PT 4.1.2

வேதப்பொருளே எம்பெருமான்

1249 யாவருமாயாவையுமாய் எழில்வேதப்பொருள்களுமாய் *
மூவருமாய்முதலாய மூர்த்தியமர்ந்துறையுமிடம் *
மாவரும்திண்படைமன்னைவென்றிகொள்வார் மன்னுநாங்கை *
தேவரும்சென்றிறைஞ்சுபொழில் திருத்தேவனார்தொகையே.
PT.4.1.2
1249 yāvarum āy yāvaiyum āy * ĕzhil vetap pŏrul̤kal̤um āy *
mūvarum āy mutal āya * mūrtti amarntu uṟaiyum iṭam **
mā varum tiṇ paṭai maṉṉai * vĕṉṟi kŏl̤vār maṉṉu nāṅkai *
tevarum cĕṉṟu iṟaiñcu pŏzhil * tiruttevaṉār tŏkaiye-2

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1249. Our lord who is everyone and everything, all the three gods and the meaning of the divine Vedās stays in Thiruthevanārthohai, surrounded with beautiful blooming groves dripping with honey where kings with strong armies, conquerers of their enemies, and the gods from the sky come and worship him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யாவரும் ஆய் சித்தாகவும்; யாவையும் ஆய் அசித்தாகவும் தானாய்; எழில் வேத அழகிய வேதங்களின்; பொருள்களும் ஆய் அர்த்தமும் தானாய்; மூவரும் ஆய் பிரமன் விஷ்ணு ருத்ரன் மூவரும் ஆய்; முதலாய மூர்த்தி முழுமுதற் கடவுளான எம்பெருமான்; அமர்ந்து உறையும் இடம் அமர்ந்து இருக்குமிடம்; மா வரும் குதிரை மேல் ஏறிவருகிற; திண்படை திடமான ஆயுதங்களையுடைய; மன்னை ராஜகுலத்தை; வென்றி கொள்வார் வெற்றிபெறும் அந்தணர்கள்; மன்னு நாங்கை வாழும் இடம் திருநாங்கூரில் உள்ள; தேவரும் சென்று தேவர்களும் சென்று; இறைஞ்சு வணங்கும்; பொழில் சோலைகளை யுடைய; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
yāvarumāy having all chĕthanas (sentient beings) as his prakāram (form); yāvaiyumāy having all achĕthanas (insentient objects) as his prakāram; ezhil beautiful; vĕdham shown in vĕdhams; porul̤gal̤umāy having entities as his prakāram; mūvarumāy being the antharyāmi of brahmā and rudhra who perform creation and annihilation, and incarnating as vishṇu who sustains; mudhalāya being the cause for such brahmā and rudhra; mūrththi sarvĕṣvaran who is supreme; amarndhu firmly placed; uṛaiyum eternally residing; idam being the abode; riding the horse; varum arriving; thiṇ firm; padai having weapons; mannai royal kings; venṛi kol̤vār brāhmaṇas who can defeat; mannu residing firmly; nāngai in thirunāngūr; dhĕvarum dhĕvathās such as indhran et al; senṛu approach; iṛainjum remaining to be prayed to; pozhil having gardens; thiruththĕvanār thogai dhivyadhĕṣam named thiruththĕvanār thogai.