Chapter 2

The Rākshasas sing, dance and praise Lord Rama - (இரக்கம் இன்றி)

பொங்கத்தம் பொங்கோ
The Rākshasas sing, dance and praise Lord Rama - (இரக்கம் இன்றி)
This section is about Lord Rama, the son of Emperor Dasaratha. (Just as a dance is performed to the rhythm of a defeat) It is an honor for the devotees of the Lord to sing of His victories: It is a greater honor for those who consider the Lord their enemy to sing of His victories. The demons defeated in battle sing of Lord Rama's victory and seek refuge + Read more
சக்கரவர்த்தி திருமகன் விஷயம். (தோற்றவர்கள் தோல்வியாலே பறையடிக்க ஆடுவதொரு கூத்து) பகவானின் அடியார்கள் அவனது வெற்றியைப் பாடுவது சிறப்பு: பகவானைத் தமக்கு எதிரியாக நினைப்பவர்கள் அவனது வெற்றியைப் பாடுவது பெருஞ் சிறப்பு. போர்க் களத்தில் தோல்வியுற்ற அரக்கர்கள் இராமபிரானின் வெற்றியைப் பாடி அபயம் வேண்டுதல்போல் அமைந்தது இப்பகுதி). தோற்ற ராக்ஷஸர் பாசுரத்தாலே ராம விஜயத்தைப் பேசி அனுபவிக்கிறார்-என்றார் பெரியவாச்சான் பிள்ளை.
Verses: 1858 to 1867
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will not get affected by the results of karma and go to Vaikuṇṭam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 10.2.1

1858 இரக்கமின்றிஎங்கோன்செய்ததீமை
இம்மையேஎமக்கெய்திற்றுக்காணீர் *
பரக்கயாமின்றுரைத்துஎன்? இராவணன்
பட்டனன் இனியவர்க்கு உரைக்கோம் *
குரக்குநாயகர்காள்! இளங்கோவே!
கோலவல்விலிராமபிரானே! *
அரக்கராடழைப்பாரில்லைநாங்கள்
அஞ்சினோந்தடம்பொங்கத்தம்பொங்கோ. (2)
1858 ## இரக்கம் இன்றி எம் கோன் செய்த தீமை *
இம்மையே எமக்கு எய்திற்றுக் காணீர் *
பரக்க யாம் இன்று உரைத்து என்? இராவணன் *
பட்டனன் இனி யாவர்க்கு உரைக்கோம்? **
குரக்கு நாயகர்காள் இளங்கோவே *
கோல வல் வில் இராமபிரானே *
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை * நாங்கள்
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 1
1858 ## irakkam iṉṟi ĕm koṉ cĕyta tīmai *
immaiye ĕmakku ĕytiṟṟuk kāṇīr *
parakka yām iṉṟu uraittu ĕṉ? irāvaṇaṉ *
paṭṭaṉaṉ iṉi yāvarkku uraikkom? **
kurakku-nāyakarkāl̤ il̤aṅkove *
kola val vil irāmapirāṉe *
arakkar āṭu azhaippār illai * nāṅkal̤
añciṉom-taṭam pŏṅkattam pŏṅko-1

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1858. “Our king was not compassionate and did evil things. Now the result of those evil deeds gives us pain, but what is the use of our saying this now. Rāvanan, our king, was killed. What can we tell about him to others? O chiefs of the monkeys, O young prince! O lord Rāma, with your strong beautiful bow, we are Rākshasas but you have conquered us. Our Rākshasas worry about joining the group of dancers and dancing. We are afraid of you. Thadam pongaththam pongo!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம்கோன் எங்கள் அரசன் இராவணன்; இரக்கம் இன்றி இரக்கம் இல்லாமல்; செய்த தீமை செய்த தீமை; இம்மையே இப்பிறப்பிலேயே; எய்திற்றுக் பலித்துவிட்டது; காணீர் பாருங்கோள்; பரக்க யாம் இன்று இப்போது நாங்கள் விரிவாக; உரைத்து என்? சொல்லி என்ன பயன்?; இராவணன் பட்டனன் ராவணன் வீழ்ந்தான்; இனி யாவர்க்கு இனிமேல் யாரிடம்; உரைக்கோம் கூறுவோம்; குரக்கு நாயகர்காள்! வாநரஸேநாபதிகளே!; இளங்கோவே! இளைய பெருமாளே!; கோல வல் வில் வலிமையான வில்லையுடைய; இராமபிரானே! இராமபிரானே!; அரக்கர் அரக்கர்களில்; ஆடு வெற்றியைப் பெற்றுத்தருகிறோம் என்று; அழைப்பார் கூறி அழைப்பார்; இல்லை நாங்கள் யாருமில்லை நாங்கள்; அஞ்சினோம் பயப்படுகிறோம்; தடம் தோற்ற நாங்கள்; பொங்கத்தம் பொங்கோ பொங்கத்தம் பொங்கோ என்று ஆடுகிற முழக்கத்தைக் கேட்டு சரண் அடைகிறோம்

PT 10.2.2

1859 பத்துநீள்முடியும்அவற்றிரட்டிப்
பாழித்தோளும் படைத்தவன்செல்வம் *
சித்தம்மங்கையர்பால்வைத்துக்கெட்டான்
செய்வதொன்றறியாஅடியோங்கள் *
ஒத்ததோளிரண்டும்ஒருமுடியும்
ஒருவர்தந்திறத்தோமன்றிவாழ்ந்தோம் *
அத்த! எம்பெருமான்! எம்மைக்கொல்லேல்
அஞ்சினேம்தடம்பொங்கத்தம்பொங்கோ.
1859 பத்து நீள் முடியும் அவற்று இரட்டிப் *
பாழித் தோளும் படைத்தவன் செல்வம் *
சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான் *
செய்வது ஒன்று அறியா அடியோங்கள் **
ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் *
ஒருவர் தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் *
அத்த எம் பெருமான் எம்மைக் கொல்லேல் *
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 2
1859 pattu nīl̤ muṭiyum avaṟṟu iraṭṭip *
pāzhit tol̤um paṭaittavaṉ cĕlvam *
cittam maṅkaiyarpāl vaittuk kĕṭṭāṉ *
cĕyvatu ŏṉṟu aṟiyā aṭiyoṅkal̤ **
ŏtta tol̤ iraṇṭum ŏru muṭiyum *
ŏruvar-tam tiṟattom aṉṟi vāzhntom *
atta ĕm pĕrumāṉ ĕmmaik kŏllel *
añciṉom-taṭam pŏṅkattam pŏṅko-2

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1859. “Rāvanan our king with ten heads and twenty mighty arms lost his life and kingdom because he was attracted to Sita. We are his slaves and do not know what to do. You have two arms and wear one crown. We didn't know whom we should serve. O, lord, you are our god. Do not kill us. We are afraid of you. Thadam pongaththam pongo!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பத்து நீள் முடியும் நீண்ட பத்துத் தலைகளையும்; அவற்று இரட்டி அவற்றின் இரட்டிப்பான; பாழித் தோளும் இருபது தோள்களையும்; படைத்தவன் செல்வம் உடைய ராவணன்; மங்கையர் பால் பெண்கள் விஷயத்தில்; சித்தம் வைத்துக் மனம் செலுத்தி; செல்வம் கெட்டான் தன் செல்வத்தை அழித்தான்; செய்வது ஒன்று இனி செய்வது ஒன்றும்; அறியா அடியோங்கள் அறியாத நாங்கள்; ஒத்த தோள் இரண்டும் இரண்டு தோள்களும்; ஒரு முடியும் ஒரு திருமுடியும் உள்ள; ஒருவர் தம் ஒப்பற்ற பெருமானிடம்; திறத்தோம் அன்றி ஈடு படாதவர்களாக; வாழ்ந்தோம் நன்றாகவாழ்ந்தோம் [கெட்டோம்]; அத்த! எங்கள் தந்தையான; எம்பெருமான்! எம் பெருமானே!; எம்மை எங்களை; கொல்லேல் கொல்லாமலிருக்க வேண்டும்; அஞ்சினோம் பயப்படுகிறோம்; தடம் தோற்ற நாங்கள்; பொங்கத்தம் பொங்கோ பொங்கத்தம் பொங்கோ என்று ஆடுகிற முழக்கத்தைக் கேட்டு சரண் அடைகிறோம்

PT 10.2.3

1860 தண்டகாரணியம்புகுந்துஅன்று
தையலைத்தகவிலிஎங்கோமான் *
கொண்டுபோந்துகெட்டான்எமக்குஇங்குஓர்
குற்றமில்லை கொல்லேல்குலவேந்தே! *
பெண்டிரால்கெடும்இக்குடிதன்னைப்
பேசுகின்றதென்? தாசரதீ! * உன்
அண்டவாணர்உகப்பதேசெய்தாய்
அஞ்சினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.
1860 தண்டகாரணியம் புகுந்து * அன்று
தையலைத் தகவிலி எம் கோமான் *
கொண்டுபோந்து கெட்டான் * எமக்கு இங்கு ஓர்
குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே **
பெண்டிரால் கெடும் இக் குடி தன்னைப் *
பேசுகின்றது என்? தாசரதீ * உன்
அண்டவாணர் உகப்பதே செய்தாய் *
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 3
1860 taṇṭakāraṇiyam pukuntu * aṉṟu
taiyalait takavili ĕm komāṉ *
kŏṇṭupontu kĕṭṭāṉ * ĕmakku iṅku or
kuṟṟam illai kŏllel kula vente **
pĕṇṭirāl kĕṭum ik kuṭi-taṉṉaip *
pecukiṉṟatu ĕṉ? tācaratī * uṉ
aṇṭavāṇar ukappate cĕytāy *
añciṉom-taṭam pŏṅkattam pŏṅko-3

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1860. “Our king Rāvanan with evil intentions entered the forest of Dandakāranyam, kidnapped Sita and destroyed himself. We haven't done anything wrong. O Rāma, you are the best of your dynasty! Do not kill us. What can we say about this kingdom that has been dest" royed because of a woman? O son of Dasaratha, you did everything to make the gods in the sky happy. We are afraid of you. Thadam pongaththam pongo!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தகவிலி இரக்கமில்லாத; எம் கோமான் எங்கள் அரசன் ராவணன்; அன்று அன்று; தண்ட காரணியம் தண்ட காரணியம்; புகுந்து தையலை புகுந்து ஸீதையை; கொண்டு அபகரித்து வந்த; போந்து அந்த குற்றத்துக்காக; கெட்டான் இங்கு முடிந்து போனான் இதில்; எமக்கு ஓர் எங்கள்; குற்றம் இல்லை குற்றம் எதுவும் இல்லை; குல வேந்தே இக்ஷ்வாகு வம்சத் தலைவரே!; தாசரதீ! ஸ்ரீராமனே!; கொல்லேல் எங்களைக் கொல்லாதீர்கள்; பெண்டிரால் கெடும் பெண் ஆசையால் அழிந்த; இக்குடி தன்னை இந்த அரக்கர் குலத்தைப் பற்றி; பேசுகின்றது என்? பேசி என்ன பயன்; உன் அண்ட வாணர் நீங்கள் உங்கள் தேவர்கள்; உகப்பதே செய்தாய் உகந்ததைச் செய்தீர்கள்; அஞ்சினோம் பயப்படுகிறோம்; தடம் தோற்ற நாங்கள்; பொங்கத்தம் பொங்கோ பொங்கத்தம் பொங்கோ என்று ஆடுகிற முழக்கத்தைக் கேட்டு சரண் அடைகிறோம்

PT 10.2.4

1861 எஞ்சலில்இலங்கைக்கிறை எங்கோன்தன்னை
முன்பணிந்து * எங்கள்கண்முகப்பே
நஞ்சுதான்அரக்கர்குடிக்கென்று
நங்கையைஅவன்தம்பியேசொன்னான் *
விஞ்சைவானவர்வேண்டிற்றேபட்டோம்
வேரிவார்பொழில்மாமயிலன்ன *
அஞ்சலோதியைக்கொண்டுநடமின்
அஞ்சினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.
1861 எஞ்சல் இல் இலங்கைக்கு இறை * எம் கோன்
தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே *
நஞ்சு தான் அரக்கர் குடிக்கு என்று *
நங்கையை அவன் தம்பியே சொன்னான் **
விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் *
வேரி வார் பொழில் மா மயில் அன்ன *
அஞ்சு அல் ஓதியைக் கொண்டு நடமின் *
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 4
1861 ĕñcal il ilaṅkaikku iṟai * ĕm koṉ
taṉṉai muṉ paṇintu ĕṅkal̤ kaṇmukappe *
nañcu-tāṉ arakkar kuṭikku ĕṉṟu *
naṅkaiyai avaṉ tampiye cŏṉṉāṉ **
viñcai vāṉavar veṇṭiṟṟe paṭṭom *
veri vār pŏzhil mā mayil aṉṉa *
añcu al otiyaik kŏṇṭu naṭamiṉ *
añciṉom-taṭam pŏṅkattam pŏṅko-4

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1861. “The faultless Vibhishanā, Rāvanan’s brother, bowed to our king of Lankā and told him, ‘You are our brother. If you keep Sita, she will be poison for the Rakshasā tribe. We will be destroyed because of the boon that the gods in the sky received from Rāma. Let him go back with the lovely-haired Sita, beautiful as a peacock in a grove dripping with honey. ’ We are afraid of you. Tadam pongaththam pongo!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எஞ்சல் இல் ஒரு குறைவுமில்லாதவனான; இலங்கைக்கு இறை இலங்கை அரசன்; எம் கோன் தன்னை ராவணனை நோக்கி; முன் முன்பு; எங்கள் கண் எங்கள் கண்; முகப்பே எதிரிலேயே; அவன் தம்பியே அவன் தம்பி விபீஷணனே; பணிந்து ராவணன் காலில் விழுந்து; நங்கையை நங்கை ஸீதை; அரக்கர் குடிக்கு அரக்கர் குலத்துக்கு; நஞ்சு தான் என்று நஞ்சு தான் என்று; சொன்னான் சொன்னான்; விஞ்சை வித்யாதரர் முதலான; வானவர் தேவர்கள்; வேண்டிற்றே விரும்பியபடியே நாங்கள்; பட்டோம் கெட்டோம்; வேரி வார் மணம் மிக்க; பொழில் சோலையில் வளர்ந்த; மா மயில் அன்ன சிறந்த மயில் போன்றவளும்; அஞ்சு அல் இரவு போன்ற கறுத்த; ஓதியை கூந்தலையுடைய ஸீதையை; கொண்டு நடமின் அழைத்துச் செல்லுங்கள்; அஞ்சினோம் பயப்படுகிறோம்; தடம் தோற்ற நாங்கள்; பொங்கத்தம் பொங்கோ பொங்கத்தம் பொங்கோ என்று ஆடுகிற முழக்கத்தைக் கேட்டு சரண் அடைகிறோம்

PT 10.2.5

1862 செம்பொன்நீள்முடிஎங்களிராவணன்
சீதையென்பதோர்தெய்வம்கொணர்ந்து *
வம்புலாம்கடிகாவில்சிறையா
வைத்ததே குற்றமாயிற்றுக்காணீர் *
கும்பனோடுநிகும்பனும்பட்டான்
கூற்றம்மானிடமாய்வந்துதோன்றி *
அம்பினால்எம்மைக்கொன்றிடுகின்றது
அஞ்சினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.
1862 செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன் *
சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து *
வம்பு உலாம் கடி காவில் சிறையா
வைத்ததே * குற்றம் ஆயிற்றுக் காணீர் **
கும்பனோடு நிகும்பனும் பட்டான் *
கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி *
அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது *
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 5
1862 cĕmpŏṉ nīl̤ muṭi ĕṅkal̤ irāvaṇaṉ *
cītai ĕṉpatu or tĕyvam kŏṇarntu *
vampu ulām kaṭi kāvil ciṟaiyā
vaittate * kuṟṟam āyiṟṟuk kāṇīr **
kumpaṉoṭu nikumpaṉum paṭṭāṉ *
kūṟṟam māṉiṭamāy vantu toṉṟi *
ampiṉāl ĕmmaik kŏṉṟiṭukiṉṟatu *
añciṉom-taṭam pŏṅkattam pŏṅko-5

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1862. “Our king Rāvanan adorned with golden crowns kidnapped the goddess Sita and imprisoned her in a fragrant garden swarming with bees. See, this was wrong. Kumbakarnan and Nikumban have been killed in battle. Yama came in the form of a man and killed us with arrows. We are afraid. Tadam pongaththam pongo!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செம் பொன் செம்பொன்னால் செய்யப்பட்ட; நீள் முடி நீண்ட கிரீடத்தை யுடைய; எங்கள் இராவணன் எங்கள் இராவணன்; சீதை என்பது ஓர் சீதை என்பது ஓர்; தெய்வம் தெய்வத்தை; கொணர்ந்து கொண்டுவந்து; வம்பு உலாம் பரிமளம் நிறைந்த; கடி அசோகவனத்தில்; காவில் சிறையா காவலில் சிறை; வைத்ததே வைத்ததே; குற்றம் பெரும் குற்றம்; ஆயிற்றுக் ஆயிற்று; காணீர் காணீர் அதுவே காரணமாக; கும்பனோடு கும்பனோடு; நிகும்பனும் நிகும்பனும்; பட்டான் அழிந்து போனார்கள்; கூற்றம் யமனானவன்; மானிடமாய் மானிடனாய்; வந்து தோன்றி வந்து தோன்றி; அம்பினால் அம்புகளால்; எம்மை எங்களை; கொன்றிடுகின்றது கொல்லுகிறான்; அஞ்சினோம் பயப்படுகிறோம்; தடம் தோற்ற நாங்கள்; பொங்கத்தம் பொங்கோ பொங்கத்தம் பொங்கோ என்று ஆடுகிற முழக்கத்தைக் கேட்டு சரண் அடைகிறோம்

PT 10.2.6

1863 ஓதமாகடலைக்கடந்தேறி
உயர்கொள்மாக்கடிகாவையிறுத்து *
காதல்மக்களும்சுற்றமும்கொன்று
கடியிலங்கைமலங்கஎரித்து *
தூதுவந்தகுரங்குக்கே உங்கள்
தோன்றல்தேவியைவிட்டுகொடாதே *
ஆதர்நின்றுபடுகின்றதுஅந்தோ!
அஞ்சினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.
1863 ஓத மா கடலைக் கடந்து ஏறி *
உயர்கொள் மாக் கடி காவை இறுத்து *
காதல் மக்களும் சுற்றமும் கொன்று *
கடி இலங்கை மலங்க எரித்து **
தூது வந்த குரங்குக்கே * உங்கள்
தோன்றல் தேவியை விட்டுக் கொடாதே *
ஆதர் நின்று படுகின்றது அந்தோ *
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 6
1863 ota mā kaṭalaik kaṭantu eṟi *
uyarkŏl̤ māk kaṭi kāvai iṟuttu *
kātal makkal̤um cuṟṟamum kŏṉṟu *
kaṭi ilaṅkai malaṅka ĕrittu **
tūtu vanta kuraṅkukke * uṅkal̤
toṉṟal teviyai viṭṭuk kŏṭāte *
ātar niṉṟu paṭukiṉṟatu anto *
añciṉom-taṭam pŏṅkattam pŏṅko-6

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1863. “The monkey Hanuman, your messenger, crossed the roaring ocean and destroyed beautiful Lankā and our dear families and relatives. He burned our Lankā guarded with forts. Our king did not give back the divine Sita to his messenger the heroic monkey Hanuman and now we suffer because of that. Alas! We are afraid. Tadam pongaththam pongo!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓத மா கடலை அலையெறிகிற பெரிய கடலை; கடந்து ஏறி கடந்து அக்கரை அடைந்து; உயர் கொள் உயர்ந்த; மாக் கடி அழகிய மணம்மிக்க; காவை இறுத்து அசோகவனத்தை முறித்து; காதல் ராவணனின் அன்பு; மக்களும் குமாரர்களையும்; சுற்றமும் அந்தரங்கமானவர்களையும்; கொன்று கொன்று; கடி இலங்கை காவலையுடைய இலங்கையை; மலங்க எரித்து கலங்கடித்து எரித்து; தூது வந்த தூதனாக வந்த; குரங்குக்கே உங்கள் அனுமனிடம் தங்கள்; தோன்றல் தேவியை தேவியான ஸீதையை; விட்டு கொடாதே விட்டுக் கொடுக்காததால்; ஆதர் அறிவற்றவர்களான நாங்கள்; நின்று படுகின்றது இப்படி துன்பப்படுகிறோம்; அந்தோ! அந்தோ!; அஞ்சினோம் பயப்படுகிறோம்; தடம் தோற்ற நாங்கள்; பொங்கத்தம் பொங்கோ பொங்கத்தம் பொங்கோ என்று ஆடுகிற முழக்கத்தைக் கேட்டு சரண் அடைகிறோம்

PT 10.2.7

1864 தாழமின்றிமுந்நீரைஅஞ்ஞான்று
தகைந்ததேகண்டு, வஞ்சிநுண்மருங்குல் *
மாழைமான்மடநோக்கியைவிட்டு
வாழ்கிலாமதியில்மனத்தானை *
ஏழையைஇலங்கைக்கிறைதன்னை
எங்களையொழியக்கொலைஅவனை *
சூழுமாநினை, மாமணிவண்ணா!
சொல்லினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.
1864 தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று *
தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல் *
மாழை மான் மட நோக்கியை விட்டு *
வாழகில்லா மதி இல் மனத்தானை **
ஏழையை இலங்கைக்கு இறை தன்னை *
எங்களை ஒழியக் கொலையவனை *
சூழுமா நினை மா மணி வண்ணா *
சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 7
1864 tāzham iṉṟi munnīrai aññāṉṟu *
takaintate kaṇṭu vañci nuṇ maruṅkul *
māzhai māṉ maṭa nokkiyai viṭṭu *
vāzhakillā mati il maṉattāṉai **
ezhaiyai ilaṅkaikku iṟai-taṉṉai *
ĕṅkal̤ai ŏzhiyak kŏlaiyavaṉai *
cūzhumā niṉai mā maṇi vaṇṇā *
cŏlliṉom-taṭam pŏṅkattam pŏṅko-7

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1864. “You have the color of a precious jewel! Our poor Rāvana, king of Lankā, could not forget the beautiful thin-waisted Sita with a glance soft as a doe’s. He thought he could not even live without her. Rāvana, our chief of Lankā, is pitiful! Kill only the king of Lankā and leave us. O sapphire-colored lord, we come here all together and bow to you. We have told you what we want. Tadam pongaththam pongo!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா மணி நீலமணி நிறமுடைய; வண்ணா! பெருமானே!; தாழம் இன்றி காலதாமதமில்லாமல்; முந்நீரை கடலை; அஞ்ஞான்று அன்றைக்கு; தகைந்தே அணை கட்டியதை; கண்டு கண்டே; வஞ்சி வஞ்சிக் கொடி போன்ற; நுண் மருங்குல் நுண்ணிய இடையுடைய; மாழை பேதைமைக் குணமுள்ள; மான் மட மான் போன்ற; நோக்கியை பார்வையையுடைய ஸீதையை; விட்டு தங்களிடம் ஒப்படைத்துவிட்டு; வாழகில்லா வாழத்தெரியாத; மதியில் மதிகெட்ட திமிர்த்த; மனத்தானை ஏழையை மனதையுடையவனை; இலங்கைக்கு இறை தன்னை ராவணனை; எங்களை குற்றமற்ற எங்களை; ஒழிய தவிர்த்து; கொலையவனை கொல்லவேண்டும் என்று; சூழுமா நாங்கள் சூழ்ந்து கொண்டு பிரார்த்திப்பதை; நினை நினைத்து; அஞ்சினோம் பயப்படுகிறோம்; தடம் தோற்ற நாங்கள்; பொங்கத்தம் பொங்கோ பொங்கத்தம் பொங்கோ என்று ஆடுகிற முழக்கத்தைக் கேட்டு சரண் அடைகிறோம்

PT 10.2.8

1865 மனங்கொண்டேறும்மண்டோதரிமுதலா
அங்கயற்கண்ணினார்கள்இருப்ப *
தனங்கொள்மென்முலைநோக்கமொழிந்து
தஞ்சமேசிலதாபதரென்று *
புனங்கொள்மென்மயிலைச்சிறைவைத்த
புன்மையாளன்நெஞ்சில்புகவெய்த *
அனங்கனன்னதிண்தோளெம்மிராமற்கு
அஞ்சினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.
1865 மனம் கொண்டு ஏறும் மண்டோதரி முதலா *
அம் கயல் கண்ணினார்கள் இருப்ப *
தனம்கொள் மென் முலை நோக்கம் ஒழிந்து *
தஞ்சமே சில தாபதர் என்று **
புனம்கொள் மென் மயிலைச் சிறைவைத்த *
புன்மையாளன் நெஞ்சில் புக எய்த *
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு *
அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 8
1865 maṉam kŏṇṭu eṟum maṇṭotari mutalā *
am kayal kaṇṇiṉārkal̤ iruppa *
taṉamkŏl̤ mĕṉ mulai nokkam ŏzhintu *
tañcame cila tāpatar ĕṉṟu **
puṉamkŏl̤ mĕṉ mayilaic ciṟaivaitta *
puṉmaiyāl̤aṉ nĕñcil puka ĕyta *
aṉaṅkaṉ aṉṉa tiṇ tol̤ ĕm irāmaṟku *
añciṉom-taṭam pŏṅkattam pŏṅko-8

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1865. “Rāvana had many fish-eyed soft-breasted wives in Lankā. Among them was Mandodari who loved him but he was not attracted to any of them— he thought Rāma and his people were only sages wandering in the forest. He kidnapped Sita, as beautiful as a forest peacock, and kept her in Lankā, and Rāma, handsome as Kāma, shot arrows with his strong arms into the chest of terrible Rāvana. We are afraid. Tadam pongaththam pongo!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மனம் கொண்டு மனம் கவரும்படி; ஏறும் அழகுடைய; மண்டோதரி முதலா மண்டோதரி முதலிய; அம் கயல் அழகிய மீன் போன்ற; கண்ணினார்கள் கண்களையுடைய மனைவியர் பலர்; இருப்ப இருக்கச் செய்தேயும்; தனம்கொள் தனக்குச் செல்வமாயிருக்கும்; மென்முலை அவர்களின் மார்பகங்களை; நோக்கம் ஒழிந்து அனுபவிப்பதை ஒழித்து; தஞ்சமே ஸீதா தேவிக்கு; சில தஞ்சமளிப்பவர் சில; தாபதர் என்று தபஸ்விகளே என்று கருதி; புனம்கொள் காட்டிலிருக்கும்; மென் மயிலை அழகிய மயில் போன்ற ஸீதையை; சிறை வைத்த சிறை வைத்த; புன்மையாளன் நீசனான இராவணனின்; நெஞ்சில் நெஞ்சிலே; புக எய்த அம்பு எய்ய வல்ல; அனங்கன் அன்ன மன்மதனோ என்னும்படி; திண் வலிமைமிக்க; தோள் தோள்களையுடைய; எம் இராமற்கு எம் இராமற்கு; அஞ்சினோம் பயப்படுகிறோம்; தடம் தோற்ற நாங்கள்; பொங்கத்தம் பொங்கோ பொங்கத்தம் பொங்கோ என்று ஆடுகிற முழக்கத்தைக் கேட்டு சரண் அடைகிறோம்

PT 10.2.9

1866 புரங்கள்மூன்றும்ஓர்மாத்திரைப்போதில்
பொங்கெரிக்குஇரைகண்டவனம்பின் *
சரங்களேகொடிதாய்அடுகின்ற
சாம்பவான்உடன்நிற்கத்தொழுதோம் *
இரங்குநீஎமக்குஎந்தைபிரானே!
இலங்குவெங்கதிரோன்றன்சிறுவா! *
குரங்குகட்கரசே! எம்மைக்கொல்லேல்
கூறினோம்தடம்பொங்கத்தம்பொங்கோ.
1866 புரங்கள் மூன்றும் ஓர் மாத்திரைப் போதில் *
பொங்கு எரிக்கு இரை கண்டவன் அம்பின் *
சரங்களே கொடிது ஆய் அடுகின்ற *
சாம்பவான் உடன் நிற்கத் தொழுதோம் **
இரங்கு நீ எமக்கு எந்தை பிரானே *
இலங்கு வெம் கதிரோன் தன் சிறுவா *
குரங்குகட்கு அரசே எம்மைக் கொல்லேல் *
கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 9
1866 puraṅkal̤ mūṉṟum or māttiraip potil *
pŏṅku ĕrikku irai kaṇṭavaṉ ampiṉ *
caraṅkal̤e kŏṭitu āy aṭukiṉṟa *
cāmpavāṉ uṭaṉ niṟkat tŏzhutom **
iraṅku nī ĕmakku ĕntai pirāṉe *
ilaṅku vĕm katiroṉ-taṉ ciṟuvā *
kuraṅkukaṭku arace ĕmmaik kŏllel *
kūṟiṉom-taṭam pŏṅkattam pŏṅko-9

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1866. “Shivā shot his arrows and burned the three forts in the blink of an eye. Like Shivā, Sambhavan shot cruel arrows and killed the Rākshasas. We bow to you. Have pity on us. You are our father, our lord. O, Sugriva, you are the son of the hot, shining sun. You are the king of the monkeys. Do not kill us. We bow to you. Tadam pongaththam pongo!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஓர் மாத்திரை ஒரு கண்ணிமை; போதில் பொழுதில்; புரங்கள் மூன்றும் முப்புரங்களையும்; பொங்கு எரிக்கு அக்னி ஜ்வாலைக்கு; இரை கண்டவன் இரையாக்கின ருத்ரனுடைய; அம்பின் அம்புகளைக் காட்டிலும்; சரங்களே இந்த ராமபாணங்கள்; கொடிதாய் கொடியவைகளாய்; அடுகின்ற துன்புறுத்துகின்றன; சாம்பவான் ஜாம்பவான்; உடன் நிற்கத் உடன் நிற்க; தொழுதோம் வணங்குகின்றோம்; எந்தை பிரானே! எங்கள் நாயகனே!; இலங்கு வெம் ஒளியுள்ள வெப்பமான; கதிரோன் தன் ஸூர்யனின்; சிறுவா! புதல்வனே! ஸுக்ரீவனே!; குரங்குகட்கு அரசே! குரங்குகளுக்கு அரசே!; எமக்கு எங்கள் விஷயத்திலே; இரங்கு நீ நீ இரங்கி அருள வேண்டும்; எம்மை எங்களை; கொல்லேல் கொல்லாதிருப்பீர்; கூறினோம் என்று கெஞ்சி; தடம் தோற்ற நாங்கள்; பொங்கத்தம் பொங்கோ பொங்கத்தம் பொங்கோ என்று ஆடுகிற முழக்கத்தைக்கேட்டு சரண் அடைகிறோம்

PT 10.2.10

1867 அங்கு (அவ்)வானவர்க்குஆகுலம்தீர
அணியிலங்கையழித்தவன்தன்னை *
பொங்குமாவலவன்கலிகன்றி
புகன்றபொங்கத்தம்கொண்டு * இவ்வுலகில்
எங்கும்பாடிநின்றுஆடுமின்தொண்டீர்!
இம்மையேஇடரில்லை * இறந்தால்
தங்குமூர் அண்டமேகண்டுகொண்மின்
சாற்றினோம்தடம் பொங்கத்தம்பொங்கோ. (2)
1867 ## அங்கு அவ் வானவர்க்கு ஆகுலம் தீர *
அணி இலங்கை அழித்தவன் தன்னை *
பொங்கு மா வலவன் கலிகன்றி *
புகன்ற பொங்கத்தம் கொண்டு ** இவ் உலகில்
எங்கும் பாடி நின்று ஆடுமின் தொண்டீர் *
இம்மையே இடர் இல்லை * இறந்தால்
தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்மின் *
சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ 10
1867 ## aṅku av vāṉavarkku ākulam tīra *
aṇi ilaṅkai azhittavaṉ-taṉṉai *
pŏṅku mā valavaṉ kalikaṉṟi *
pukaṉṟa pŏṅkattam kŏṇṭu ** iv ulakil
ĕṅkum pāṭi niṉṟu āṭumiṉ tŏṇṭīr *
immaiye iṭar illai * iṟantāl
taṅkum ūr aṇṭame kaṇṭu kŏl̤miṉ *
cāṟṟiṉom-taṭam pŏṅkattam pŏṅko-10

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1867. Kaliyan the strong one, composed pāsurams on Rāma who destroyed beautiful Lankā to relieve the affliction of the gods in the sky. O devotees, if you sing “Tadam pongaththam pongo!” and dance, there will be no troubles for you in this birth, and if you go away from this world, you will go only to the spiritual world. Let us sing, “Thadam pongaththam pongo!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொண்டீர்! பக்தர்களே!; அங்கு அவ் வானவர்க்கு தேவர்களுக்கு; ஆகுலம் தீர மனக்குழப்பம் தீரும்படி; அணி அழகிய; இலங்கை லங்காபுரியை; அழித்தவன் அழித்த; தன்னை பெருமானைக் குறித்து; பொங்கு மா ஆடல்மா என்னும் குதிரையை; வலவன் நடத்த வல்லவரான; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; புகன்ற அருளிச்செய்த; பொங்கத்தம் பொங்கத்தம்; கொண்டு இவ் என்ற இந்த வெற்றிப் பாசுரங்களை; உலகினில் உலகினில்; எங்கும் பாடி நின்று எங்கும் பாடிக்கொண்டும்; ஆடுமின் ஆடிக் கொண்டும் இருப்பவர்களுக்கு; இம்மையே இப்பிறவியில்; இடர் இல்லை இடர் இல்லை; இறந்தால் தங்கும் இறந்தால் தங்கும் இடம்; ஊர் அண்டமே பரமபதமே; கண்டு கொண்மின் என்று கண்டு கொள்ளுங்கள்; சாற்றினோம் என்று அனைவரும் அறியச் சொன்னோம்; பொங்கத்தம் பொங்கோ பொங்கத்தம் பொங்கோ என்று ஆடுகிற முழக்கத்தைக் கேட்டு சரண் அடைகிறோம்