Your browser does not support the audio element.
audio
1868 ஏத்துகின்றோம்நாத்தழும்ப இராமன்திருநாமம் *
சோத்தநம்பீ! சுக்கிரீவா! உம்மைத்தொழுகின்றோம் *
வார்த்தைபேசீர்எம்மை உங்கள்வானரம்கொல்லாமே *
கூத்தர்போலஆடுகின்றோம் குழமணிதூரமே. (2)
1869 எம்பிரானே! என்னையாள்வாய்! என்றென்றுஅலற்றாதே *
அம்பின்வாய்ப்பட்டாற்றகில்லாது இந்திரசித்தழிந்தான் *
நம்பிஅநுமா! சுக்கிரீவ! அங்கதனே! நளனே! *
கும்பகர்ணன்பட்டுப்போனான் குழமணிதூரமே.
1870 ஞாலமாளும்உங்கள்கோமான் எங்களிராவணற்கு *
காலனாகிவந்தவாகண்டு அஞ்சிக்கருமுகில்போல் *
நீலன்வாழ்கசுடேணன்வாழ்க அங்கதன்வாழ்கவென்று *
கோலமாகஆடுகின்றோம் குழமணிதூரமே.
1871 மணங்கள்நாறும்வார்குழலார் மாதர்களாதரத்தை *
புணர்ந்தசிந்தைப்புன்மையாளன் பொன்றவரிசிலையால் *
கணங்களுண்ணவாளியாண்ட காவலனுக்கிளையோன் *
குணங்கள்பாடிஆடுகின்றோம் குழமணிதூரமே.
1872 வென்றிதந்தோம்மானம்வேண்டோம் தானம்எமக்காக *
இன்றுதம்மின்எங்கள்வாணாள் எம்பெருமான்தமர்காள்! *
நின்றுகாணீர்கண்களார நீர்எம்மைக்கொல்லாதே *
குன்றுபோலஆடுகின்றோம் குழமணிதூரமே.
1873 கல்லின்முந்நீர்மாற்றிவந்து காவல்கடந்து * இலங்கை
அல்லல்செய்தான்உங்கள்கோமான் எம்மைஅமர்க்களத்து *
வெல்லகில்லாதுஅஞ்சினோங்காண் வெங்கதிரோன்சிறுவா! *
கொல்லவேண்டாஆடுகின்றோம் குழமணிதூரமே.
1874 மாற்றமாவதுஇத்தனையே வம்மின்அரக்கருள்ளீர்! *
சீற்றம்நும்மேல்தீரவேண்டில் சேவகம்பேசாதே *
ஆற்றல்சான்றதொல்பிறப்பில் அநுமனைவாழ்கவென்று *
கூற்றமன்னார்காண ஆடீர் குழமணிதூரமே.
1875 கவளயானைபாய்புரவி தேரோடரக்கரெல்லாம்
துவள * வென்றவென்றியாளன்தன் தமர்கொல்லாமே *
தவளமாடம்நீடயோத்திக் காவலன்தன்சிறுவன் *
குவளைவண்ணன்காண ஆடீர் குழமணிதூரமே.
1876 ஏடொத்தேந்தும்நீளிலைவேல் எங்களிராவணனார்
ஓடிப்போனார் * நாங்கள்எய்த்தோம் உய்வதோர்காரணத்தால் *
சூடிப்போந்தோம்உங்கள்கோமானாணை தொடரேன்மின் *
கூடிக்கூடிஆடுகின்றோம் குழமணிதூரமே.
1877 வென்றதொல்சீர்த்தென்னிலங்கை வெஞ்சமத்து * அன்றரக்கர்
குன்றமன்னார்ஆடியுய்ந்த குழமணிதூரத்தை *
கன்றிநெய்ந்நீர்நின்றவேற்கைக் கலியனொலிமாலை *
ஒன்றுமொன்றுமைந்தும்மூன்றும் பாடிநின்றாடுமினே. (2)