PT 4.1.3

எல்லாப் பொருளுமாவான் எம்பெருமான்

1250 வானாடும்மண்ணாடும் மற்றுள்ளபல்லுயிரும் *
தானாய எம்பெருமான் தலைவன்அமர்ந்துஉறையுமிடம் *
ஆனாதபெருஞ்செல்வத்து அருமறையோர்நாங்கை தன்னுள் *
தேனாரும்மலர்ப்பொழில்சூழ் திருத்தேவனார்தொகையே.
PT.4.1.3
1250 vāṉ nāṭum maṇ nāṭum * maṟṟu ul̤l̤a pal uyirum *
tāṉ āya ĕm pĕrumāṉ * talaivaṉ amarntu uṟaiyum iṭam **
āṉāta pĕruñ cĕlvattu * aru maṟaiyor nāṅkai taṉṉul̤ *
teṉ ārum malarp pŏzhil cūzh * tiruttevaṉār tŏkaiye 3

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1250. Our lord who is the king of the sky and of the people and creatures of the earth and is within everything stays in Thiruthevanārthohai surrounded with beautiful blooming groves dripping with honey in Nāngai where Maraiyoor live, skilled in the wealth of knowledge that is the Vedās.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வான் நாடும் வானுலகிலும்; மண் நாடும் பூலோகத்திலும்; மற்று உள்ள வாழும் பல வகைப்பட்ட; பல் உயிரும் உயிர்களுக்குள்ளும்; தான் ஆய தானே அந்தர்யாமியாய்; எம்பெருமான் இருக்கும் எம்பெருமானான; தலைவன் அமர்ந்து உறையும் இடம் அந்த தலைவன் இருக்குமிடம்; ஆனாத அழிவில்லாத; பெருஞ்செல்வத்து பெருஞ்செல்வமுடைய; அரு மறையோர் அருமையான வேதங்களை; நாங்கை தன்னுள் ஓதும் அந்தணர்கள் வாழும்; தேன் ஆரும் மலர் தேன் பாயும் மலர்களையுடைய; பொழில் சூழ் சோலைகள் சூழ்ந்த; திருத்தேவனார் திருத்தேவனார்; தொகையே தொகையே
vān nādum paramapadham which is located in the supreme sky; maṇ nādum leelā vibhūthi (samsāram) which has the earth; maṝu ul̤l̤a further, present in those worlds; pal uyirum different types of āthmās; thān āya having these as his prakāram, and being antharāthmā for all of these; thalaivan the lord; emperumān sarvĕṣvaran; amarndhu uṛaiyumidam firmly residing abode; ānādha imperishable; perum endless; selvaththu having wealth; aru difficult to learn; maṛaiyŏr where brāhmaṇas, who have completely learnt vĕdham, are residing; nāngai thannul̤ in thirunāngūr; thĕn ārum filled with honey; malar having flowers; pozhil by gardens; sūzh surrounded; thiruththĕvanār thogai dhivyadhĕṣam named thiruththĕvanār thogai.