Chapter 7

Singavelkundram (Ahobilam) - (அம் கண்)

சிங்கவேழ்குன்றம்
Singavelkundram (Ahobilam) - (அம் கண்)
Singam-Vel-Kundram is the hill where Lord Narasimha resides. Everyone refers to this place as Ahobilam. It is not easy for anyone to climb this hill and worship Lord Narasimha. Those who do worship this Lord will live without any evil.
சிங்கம்-வேல்-குன்றம். நரசிம்மப் பெருமான் எழுந்தருளியுள்ள மலை. அனைவரும் இந்த இடத்தை அகோபிலம் என்றே கூறுகின்றனர். எவரும் இம்மலைமீது எளிதில் ஏறி நரசிம்மனை ஸேவிக்கமுடியாது. இந்த எம்பெருமானை ஸேவிப்பவர் தீமை இன்றி வாழ்வர்.
Verses: 1008 to 1017
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: நைவளம்
Recital benefits: Will approach the feet of the Lord
  • PT 1.7.1
    1008 ## அம் கண் ஞாலம் அஞ்ச * அங்கு ஓர் ஆள் அரி ஆய் * அவுணன்
    பொங்க ஆகம் வள் உகிரால் * போழ்ந்த புனிதன் இடம் **
    பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு * பத்திமையால் * அடிக்கீழ்ச்
    செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் * சிங்கவேள்குன்றமே 1
  • PT 1.7.2
    1009 அலைத்த பேழ் வாய் * வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் * அவுணன்
    கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த * கூர் உகிராளன் இடம் **
    மலைத்த செல் சாத்து எறிந்த பூசல் * வன் துடி வாய் கடுப்ப *
    சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத * சிங்கவேள்குன்றமே 2
  • PT 1.7.3
    1010 ஏய்ந்த பேழ் வாய் * வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் * அவுணன்
    வாய்ந்த ஆகம் வள் உகிரால் * வகிர்ந்த அம்மானது இடம் **
    ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும் * அன்றியும் நின்று அழலால் *
    தேய்ந்த வேயும் அல்லது இல்லாச் * சிங்கவேள்குன்றமே 3
  • PT 1.7.4
    1011 எவ்வும் வெவ் வேல் பொன்பெயரோன் * ஏதலன் இன் உயிரை
    வவ்வி * ஆகம் வள் உகிரால் * வகிர்ந்த அம்மானது இடம் **
    கவ்வும் நாயும் கழுகும் * உச்சிப்போதொடு கால் சுழன்று *
    தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் * சிங்கவேள்குன்றமே 4
  • PT 1.7.5
    1012 மென்ற பேழ்வாய் * வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் * அவுணன்
    பொன்ற ஆகம் வள் உகிரால் * போழ்ந்த புனிதன் இடம் **
    நின்ற செந்தீ மொண்டு சூறை * நீள் விசும்பூடு இரிய *
    சென்று காண்டற்கு அரிய கோயில் * சிங்கவேள்குன்றமே 5
  • PT 1.7.6
    1013 எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய் * எயிற்றொடு இது எவ் உரு என்று *
    இரிந்து வானோர் கலங்கி ஓட * இருந்த அம்மானது இடம் **
    நெரிந்த வேயின் முழையுள் நின்று * நீள் நெறிவாய் உழுவை *
    திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும் * சிங்கவேள்குன்றமே 6
  • PT 1.7.7
    1014 முனைத்த சீற்றம் விண் சுடப் போய் * மூவுலகும் பிறவும் *
    அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய் * இருந்த அம்மானது இடம் **
    கனைத்த தீயும் கல்லும் அல்லா * வில் உடை வேடரும் ஆய் *
    தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் * சிங்கவேள்குன்றமே 7
  • PT 1.7.8
    1015 நாத் தழும்ப நான்முகனும் * ஈசனும் ஆய் முறையால்
    ஏத்த * அங்கு ஓர் ஆள் அரி ஆய் * இருந்த அம்மானது இடம் **
    காய்த்த வாகை நெற்று ஒலிப்பக் * கல் அதர் வேய்ங்கழை போய் *
    தேய்த்த தீயால் விண் சிவக்கும் * சிங்கவேள்குன்றமே 8
  • PT 1.7.9
    1016 நல்லை நெஞ்சே நாம் தொழுதும் * நம்முடை நம் பெருமான் *
    அல்லிமாதர் புல்க நின்ற * ஆயிரந் தோளன் இடம் **
    நெல்லி மல்கிக் கல் உடைப்பப் * புல் இலை ஆர்த்து * அதர்வாய்ச்
    சில்லி சில் என்று ஒல் அறாத * சிங்கவேள்குன்றமே 9
  • PT 1.7.10
    1017 ## செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும் * சிஙகவேள்குன்று உடைய *
    எங்கள் ஈசன் எம் பிரானை * இருந் தமிழ் நூல் புலவன் **
    மங்கை ஆளன் மன்னு தொல் சீர் * வண்டு அரை தார்க் கலியன் *
    செங்கையாளன் செஞ்சொல் மாலை * வல்லவர் தீது இலரே 10