PT 1.7.1

புனிதன் வாழுமிடம் சிங்கவேள் குன்றம்

1008 அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் * அவுணன்
பொங்கஆகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம் *
பைங்கணானைக்கொம்புகொண்டு பத்திமையால் * அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள்குன்றமே.
PT.1.7.1
1008. ##
angkaN NYālamaNYcha * angkOrāLariyāy *
avuNan pongkavāgam vaLLugirāl * pOzhnNdha punidhanidam *
paingkaNānaik kombukoNdu * patthimaiyāl *
adikkeezhch chengkaNāLiyittiRaiNYchum * singkavELkunRamE. 1.7.1

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1008. Our god who became angry at Hiranyan, went to him as a man-lion and with his sharp claws split open the chest of the Asuran making the people of this wide world frightened to see him stays in Singavelkundram (Ahobilam) where red-eyed ālis bring the ivory of elephants, place it in front of him with devotion and worship him.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்கு ப்ரஹ்லாதன் பிரதிக்ஞை பண்ணின இடத்தில்; அம் கண் அழகிய விசாலமான; ஞாலம் பூமிலுள்ளோர் எல்லாரும்; அஞ்ச ஓர் அஞ்சும்படி தோன்றிய; ஆள்அரி ஆய் நரசிம்மனை பார்த்து; அவுணன் பொங்க இரணியன் பொங்கி எழ; ஆகம் அவனது உடலை; வள் உகிரால் கூர்மையான நகங்களாலே; போழ்ந்த பிளந்த இடம்; புனிதன் இடம் புனிதன் இருக்கும் இடம்; செங் கண் சிவந்த கண்களையுடைய; ஆளி சிங்கங்களானவை; பைங்கண் அழகிய கண்களையுடைய; ஆனை யானைகளின்; கொம்பு கொண்டு தந்தங்களைக் கொணடு வந்து; பத்திமையால் பக்தியோடு; அடிக்கீழ் பகவானின் திருவடிகளில்; இட்டு இறைஞ்சும் ஸமர்ப்பித்து வணங்கும்; சிங்கவேள்குன்றமே அஹோபிலமென்கிற சிங்க வேள்குன்றம்
angu In that place where prahlAdha vowed; am beautiful; kaN spacious; gyAlam whole world; anja to fear; Or novel; AL ariyAy in the form of narasimha (as he appeared, seeing that); avuNan hiraNya, the demon; ponga to arouse; Agam (his) body; vaL ugirAl with sharp, divine nail; pOzhndha split and thrown; punidhan the pure sarvESvaran (residing); idam the abode is; sem kaN having reddish eyes; ALi lions; pai greenish; kaN having eyes; Anai elephants-; kombu tusks; koNdu grabbing; paththimaiyAl due to bhagavath bhakthi; adik kIzh at the divine feet; ittu offering; iRainjum surrendering; singavEL kunRam singavEL kunRam.