PT 3.10.1

மனமே! அரி மேய விண்ணகரம் வணங்கு

1238 திருமடந்தைமண்மடந்தை இருபாலும்திகழத்
தீவினைகள்போயகலஅடியவர்கட்குஎன்றும்
அருள்நடந்து * இவ்வேழுலகத்தவர்ப்பணிய வானோர்
அமர்ந்தேத்தஇருந்தஇடம் * பெரும்புகழ்வேதியர் வாழ்
தரும்இடங்கள்மலர்கள்மிகுகைதைகள்செங்கழுநீர்
தாமரைகள்தடங்கள்தொறும் இடங்கள்தொறும் திகழ *
அருவிடங்கள்பொழில்தழுவி எழில்திகழும்நாங்கூர்
அரிமேயவிண்ணகரம்வணங்குமடநெஞ்சே! (2)
PT.3.10.1
1238 ## tiru maṭantai maṇ maṭantai irupālum tikazhat *
tīviṉaikal̤ poy akala aṭiyavarkaṭku ĕṉṟum
arul̤ naṭantu * iv ezh ulakattavar paṇiya * vāṉor
amarntu etta irunta iṭam ** pĕrum pukazh vetiyar vāzh-
tarum iṭaṅkal̤ malarkal̤ miku kaitaikal̤ cĕṅkazhunīr *
tāmaraikal̤ taṭaṅkal̤tŏṟum iṭaṅkal̤tŏṟum tikazha *
aru iṭaṅkal̤ pŏzhil tazhuvi ĕzhil tikazhum nāṅkūr *
arimeyaviṇṇakaram-vaṇaṅku maṭa nĕñce-1

Ragam

Mohana / மோஹன

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1238. Our lord with shining Lakshmi and the earth goddess at his sides who takes away the bad karmā of his devotees and gives them his grace as all the people of the seven worlds worship him and the gods in the sky praise him stays lovingly in Arimeyavinnagaram in Nāngur where thazhai flowers, beautiful kazhuneer flowers and lotuses bloom in all the ponds and groves, and where famous Vediyars, knowers of the Vedās, live. O heart, let us go and worship him in that temple.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரு மடந்தை திருமகளும்; மண் மடந்தை மண்மகளும்; இருபாலும் திகழ இரண்டு பக்கமும் இருக்க; அடியவர்கட்கு என்றும் பக்தர்களுக்கு என்றும்; அருள் நடந்து அருள் புரிந்து; தீவினைகள் கொடிய பாபங்கள்; போய் அகல ஓடும்படி; இவ் ஏழ் உலகத்தவர் இந்த ஏழ் உலகத்தவர்களும்; பணிய வணங்க; வானோர் அமர்ந்து நித்யசூரிகள் பூலோகத்தில் வந்து; ஏத்த இருந்த இடம் இருந்து துதிக்க தகுந்த இடமாய்; பெரும் புகழ் பெரும் புகழ்வாய்ந்த; வேதியர் வைதிகர்கள்; வாழ் தரும் வாழ்கின்ற; இடங்கள் இடங்களையுடையதாய்; மலர்கள் மிகு மிகுந்த மலர்களையுடையதாய்; கைதைகள் தாழைகளும்; செங்கழுநீர் செங்கழுநீர் பூக்களும்; தாமரைகள் தாமரைகளும்; தடங்கள் தொறும் தடாகங்கள் தோறும்; இடங்கள் தொறும் திகழ பார்த்த இடங்களெல்லாம்; பொழில் சோலைகள் சூழ்ந்த; தழுவி அரு இடங்கள் ஆகாசம் வரை உயர்ந்து நிற்கும்; எழில் திகழும் நாங்கூர் அழகிய நாங்கூரிலிருக்கும்; அரிமேயவிண்ணகரம் அரிமேயவிண்ணகர; வணங்கு எம்பெருமானை வணங்கு; மட நெஞ்சே! மட நெஞ்சே!
thirumadandhai periya pirāttiyār; maṇ madandhai and ṣrī bhūmip pirātti; iru pālum on either side; thigazha shine; adiyavargatku towards devotees; enṛum always; arul̤ nadandhu granting mercy; thī vinaigal̤ cruel sins; pŏy agala to run away; ivvĕzh ulagaththavar the residents of these seven worlds; paṇiya to surrender; vānŏr nithyasūris; amarndhu remaining rooted, in this abode of samsāram; ĕththa to praise; irundha eternally residing; idam being the dhivyadhĕṣam; perum pugazh very famous; vĕdhiyar brāhmaṇas; vāzh tharum residing; idangal̤ having places; malargal̤ migu having abundance of flowers; kaidhaigal̤ thāzhai plants (which are found on seashore); sengazhunīr sengazhunīr flowers; thāmaraigal̤ lotus flowers; idangal̤ thoṛum everywhere; thigazha as they shine; pozhil garden; aruvidangal̤ the whole sky; thazhuvi growing tall to fill; ezhil thigazhum beauty is shining; nāngūr in thirunāngūr; arimĕya viṇṇagaram emperumān in arimĕya viṇṇagaram; mada nenjĕ ŏh obedient heart!; vaṇangu surrender.