Chapter 1
Thirunāngur Thiruthevanārthohai - (போது அலர்ந்த)
திருநாங்கூர்த் திருத்தேவனார்தொகை
Since the Devas gathered here to worship Sriman Narayana, this place is named Thiruthevanaar Thogai. It is also known as Keezhasaalai. This village is located one mile from Thirunangur, on the southern bank of the Manniyaru River. It is included in the Thirunangur Divya Desams.
தேவர்கள் ஸ்ரீமந் நாராயணனைச் சேவிக்க வந்து திரண்டு நின்ற இடமாதலால் இவ்வூருக்குத் திருத்தேவனார் தொகை என்று பெயர் வந்தது. இதைக் கீழச்சாலை என்றும் கூறுவர். இவ்வூர் திருநாங்கூரிலிருந்து ஒரு மைல் தொலைவில் மண்ணியாற்றின் தென்கரையில் உள்ளது. இது திருநாங்கூர்த் திவ்விய தேசக் கணக்கில் சேர்ந்தது.
Verses: 1248 to 1257
Grammar: Kocchakakkalippā / கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will go to Vaikuṇṭam and be with the Gods
- PT 4.1.1
1248 ## போது அலர்ந்த பொழில் சோலைப் * புறம் எங்கும் பொரு திரைகள் *
தாது உதிர வந்து அலைக்கும் * தட மண்ணித் தென் கரைமேல் **
மாதவன் தான் உறையும் இடம் * வயல் நாங்கை * வரி வண்டு
தேதென என்று இசை பாடும் * திருத்தேவனார் தொகையே 1 - PT 4.1.2
1249 யாவரும் ஆய் யாவையும் ஆய் * எழில் வேதப் பொருள்களும் ஆய் *
மூவரும் ஆய் முதல் ஆய * மூர்த்தி அமர்ந்து உறையும் இடம் **
மா வரும் திண் படை மன்னை * வென்றி கொள்வார் மன்னு நாங்கை *
தேவரும் சென்று இறைஞ்சு பொழில் * திருத்தேவனார் தொகையே 2 - PT 4.1.3
1250 வான் நாடும் மண் நாடும் * மற்று உள்ள பல் உயிரும் *
தான் ஆய எம் பெருமான் * தலைவன் அமர்ந்து உறையும் இடம் **
ஆனாத பெருஞ் செல்வத்து * அரு மறையோர் நாங்கை தன்னுள் *
தேன் ஆரும் மலர்ப் பொழில் சூழ் * திருத்தேவனார் தொகையே 3 - PT 4.1.4
1251 இந்திரனும் இமையவரும் * முனிவர்களும் எழில் அமைந்த *
சந்த மலர்ச் சதுமுகனும் * கதிரவனும் சந்திரனும் **
எந்தை! எமக்கு அருள் என நின்று * அருளும் இடம் எழில் நாங்கை *
சுந்தர நல் பொழில் புடை சூழ் * திருத்தேவனார் தொகையே 4 - PT 4.1.5
1252 அண்டமும் இவ் அலை கடலும் * அவனிகளும் குல வரையும் *
உண்ட பிரான் உறையும் இடம் * ஒளி மணி சந்து அகில் கனகம் **
தெண் திரைகள் வரத் திரட்டும் * திகழ் மண்ணித் தென் கரைமேல் *
திண் திறலார் பயில் நாங்கைத் * திருத்தேவனார்தொகையே 5 - PT 4.1.6
1253 ஞாலம் எல்லாம் அமுது செய்து * நான்மறையும் தொடராத *
பாலகன் ஆய் ஆல் இலையில் * பள்ளி கொள்ளும் பரமன் இடம் **
சாலி வளம் பெருகி வரும் * தட மண்ணித் தென் கரைமேல் *
சேல் உகளும் வயல் நாங்கைத் * திருத்தேவனார்தொகையே 6 - PT 4.1.7
1254 ஓடாத வாளரியின் * உரு ஆகி இரணியனை *
வாடாத வள் உகிரால் * பிளந்து அளைந்த மாலது இடம் *
ஏடு ஏறு பெருஞ் செல்வத்து * எழில் மறையோர் நாங்கை தன்னுள் *
சேடு ஏறு பொழில் தழுவு * திருத்தேவனார்தொகையே 7 - PT 4.1.8
1255 வார் ஆரும் இளங் கொங்கை * மைதிலியை மணம் புணர்வான் *
கார் ஆர் திண் சிலை இறுத்த * தனிக் காளை கருதும் இடம் **
ஏர் ஆரும் பெருஞ் செல்வத்து * எழில் மறையோர் நாங்கை தன்னுள் *
சீர் ஆரும் மலர்ப் பொழில் சூழ் * திருத்தேவனார்தொகையே 8 - PT 4.1.9
1256 கும்பம் மிகு மத யானை * பாகனொடும் குலைந்து வீழ *
கொம்பு அதனைப் பறித்து எறிந்த * கூத்தன் அமர்ந்து உறையும் இடம் **
வம்பு அவிழும் செண்பகத்தின் * மணம் கமழும் நாங்கை தன்னுள் *
செம் பொன் மதிள் பொழில் புடைசூழ் * திருத்தேவனார்தொகையே 9 - PT 4.1.10
1257 ## கார் ஆர்ந்த திருமேனிக் * கண்ணன் அமர்ந்து உறையும் இடம் *
சீர் ஆர்ந்த பொழில் நாங்கைத் * திருத்தேவனார் தொகைமேல் **
கூர் ஆர்ந்த வேல் கலியன் * கூறு தமிழ்ப் பத்தும் வல்லார் *
ஏர் ஆர்ந்த வைகுந்தத்து * இமையவரோடு இருப்பாரே 10