PT 2.5.10

தீவினைகளின் வேர் அறும்

1097 படநாகத்தணைக்கிடந்து அன்றுஅவுணர்கோனைப்
படவெகுண்டுமருதிடைபோய், பழனவேலி *
தடமார்ந்தகடல்மல்லைத் தலசயனத்துத்
தாமரைக்கண்துயிலமர்ந்த தலைவன்தன்னை *
கடமாரும்கருங்களிறுவல்லான் வெல்போர்க்
கலிகன்றி ஒலிசெய்தஇன்பப்பாடல் *
திடமாக இவையைந்துமைந்தும் வல்லார்
தீவினையைமுதலரியவல்லார்தாமே. (2)
PT.2.5.10
1097 ## paṭa nākattu aṇaik kiṭantu aṉṟu avuṇar-koṉaip * paṭa vĕkuṇṭu marutu iṭai poy pazhaṉa veli *
taṭam ārnta kaṭalmallait talacayaṉattut * tāmaraikkaṇ tuyil amarnta talaivaṉ-taṉṉai **
kaṭam ārum karuṅ kal̤iṟu vallāṉ * vĕl pork kalikaṉṟi ŏlicĕyta iṉpap pāṭal *
tiṭam āka ivai aintum aintum vallār * tīviṉaiyai mutal ariya vallār tāme-10

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1097. Kaliyan, a warrior in battles with ability to control strong elephants dripping with ichor, composed ten sweet musical pāsurams on the god of Kadalmallai Thalasayanam who rests on the snake Adisesha on the ocean, killed Hiranyan, the king of the Asurans and went between the marudu trees, angrily killing the Asurans. If devotees learn and recite these ten pāsurams well they will not have the results of their karmā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பட படங்களையுடைய; நாகத்து ஆதிசேஷனில்; அணைக் கிடந்த சயனித்திருப்பவனும்; அன்று முன்பு; அவுணர் கோனை அரக்கர் தலைவன் இரணியனை; பட முடியும்படி; வெகுண்டு சீறினவனும்; மருது மருதமரங்களின்; இடைப்போய் நடுவே தவழ்ந்து சென்றவனும்; பழன நீர் நிலங்களைச்; வேலி சுற்றிலுமுடைத்தாய்; தடம் தடாகங்கள்; ஆர்ந்த நிறைந்த; கடல் மல்லை கடல் மல்லை; தலசயனத்து தலசயனத்தில்; தாமரைக் தாமரைப் போன்ற; கண் கண்களையுடையவன்; துயில் அமர்ந்த துயில் அமர்ந்த; தலைவன் தன்னை எம்பெருமானைக் குறித்து; கடம் ஆரும் மதம் மிக்க பெரிய; கருங்களிறு கருத்த யானையை; வல்லான் நடத்தவல்லவரும்; போர் யுத்தத்திலே; வெல் வெற்றி பெறுமவருமான; கலிகன்றி திருமங்கையாழ்வார்; ஒலிசெய்த அருளிச்செய்த; இன்பப் பாடல் இன்பம் விளைக்கவல்ல; ஐந்தும் ஐந்தும் இப்பத்துப் பாசுரங்களையும்; வல்லார் அர்த்தத்துடன் கற்கவல்லார்; இவை இந்த பாசுரங்களை; திடம் ஆக உறுதியாக ஓதுபவர்கள்; தீவினையை பாவங்களை; தாமே தாங்களே; முதல் அரிய வேரறுக்க; வல்லார் வல்லவராவர்கள்
padam hooded; nāgam thiruvananthāzhwān; aṇai having as mattress; kidandhu one who mercifully reclined; anṛu when prahlādha vowed; avuṇar kŏnai hiraṇya, king of demons; pada to be killed; veguṇdu one who mercifully showed his anger; marudhu idai in between two marudha trees; pŏy one who crawled; pazhanam water bodies; vĕli having all around; thadam by ponds; ārndha filled; kadal mallai in thirukkadalmallai; thala sayanaththu having the ground as his mattress; thāmaraik kaṇ thuyil amarndha one who mercifully rested revealing his lotus-eyed nature; thalaivar thammai on sarvĕṣvaran; kadam ārum very mad; karum kal̤iṛu huge elephant; vallān one who can ride; pŏr in battle; vel one who can win over the enemies; kali kanṛi āzhvār who removed the defects of kali yugam; oli seydha mercifully spoke to have garlands of words; inbam that which causes joy; ivai aindhum aindhu pādalum this decad; vallār those who can learn with meanings; thī vinaiyai sins; thāmĕ on their own; thidamāga certainly; mudhal ariya to remove with the traces; vallār will become capable.