PT 2.5.9

வேதங்கள் கண்டவனைக் கடல்மல்லையில் காணலாம்

1096 தொண்டாயர்தாம்பரவும் அடியினானை
படிகடந்ததாளாளற்குஆளாஉய்தல்
விண்டானை * தென்னிலங்கையரக்கர்வேந்தை
விலங்குண்ணவலங்கைவாய்ச்சரங்களாண்டு *
பண்டாயவேதங்கள்நான்கும் ஐந்து
வேள்விகளும் கேள்வியோடுஅங்கமாறும்
கண்டானை * தொண்டனேன்கண்டுகொண்டேன்
கடிபொழில்சூழ்கடல்மல்லைத்தலசயனத்தே.
PT.2.5.9
1096 tŏṇṭu āyar-tām paravum aṭiyiṉāṉai * paṭi kaṭanta tāl̤āl̤aṟku āl̤ āy uytal
viṇṭāṉai * tĕṉ ilaṅkai arakkar ventai * vilaṅku uṇṇa valaṅ kaivāyc caraṅkal̤ āṇṭu **
paṇṭu āya vetaṅkal̤ nāṉkum * aintu vel̤vikal̤um kel̤viyoṭu aṅkam āṟum
kaṇṭāṉaita * tŏṇṭaṉeṉ kaṇṭukŏṇṭeṉ * kaṭi pŏzhil cūzh kaṭalmallait talacayaṉatte-9

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1096. The lord whose feet his devotees praise measured the world at the sacrifice of Mahābali and he killed the king of the Raksasas of the southern Lankā. He taught the sages, all the four ancient Vedās, the five sacrifices, the six Upanishads and all the other sastras and he stays in Kadalmallai Thalasayanam surrounded with thick groves, and I, his devotee, saw him there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டு ஆயர் தாம் தொண்டர்கள்; பரவும் துதிக்கும்; அடியினானை திருவடிகளை யுடையவனும்; படி பூமியை; கடந்த அளந்த; தாளாளற்கு திருவடிகளை; ஆள் ஆய் துதித்து; உய்தல் உய்வு பெறுவதை; விண்டானை தவிர்த்த; தென்னிலங்கை தென்னிலங்கை; அரக்கர் அரக்கர்; வேந்தை அரசனான ராவணனை; விலங்கு மிருகங்கள்; உண்ண தின்னும்படி; வலங்கை வாய் வலக்கையாலே; சரங்கள் அம்புகளை; ஆண்டு பிரயோகித்தவனும்; பண்டு ஆய நித்யமான; வேதங்கள் நான்கும் நான்கு வேதங்களையும்; ஐந்து வேள்விகளும் ஐந்து வேள்விகளையும்; வேள்வியோடு ஆசார்ய உபதேசத்தோடு; அங்கம் ஆறும் ஆறு அங்கங்கள் ஆகியவற்றால்; கண்டானை காணப்படும்; தொண்டனேன் எம்பெருமானை; கண்டு கொண்டேன் நான் கண்டு கொண்டது; கடி மணம்மிக்க; பொழில் சோலைகள்; சூழ் சூழ்ந்த; கடல் மல்லைத் திருக்கடல் மல்லை; தலசயனத்தே தலசயனத்தில்
thoṇdu āyār thām servitors who have special knowledge; paravum to praise; adiyinānai one who is having divine feet; padi earth; kadandha measured; thāl̤ āl̤arkku for the one who has divine feet; āl̤āy serving; uydhal remaining firm in that principle of uplifting; viṇdānai being different; then remaining in southern direction; ilangai in lankā; arakkar of rākshasas; vĕndhai rāvaṇa who is the king; vilangu animals; uṇṇa to feed on; valangaivāy with the right hand; sarangal̤ arrows; āṇdu one mercifully shot; paṇdu āya eternal; nāngu vĕdhangal̤um four vĕdhams; aindhu vĕl̤vigal̤um five great sacrifices; kĕl̤viyŏdu along with the instruction from preceptor; āṛu angamum six auxiliary subjects; kaṇdānai one who placed (as means to attain him with the help of knowledge from scriptures); thoṇdanĕn ī who am a servitor; kadi fragrant; pozhil by garden; sūzh surrounded; thalasayanaththu in sthala sayanam (where he rests on the ground); kadal mallai in thirukkadalmallai; kaṇdu koṇdĕn ī got to see