று; வஞ்சித்து நம்பும்படியாக மயக்கி நடையழகு சொல்லழகு; நெஞ்சு உருக்கி ஆகியவற்றால் மனதை உருக்கி; என்னுடைய பாதத்தால் என்னுடைய பாதத்தால்; யான் அளப்ப நானே அளந்து கொள்ளும்படி; மூவடி மண் மூவடி மண்; மன்னா தருக! மன்னனே எனக்குத் தருவாயாக; என்று வாய் திறப்ப என்று யாசிக்க
pon iyalum vĕl̤vikkaṇ pukkirundhu taking abode in the yāgabhūmi (the place where mahābali conducted the ritual) where gold was being gifted; pŏr vĕndhar mannai that māvali who is the chief of kings who have the strength to indulge in war; manam kol̤l̤a vanjiththu bewildering him to make him believe (that this bachelor has come only to seek alms); nenju urukki softening his heart (through the beauty of his gait, speech etc); manna ŏh ḵing!; ennudaiya pādhaththāl yān al̤appa by measuring with my foot; mū adi maṇ tharuga enṛu saying ‘give me three steps of land’; vāy thiṛappa as he asked, opening his mouth