Chapter 3

Yashoda calls Kannan to come to pierce his ears - (போய்ப்பாடு உடைய)

காது குத்தல்
Yashoda calls Kannan to come to pierce his ears - (போய்ப்பாடு உடைய)
One of the actions of little children is showing insects. Similarly, Krishna is playing by showing an insect. The Gopis delight in the child's antics. The āzhvār, overwhelmed by devotion, experiences and enjoys this play as if witnessing it directly.
சிறு குழந்தைகளின் செயல்களுள் பூச்சி காட்டுதல் ஒன்று. அவ்வாறு கண்ணனும் பூச்சி காட்டி விளையாடுகிறான். கோபியர்கள் குழந்தையின் செயலைக் கண்டு களிக்கிறார்கள். ஆழ்வாரும் பக்தியின் மேலீட்டால் அவ்விளையாட்டை நேரில் கண்டு மகிழ்வதுபோல் அனுபவித்து இன்பமடைகிறார்.
Verses: 139 to 151
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will always be devotees of Achudan
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PAT 2.3.1

139 போய்ப்பாடுடையநின்தந்தையும்தாழ்த்தான்
பொருதிறல்கஞ்சன்கடியன் *
காப்பாருமில்லைகடல்வண்ணா! உன்னைத்
தனியேபோய்எங்கும்திரிதி *
பேய்ப்பால்முலையுண்டபித்தனே!
கேசவநம்பீ! உன்னைக்காதுகுத்த *
ஆய்ப்பாலர்பெண்டுகளெல்லாரும்வந்தார்
அடைக்காய்திருத்திநான்வைத்தேன். (2)
139 ## போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான் * பொரு திறல் கஞ்சன் கடியன் *
காப்பாரும் இல்லை கடல்வண்ணா உன்னைத் * தனியே போய் எங்கும் திரிதி **
பேய்ப்பால் முலை உண்ட பித்தனே * கேசவ நம்பீ உன்னைக் காது குத்த *
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் * அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (1)
139 ## poyppāṭu uṭaiya niṉ tantaiyum tāzhttāṉ * pŏru tiṟal kañcaṉ kaṭiyaṉ *
kāppārum illai kaṭalvaṇṇā uṉṉait * taṉiye poy ĕṅkum tiriti **
peyppāl mulai uṇṭa pittaṉe * kecava nampī uṉṉaik kātu kutta *
āyp pālar pĕṇṭukal̤ ĕllārum vantār * aṭaikkāy tirutti nāṉ vaitteṉ (1)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

139. Your father has not yet returned home. Kamsan, the strong, brave fighter is angry with you. You, with your beautiful blue ocean-colored body, wander around everywhere alone. and there is no one to protect you from him. You, the crazy one, drank milk from the devil Putanā's breasts. O Kesava! All the cowherd women have gathered here for your ear boring ceremony. I have prepared betel leaves and nuts to give them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
போய்ப்பாடு உடைய வெளியே சென்றுள்ள; நின் தந்தையும் உன் தகப்பனும்; தாழ்த்தான் இன்னும் வராமல் காலம் தாழ்த்துகிறான்; பொரு திறல் போர்த்திறமையையுடைய; கஞ்சன் கம்சன் உன்னிடம்; கடியன் கடுமை கொண்டுள்ளான்; கடல்வண்ணா! கடல் நிறக் கண்ணனே!; காப்பாரும் நம்மை காப்பவர்; இல்லை யாரும் இல்லை நீயோவெனில்; தனியே போய் தனியாகப் போய்; எங்கும் திரிதி எங்கும் திரிகிறாய்; பேய்ப் பால் முலை பூதனை எனும் பேயின் பாலைப்; உண்ட பித்தனே! பருகினவனே!; கேசவ நம்பீ! கேசவ பிரானே!; உன்னைக் காது குத்த உன் காதில் துளையிட; ஆய்ப் பாலர் ஆயர்பாடி சிறுவர்களும்; பெண்டுகள் பெண்கள்; எல்லாரும் வந்தார் எல்லாரும் வந்துள்ளர்கள்; அடைக்காய் திருத்தி வெற்றிலை பாக்குகளை; நான் வைத்தேன் ஆய்ந்து தயாராக வைத்திருக்கிறேன்
niṉ tantaiyum Your father; tāḻttāṉ and is yet to come; kañcaṉ Kamsan; pŏru tiṟal the war fighter; kaṭiyaṉ is angry with You; kaṭalvaṇṇā! Oh blue ocean colored Kannan!; kāppārum to protect us; illai there is no one; taṉiye poy You have gone out alone; ĕṅkum tiriti and wander around; uṇṭa pittaṉe! You drank!; peyp pāl mulai the milk of the devil Putana; kecava nampī! Oh Keshava!; uṉṉaik kātu kutta for Your ear piercing ceremony; āyp pālar the children of Aiyarpadi and; pĕṇṭukal̤ the women; ĕllārum vantār have come; aṭaikkāy tirutti I have kept the betel leaves and nuts; nāṉ vaitteṉ examined and ready; poyppāṭu uṭaiya has gone outside

PAT 2.3.2

140 வண்ணப்பவளமருங்கினில்சாத்தி
மலர்ப்பாதக்கிங்கிணியார்ப்ப *
நண்ணித்தொழுமவர்சிந்தைபிரியாத
நாராயணா! இங்கேவாராய் *
எண்ணற்கரியபிரானே. திரியை
எரியாமேகாதுக்கிடுவன் *
கண்ணுக்குநன்றுமழகுமுடைய
கனகக்கடிப்பும்இவையா!
140 வண்ணப் பவள மருங்கினில் சாத்தி * மலர்ப்பாதக் கிண்கிணி ஆர்ப்ப *
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத * நாராயணா இங்கே வாராய் **
எண்ணற்கு அரிய பிரானே * திரியை எரியாமே காதுக்கு இடுவன் *
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய * கனகக் கடிப்பும் இவையா (2)
140 vaṇṇap paval̤a maruṅkiṉil cātti * malarppātak kiṇkiṇi ārppa *
naṇṇit tŏzhum avar cintai piriyāta * nārāyaṇā iṅke vārāy **
ĕṇṇaṟku ariya pirāṉe * tiriyai ĕriyāme kātukku iṭuvaṉ *
kaṇṇukku naṉṟum azhakum uṭaiya * kaṉakak kaṭippum ivaiyā (2)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

140. O Nārāyanā, you never depart from the hearts of those who approach and worship you. Come to me wearing the beautiful coral chain on your waist as the anklets on your lotus feet sing. I will put cotton threads through the holes in your ears without hurting you and I will adorn your ears with earrings. See these lovely golden earrings.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நண்ணி அருகில் வந்து; தொழுமவர் துதிக்கின்றவர்களின்; சிந்தை சிந்தையைவிட்டு; பிரியாத நீங்காத; நாராயணா! நாராயணனே!; வண்ணப் பவளம் வண்ணமிக்க பவழங்கள்; மருங்கினில் சாத்தி அரையில் அணிந்து; மலர்ப் பாத பூப் போன்ற பாதங்களில்; கிண்கிணி ஆர்ப்ப சதங்கைகள் கிலுகிலுக்க; இங்கே வாராய் இங்கு என்னிடம் வருவாய்!; எண்ணற்கு அரிய பிரானே! கற்பனைக்கு எட்டாத அழகனே!; திரியை பஞ்சைத் திரித்து; எரியாமே வலிக்காத விதத்தில்; காதுக்கு இடுவன் உன் காதில் இடுவேன்; கண்ணுக்கு பார்ப்பதற்கு; நன்றும் அழகும் உடைய மிகவும் அழகான; கனகக் கடிப்பும் கர்ண பூஷணங்களும்; இவையா! சிறப்பான பொலிவையுடையவை இவை
nārāyaṇā! Narayana!; piriyāta You dont leave; cintai the mind; tŏḻumavar of those who prasie You; naṇṇi while coming closer; maruṅkiṉil cātti You wear on the waist; vaṇṇap paval̤am colorful coral chain; kiṇkiṇi ārppa while the anklets makes music on; malarp pāta Your lotus like feet; iṅke vārāy please come to me; ĕṇṇaṟku ariya pirāṉe! Your beauty is beyond imagination; kātukku iṭuvaṉ on your pierced ears, I will insert; tiriyai cotton threads; ĕriyāme without hurting You; ivaiyā! these are special and lovely; kaṉakak kaṭippum earrings; naṉṟum aḻakum uṭaiya that are highly beautiful; kaṇṇukku to look at

PAT 2.3.3

141 வையமெல்லாம்பெறும்வார்கடல்வாழும்
மகரக்குழைகொண்டுவைத்தேன் *
வெய்யவேகாதில்திரியையிடுவன்
நீவேண்டியதெல்லாம்தருவன் *
உய்யஇவ்வாயர்குலத்தினில்தோன்றிய
ஒண்சுடராயர்கொழுந்தே! *
மையன்மைசெய்துஇளவாய்ச்சியருள்ளத்து
மாதவனே! இங்கேவாராய்.
141 வையம் எல்லாம் பெறும் வார்கடல் வாழும் * மகரக்குழை கொண்டுவைத்தேன் *
வெய்யவே காதில் திரியை இடுவன் * நீ வேண்டிய தெல்லாம் தருவன் **
உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய * ஒண்சுடர் ஆயர்கொழுந்தே *
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து * மாதவனே இங்கே வாராய் (3)
141 vaiyam ĕllām pĕṟum vārkaṭal vāzhum * makarakkuzhai kŏṇṭuvaitteṉ *
vĕyyave kātil tiriyai iṭuvaṉ * nī veṇṭiya tĕllām taruvaṉ **
uyya iv āyar kulattiṉil toṉṟiya * ŏṇcuṭar āyarkŏzhunte *
maiyaṉmai cĕytu il̤a āycciyar ul̤l̤attu * mātavaṉe iṅke vārāy (3)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

141. I bought and kept for you emerald earrings, shaped like fish that live in the ocean, so expensive that even the whole earth would not be enough to buy them. I will put warm threads through your ears without hurting you. I will give you all the things that you desire. O radiant one, born in the cowherd clan to save the cowherds, you attract the minds of the young cowherd women by your magic. O Madhava, come here.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உய்ய உலகம் உய்ய; இவ் ஆயர் குலத்தினில் ஆயர் குலத்தில்; தோன்றிய உதித்த; ஒண் சுடர் தேஜஸ் மிக்க; ஆயர் கொழுந்தே! யாதவர்களின் செல்வனே!; வையம் எல்லாம் பெறும் இவ்வுலகையே விலையாக; வார் கடல் வாழும் பரந்த கடலிலே வாழ்கின்ற; மகரக் குழை மீன் போன்ற காதணியை; கொண்டு வைத்தேன் கொண்டு வந்திருக்கிறேன்; வெய்யவே இதமாக இருக்க மிதமாக சூடாக்கப்பட்ட; திரியை காதில் திரியை காதில்; இடுவன் இடுவேன்; நீ வேண்டியது நீ கேட்பதை; எல்லாம் தருவன் எல்லாம் தருவேன்; மையன்மை செய்த உன்னை அழகனாக்கி; இள ஆய்ச்சியர் இளம் பெண்களின்; உள்ளத்து உள்ளத்தில் உறையும்படி செய்வேன்; மாதவனே! திருமகளின் நாதனே! மாதவனே!; இங்கே வாராய் இங்கே வருவாய்
uyya to bring prosperity to the world; toṉṟiya You were born; iv āyar kulattiṉil in Aiyarpadi; ŏṇ cuṭar the One with brilliance; āyar kŏḻunte! and the leader of Yadhavas!; kŏṇṭu vaitteṉ I have brought with me; makarak kuḻai earrings shaped like fish; vār kaṭal vāḻum that lives in the expansive ocean; vaiyam ĕllām pĕṟum and is as expensive as the world itself; iṭuvaṉ will insert; tiriyai kātil the thread into Your ear that is; vĕyyave warmed to make it comfortable to You; nī veṇṭiyatu whatever You ask; ĕllām taruvaṉ I will give; maiyaṉmai cĕyta I will make You look beautiful; ul̤l̤attu and have You steal the hearts of; il̤a āycciyar young women; mātavaṉe! oh Madhava!; iṅke vārāy come here

PAT 2.3.4

142 வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டு
வார்காதுதாழப்பெருக்கி *
குணநன்றுடையர்இக்கோபாலபிள்ளைகள்
கோவிந்தா! நீசொல்லுக்கொள்ளாய் *
இணைநன்றழகியஇக்கடிப்புஇட்டால்
இனியபலாப்பழம்தந்து *
சுணநன்றணிமுலையுண்ணத்தருவன்நான்
சோத்தம்பிரான்! இங்கேவாராய்
142 வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு * வார்காது தாழப் பெருக்கிக் *
குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள் * கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய் **
இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால் * இனிய பலாப்பழம் தந்து *
சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் * சோத்தம் பிரான் இங்கே வாராய் (4)
142 vaṇam naṉṟu uṭaiya vayirak kaṭippu iṭṭu * vārkātu tāzhap pĕrukkik *
kuṇam naṉṟu uṭaiyar ik kopāla pil̤l̤aikal̤ * kovintā nī cŏlluk kŏl̤l̤āy **
iṇai naṉṟu azhakiya ik kaṭippu iṭṭāl * iṉiya palāppazham tantu *
cuṇam naṉṟu aṇi mulai uṇṇat taruvaṉ nāṉ * cottam pirāṉ iṅke vārāy (4)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

142. O Govinda, the cowherd children wear colorful earrings studded with beautiful diamonds, that hang down from their ears— see, they are good children. O Govinda, why don’t you listen to me? If you wear these lovely earrings I will give you sweet jackfruit to eat and milk from my beautiful breasts. My dear one. I plead with you—come here.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வணம் நன்று உடைய சிறந்த வண்ணமுடைய; வயிரக் கடிப்பு வயிரம் பொருந்திய காதணிகளை; இட்டு அணிந்துகொண்டு; வார் காது நீண்ட காதை; தாழப் பெருக்கி மேலும் தாழச் செய்துகொண்ட; இக் கோபால பிள்ளைகள் இந்த ஆயர் சிறுவர்கள்; குணம் நன்று நல்ல குணமுடையவர்களாக; உடையர் இருக்கிறார்கள்; கோவிந்தா! கோவிந்தா!; நீ சொல்லு நீ அவர்களுடன் சேர்ந்து என் பேச்சைக்; கொள்ளாய் கேட்க மறுக்கிறாய்; இணை நன்று அழகான ஜோடியாக இணைந்திருக்கும்; அழகிய இக் கடிப்பு அழகிய காதணியை நீ; இட்டால் போட்டுக் கொண்டால்; இனிய பலாப்பழம் தந்து இனிப்பான பலாச்சுளை தந்து; சுணம் நன்று என் மார்பின்; அணி முலை உண்ண பாலைப் பருக; தருவேன் நான் தருவேன் நான்; சோத்தம் உன்னை வணங்குகிறேன்; பிரான்! கண்ணபிரானே!; இங்கே வாராய் இங்கு வருவாயே!
ik kopāla pil̤l̤aikal̤ these Aiyarpadi children; uṭaiyar who remain; kuṇam naṉṟu good natured; iṭṭu wore; vayirak kaṭippu earrings studded with diamonds that are; vaṇam naṉṟu uṭaiya red in color; tāḻap pĕrukki and the earrings bring own their already; vār kātu long ears; kovintā! Govinda!; nī cŏllu You joined with them and; kŏl̤l̤āy refuse to listen to me; iṭṭāl if you wear these; aḻakiya ik kaṭippu beautiful earrings; iṇai naṉṟu that look gorgeous as a pair; iṉiya palāppaḻam tantu I will give You sweet jackfruit; taruveṉ nāṉ i will also give; aṇi mulai uṇṇa You milk from; cuṇam naṉṟu my breast; cottam I bow to You; pirāṉ! Kanna!; iṅke vārāy come here!

PAT 2.3.5

143 சோத்தம்பிரான் என்றுஇரந்தாலும்கொள்ளாய்
சுரிகுழலாரொடுநீபோய் *
கோத்துக்குரவைபிணைந்துஇங்குவந்தால்
குணங்கொண்டிடுவனோ? நம்பீ! *
பேர்த்தும்பெரியனஅப்பம்தருவன்
பிரானே! திரியிடவொட்டில் *
வேய்த்தடந்தோளார்விரும்புகருங்குழல்
விட்டுவே! நீஇங்கேவாராய்
143 சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் * சுரிகுழலாரொடு நீ போய் *
கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் * குணங்கொண்டு இடுவனோ? நம்பீ **
பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் * பிரானே திரியிட ஒட்டில் *
வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல் * விட்டுவே நீ இங்கே வாராய் (5)
143 cottam pirāṉ ĕṉṟu irantālum kŏl̤l̤āy * curikuzhalārŏṭu nī poy *
kottuk kuravai piṇaintu iṅku vantāl * kuṇaṅkŏṇṭu iṭuvaṉo? nampī **
perttum pĕriyaṉa appam taruvaṉ * pirāṉe tiriyiṭa ŏṭṭil *
veyt taṭantol̤ār virumpum karuṅkuzhal * viṭṭuve nī iṅke vārāy (5)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

143. O dear child, even when I beg you and say i worship you, you don’t listen to me. How can I think you are a good child you join the curly-haired girls, dance the kuravai dance with them and come back late? O dear child, if you let me put the thread in your ears I will give you large appams even though you are naughty. You are the lord of the sky, O Vishnu! the girls with round bamboo-like arms love you whose hair is as dark as a cloud. Come here.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சோத்தம் உன்னை வேண்டிக்கொள்கிறேன்; பிரான்! பெருமானே!; என்று இரந்தாலும் என்று இரந்து சொன்னாலும்; கொள்ளாய் ஏற்றுக் கொள்ளமாட்டாய்; நம்பீ! எம்பிரானே!; சுரிகுழலாரொடு சுருண்ட முடியையுடைய; நீ போய் பெண்களோடு நீ போய்; கோத்து கை கோத்து; குரவை பிணைந்து குரவைக் கூத்து ஆடி; இங்கு வந்தால் இங்கு வந்தால்; குணம் அதை நான் குணமாகக் கொள்வேனோ?; பிரானே! கண்ணனே!; திரி இட ஒட்டில் திரி போட்டுக் கொள்ள வந்தால்; பேர்த்தும் பின்னையும்; பெரியன அப்பம் பெரிய பெரிய அப்பங்களை; தருவன் தருவேன்; வேய்த் தடம் மூங்கில் போன்ற; தோளார் தடமான தோள்களையுடைய; விரும்பும் பெண்கள் விரும்பும்; கருங்குழல் கறுத்த தலைமுடியை உடைய; விட்டுவே! விஷ்ணு பிரானே!; நீ இங்கே வாராய் நீ இங்கே வாராய்
kŏl̤l̤āy You dont listen to me; ĕṉṟu irantālum even when I say sincerely; cottam that I pray to You; pirāṉ! Perumaney!; nampī! oh Lord!; nī poy if you go and meet with girls; curikuḻalārŏṭu who have curly hair; kottu join hands; kuravai piṇaintu and dance the kuravai dance; iṅku vantāl and come late; kuṇam how can I think You are a good child?; pirāṉe! Oh Lord!; tiri iṭa ŏṭṭil if you come to me so I can put threads in your pierced ears; perttum later; taruvaṉ I will give You; pĕriyaṉa appam large appams; virumpum You are loved by women having; veyt taṭam bamboo-like; tol̤ār arms; karuṅkuḻal the One with dark black hair; viṭṭuve! Oh Lord Vishnu!; nī iṅke vārāy You come here!

PAT 2.3.6

144 விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.
உன்வாயில்விரும்பியதனை நான்நோக்கி *
மண்ணெல்லாம்கண்டுஎன்மனத்துள்ளேயஞ்சி
மதுசூதனேயென்றிருந்தேன் *
புண்ணேதுமில்லைஉன்காதுமறியும்
பொறுத்துஇறைப்போதுஇருநம்பீ! *
கண்ணா! என்கார்முகிலே!
கடல்வண்ணா! காவலனே! முலையுணாயே
144 விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய் * உன்வாயில் விரும்பி அதனை நான் நோக்கி *
மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி * மதுசூதனே என்று இருந்தேன் **
புண் ஏதும் இல்லை உன்காது மறியும் * பொறுத்து இறைப் போது இரு நம்பீ *
கண்ணா என் கார்முகிலே கடல்வண்ணா * காவலனே முலை உணாயே (6)
144 viṇṇĕllām keṭka azhutiṭṭāy * uṉvāyil virumpi ataṉai nāṉ nokki *
maṇṇĕllām kaṇṭu ĕṉ maṉattul̤l̤e añci * matucūtaṉe ĕṉṟu irunteṉ **
puṇ etum illai uṉkātu maṟiyum * pŏṟuttu iṟaip potu iru nampī *
kaṇṇā ĕṉ kārmukile kaṭalvaṇṇā * kāvalaṉe mulai uṇāye (6)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

144. You cried so loud that even the sky-dwellers could hear you. When I looked into your mouth, I was frightened to see the whole earth inside and I understood that you are the Madhusudanan. There's no injury and your ears too know that. Just bear a second, my dear child! You, our protector, are lovely like a dark cloud and have the color of the ocean. Come and drink milk from my breasts.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விண் எல்லாம் கேட்க வானமெல்லாம் கேட்கும் அளவிற்கு; அழுதிட்டாய் அழுத; உன்வாயில் உன்னுடைய வாயினுள்; விரும்பி அதனை மண் தின்ற சுவடு காண விரும்பி; நான் நோக்கி நான் பார்த்த போது; மண்ணெல்லாம் கண்டு இப்பபூமி எல்லாம் உன் வயிற்றிலே; கண்டு இருப்பதைக் கண்டு; என் மனத்துள்ளே அஞ்சி என் மனதினுள் அச்சப்பட்டு; மதுசூதனே இவன் என் பிள்ளை அல்ல அந்த பரமாத்மனே; என்று இருந்தேன் என்று தெரிந்துகொண்டேன்; புண் ஏதும் இல்லை உன் காதில் புண் ஒன்றும் இல்லை; உன் காது கடுக்கன் இடும் போது; மறியும் லேசாகக் காது மடியும்; பொறுத்து ஒரு கணம்; இறைப் போது இரு பொறுத்துக் கொள்; நம்பீ! பிள்ளாய்!; கண்ணா! என் கார் முகிலே! கண்ணா காளமேகமே!; கடல் வண்ணா! நீலக் கடல் வண்ணனே!; காவலனே! ரட்சிப்பவனே!; முலை உணாயே பாலுண்ண வருவாய்
maṇ tiṉṟāy You put sand in Your mouth; aḻutiṭṭāy and cried so loud; viṇ ĕllām keṭka even the sky-dwellers could hear you; virumpi ataṉai to check; nāṉ nokki when I examined; uṉvāyil inside Your mouth; kaṇṭu I saw; maṇṇĕllām kaṇṭu the entire earth; ĕṉ maṉattul̤l̤e añci and was frightened; ĕṉṟu irunteṉ I came to realize; matucūtaṉe You are not my child but the Paratma Himself; puṇ etum illai there are no wounds in your ears; uṉ kātu when inserting the earrings; maṟiyum its normal for the ear lobes to get folded; iṟaip potu iru please bear; pŏṟuttu for a brief period; nampī! Oh Child!; kaṇṇā! ĕṉ kār mukile! Kanna, Oh dark cloud!; kaṭal vaṇṇā! One like a blue ocean!; kāvalaṉe! Oh Protector!; mulai uṇāye come and have milk

PAT 2.3.7

145 முலையேதும்வேண்டேனென்றோடி
நின்காதில்கடிப்பைப்பறித்தெறிந்திட்டு *
மலையையெடுத்துமகிழ்ந்துகல்மாரிகாத்துப்
பசுநிரைமேய்த்தாய்! *
சிலையொன்றுஇறுத்தாய்! திரிவிக்கிரமா!
திருவாயர்பாடிப்பிரானே! *
தலைநிலாப்போதேஉன்காதைப்பெருக்காதே
விட்டிட்டேன்குற்றமேயன்றே
145 முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி * நின்காதில் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு *
மலையை எடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் * பசுநிரை மேய்த்தாய் **
சிலை ஒன்று இறுத்தாய் திரிவிக்கிரமா * திரு ஆயர்பாடிப் பிரானே *
தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே * விட்டிட்டேன் குற்றமே அன்றே? (7)
145 mulai etum veṇṭeṉ ĕṉṟu oṭi * niṉkātil kaṭippaip paṟittu ĕṟintiṭṭu *
malaiyai ĕṭuttu makizhntu kal-māri kāttup * pacunirai meyttāy **
cilai ŏṉṟu iṟuttāy tirivikkiramā * tiru āyarpāṭip pirāṉe *
talai nilāp pote uṉkātaip pĕrukkāte * viṭṭiṭṭeṉ kuṟṟame aṉṟe? (7)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

145. You refused to suck the milk I fed and ran away, plucking and flinging your earrings. You lifted the Govardhanā mountain effortlessly with zeal and protected the herd from the stones that rained. You broke Lord Shivā's bow (as Rāma) to wed Sita. O ThrivikRāman! You are the chief of the beautiful cowherd village, Gokulam. I failed to bore your ears when you were an infant, with your head shaking. Wasn’t that my mistake?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முலை ஏதும் வேண்டேன் நீ தரும் பால் ஏதும் வேண்டாம்; என்று ஓடி என்று சொல்லி ஓடி; நின் காதிற் கடிப்பை உன் காதணியை; பறித்து எறிந்திட்டு கழட்டி எறிந்துவிட்டு; மலையை எடுத்து கோவர்த்தன கிரியை குடையாய் எடுத்து; மகிழ்ந்து உற்சாகமடைந்து; கல் மாரி பனிக்கட்டிப் பொழிவிலிருந்து; காத்து காப்பாற்றி; பசுநிரை மேய்த்தாய்! பசுமாடுகளை மேய்த்தவனே!; சிலை ஒன்று சீதையின் கரம் பிடிக்க வில்; இறுத்தாய்! ஒடித்தவனே!; திரிவிக்கிரமா! உலகளந்தவனே!; திரு ஆயர் பாடிப் பிரானே! ஆயர்பாடி பெம்மானே!; தலை நிலா குழந்தை பருவத்தில்; போதே தலை நிற்காத போதே; உன் காதை உன் காதை; பெருக்காதே திரி இட்டு துளையைப்; விட்டிட்டேன் பெரிதாக்காதது; குற்றமே அன்றே என் குற்றமன்றோ!
mulai etum veṇṭeṉ I dont want your milk; ĕṉṟu oṭi You said and ran away; paṟittu ĕṟintiṭṭu You removed and threw away; niṉ kātiṟ kaṭippai Your earrings; malaiyai ĕṭuttu You lifted Govardhana mountain as an umbrella; makiḻntu became excited; kāttu and protected the people; kal māri from the hale strom; pacunirai meyttāy! One who grazed the cattle; iṟuttāy! You broke the bow; cilai ŏṉṟu to marry Sita; tirivikkiramā! One who measured the earth!; tiru āyar pāṭip pirāṉe! Oh Lord of Aiyapadi!; kuṟṟame aṉṟe is it my fault!; viṭṭiṭṭeṉ to not; pĕrukkāte bore and insert threads in; uṉ kātai Your ears; talai nilā when You were a child; pote when Your head was still moving around

PAT 2.3.8

146 என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்
என்னைநான்மண்ணுண்டேனாக *
அன்புற்றுநோக்கிஅடித்தும்பிடித்தும்
அனைவர்க்கும்காட்டிற்றிலையே *
வன்புற்றரவின்பகைக்கொடிவாமனநம்பீ!
உன்காதுகள்தூரும் *
துன்புற்றனவெல்லாம்தீர்ப்பாய்பிரானே!
திரியிட்டுச்சொல்லுகேன்மெய்யே
146 என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் * என்னை நான் மண் உண்டேனாக *
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் * அனைவர்க்கும் காட்டிற்றிலையே? **
வன் புற்று அரவின் பகைக் கொடி * வாமன நம்பீ உன்காதுகள் தூரும் *
துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே * திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே (8)
146 ĕṉ kuṟṟame ĕṉṟu cŏllavum veṇṭā kāṇ * ĕṉṉai nāṉ maṇ uṇṭeṉāka *
aṉpuṟṟu nokki aṭittum piṭittum * aṉaivarkkum kāṭṭiṟṟilaiye? **
vaṉ puṟṟu araviṉ pakaik kŏṭi * vāmaṉa nampī uṉkātukal̤ tūrum *
tuṉpuṟṟaṉa ĕllām tīrppāy pirāṉe * tiriyiṭṭuc cŏllukeṉ mĕyye (8)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

146 O dear child! you complained, “See, mother, you shouldn’t say it is my fault. When I ate mud, you caught me and hit me. Didn’t you show your friends my mouth and tell them I had eaten mud?” O dear one, Vāmana! You have on your flag the eagle the enemy of the evil snake. If I do not put threads in, the holes on your ears will close. O beloved lord who removes the troubles of your devotees, I’m telling you the truth, I won’t hurt you. Come and let me put in the thread.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் குற்றமே என்று என் தப்பு என்று; சொல்லவும் நீ சொல்ல; வேண்டா காண் வேண்டியதில்லை பார்; நான் மண் உண்டேனாக ’நான் மண் உண்டேன்’ என்று; அன்புற்று அன்போடு என் வாயை; நோக்கி மண் சுவடு உண்டோ என்று பார்த்து; அடித்தும் பிடித்தும் அடித்தும் பிடித்தும்; அனைவர்க்கும் அனைவருக்கும்; காட்டிற்றிலையே? என் வாயைக் காட்டவில்லை?; வன் புற்று கொடிய புற்று; அரவின் பகை நாகத்தின் பகைவனான; கொடி கருடனை கொடியாகக் கொண்டவனே!; வாமன நம்பீ! வாமன நம்பியே!; உன் காதுகள் கண்ணா உன் காதுத் துளை; தூரும் துந்து போய்விடும்; துன்புற்றன எல்லாம் மக்களின் துன்பங்களைத்; தீர்ப்பாய் பிரானே! தீர்ப்பவனே! எம்பிரானே!; திரியிட்டு திரியிட்டுக் கொள் பின்; சொல்லுகேன் சொல்கிறேன்; மெய்யே அடிக்க பிடிக்கமாட்டேன் என்று
veṇṭā kāṇ You dont have to; cŏllavum say; ĕṉ kuṟṟame ĕṉṟu that its my fault; nāṉ maṇ uṇṭeṉāka thinking that I ate mud; nokki you checked to see traced of mud in; aṉpuṟṟu my mouth; aṭittum piṭittum you caught hold of me and gave beatings; kāṭṭiṟṟilaiye? you also showed my mouth?; aṉaivarkkum to everyone; kŏṭi You have in your flag, Garuda; araviṉ pakai the enemy of the snake; vaṉ puṟṟu that resides in wicked nest; vāmaṉa nampī! Oh Vamana!; uṉ kātukal̤ Kanna, the holes in your ear lobes; tūrum will close; tīrppāy, pirāṉe! Oh Lord!; tuṉpuṟṟaṉa ĕllām who remove the sufferings; tiriyiṭṭu please allow me to insert the threads; cŏllukeṉ then I will tell You; mĕyye that I will not catch and hit You

PAT 2.3.9

147 மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதித்
தொடுப்புண்டாய்வெண்ணெயையென்று *
கையைப்பிடித்துக்கரையுரலோடுஎன்னைக்
காணவேகட்டிற்றிலையே *
செய்தனசொல்லிச்சிரித்துஅங்குஇருக்கில்
சிரீதரா! உன்காதுதூரும் *
கையில்திரியையிடுகிடாய் இந்நின்ற
காரிகையார்சிரியாமே
147 மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித் * தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று *
கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் * காணவே கட்டிற்றிலையே? **
செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் * சிரீதரா உன்காது தூரும் *
கையில் திரியை இடுகிடாய் இந்நின்ற * காரிகையார் சிரியாமே (9)
147 mĕy ĕṉṟu cŏlluvār cŏllaik karutit * tŏṭuppuṇṭāy vĕṇṇĕyai ĕṉṟu *
kaiyaip piṭittuk karai uraloṭu ĕṉṉaik * kāṇave kaṭṭiṟṟilaiye? **
cĕytaṉa cŏllic cirittu aṅku irukkil * cirītarā uṉkātu tūrum *
kaiyil tiriyai iṭukiṭāy inniṉṟa * kārikaiyār ciriyāme (9)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

147. O Sridhara, you complain saying, “Mother, you believed what others said and punished me. Isn’t it true you thought I had stolen the butter? And didn’t you pull me and tie me to the mortar? Everyone saw me tied to the mortar and made fun of me. ” O, dear child, If you keep narrating what happened, laughing and staying away, the holes in your ears will close. Come, I will put the thread in your ears before the beautiful women standing here laugh at you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சொல்லுவார் பிறர் சொல்லை; மெய் என்று உண்மையென்று கருதி; தொடுப்புண்டாய் கள்ளத்தனமாக உண்டாய் என்று; கையைப் பிடித்து என் கையைப் பிடித்து; கரை உரலோடு விளிம்புள்ள உரலோடு; என்னைக் காணவே யாவரும் காணும்படி; கட்டிற்றிலையே? கட்டவில்லையோ?; சிரீதரா! கண்ணபிரானே!; செய்தன என நான்; சொல்லி செய்ததைச் சொல்லி; சிரித்து சிரித்துக் கொண்டு; அங்கு இருக்கில் தூரத்திலேயே நீ இருந்தால்; உன் காது தூரும் உன் காது தூர்ந்துவிடும்; இந்நின்ற காரிகையார் இங்குள்ள பெண்கள்; சிரியாமே வெறும் காதைபார்த்துப் சிரிக்காதிருக்க!; கையில் திரியை என் கைத் திரியை; இடுகிடாய் போட்டுக் கொள் கண்ணா!
cŏlluvār believing what others said; mĕy ĕṉṟu is truth; tŏṭuppuṇṭāy that I stole and ate butter; kaiyaip piṭittu you hold me by My hand; ĕṉṉaik kāṇave when everyone was looking at me; kaṭṭiṟṟilaiye? aint you tied Me?; karai uraloṭu to a mortar; cirītarā! Kanna!; aṅku irukkil if You stay away; cirittu smiling and; cŏlli telling what; cĕytaṉa I did; uṉ kātu tūrum the bores in Your ears will close; inniṉṟa kārikaiyār to avoid women; ciriyāme lauging at your bare ears!; kaiyil tiriyai allow me to insert the threads; iṭukiṭāy into the pierced ears Kanna!

PAT 2.3.10

148 காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்?
காதுகள்வீங்கியெரியில் *
தாரியாதாகில்தலைநொந்திடுமென்று
விட்டிட்டேன்குற்றமேயன்றே *
சேரியிற்பிள்ளைகளெல்லாரும் காது
பெருக்கித்திரியவும்காண்டி *
ஏர்விடைசெற்றுஇளங்கன்றுஎறிந்திட்ட
இருடீகேசா! என்தன்கண்ணே
148 காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்று என் * காதுகள் வீங்கி எரியில்? *
தாரியா தாகில் தலை நொந்திடும் என்று * விட்டிட்டேன் குற்றமே அன்றே? **
சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கித் * திரியவும் காண்டி *
ஏர் விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட * இருடிகேசா என்தன் கண்ணே <10>
148 kārikaiyārkkum uṉakkum izhukku uṟṟu ĕṉ * kātukal̤ vīṅki ĕriyil? *
tāriyā tākil talai nŏntiṭum ĕṉṟu * viṭṭiṭṭeṉ kuṟṟame aṉṟe? **
ceriyil pil̤l̤aikal̤ ĕllārum kātu pĕrukkit * tiriyavum kāṇṭi *
er viṭai cĕṟṟu il̤aṅkaṉṟu ĕṟintiṭṭa * iruṭikecā ĕṉtaṉ kaṇṇe <10>

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

148. O dear child, you said, “Mother, what would it matter to you and these lovely women if my ears swell up and hurt?” I didn’t put the thread in your ears when you were young because I was worried it might hurt you. It is my fault. Don’t you see how all the children wandering around the cowherd village have had threads put in their ears? O Rishikesha, you killed Arishtasuran and Vasthasuran by throwing a young calf at them.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காதுகள் வீங்கி எரியில் என் காதுகள் வீங்கி எரிந்தால்; காரிகையார்க்கும் பெண்களுக்கும்; உனக்கும் உனக்கும்; இழுக்கு உற்று என் உங்களுக்கு என்ன கஷ்டம்; தாரியா தாகில் காதில் திரியயை இடாமற்போனால்; தலை நொந்திடும் என்று தலைவலி ஏற்படும் என்று; விட்டிட்டேன் விட்டது; குற்றமே அன்றே என் குற்றமன்றோ; ஏர் விடை அழகிய ரிஷபமாக வந்த; செற்று அசுரனை வென்று; இளங்கன்று கன்றுருவில் வந்த; எறிந்திட்ட அசுரனையும் வென்ற; இருடீகேசா! ரிஷிகேசனே!; சேரியில் இந்த இடைச்சேரியில் பிறந்த; பிள்ளைகள் எல்லாரும் பிள்ளைகள் எல்லோரும்; காது காதுத் துளை; பெருக்கித் பெருக்கி கொண்டு; திரியவும் திரிவதை; காண்டி காண்பாய்; என் தன் கண்ணே! எனனுடைய கண்மணியே
iḻukku uṟṟu ĕṉ what would it matter to; uṉakkum you; kārikaiyārkkum and the women; kātukal̤ vīṅki ĕriyil if my ears swell and hurt; talai nŏntiṭum ĕṉṟu thinking it might hurt You; viṭṭiṭṭeṉ and not putting; tāriyā tākil the thread when You were young; kuṟṟame aṉṟe was my fault; iruṭīkecā! Oh Rishikesha !; cĕṟṟu You won against the asura; er viṭai who came as a bull; ĕṟintiṭṭa and You won against the asura; il̤aṅkaṉṟu who came as a calf; ĕṉ taṉ kaṇṇe! my Kanna; kāṇṭi see; pil̤l̤aikal̤ ĕllārum all the children; ceriyil born in Aiyarpadi; tiriyavum wandering; pĕrukkit with their; kātu ears pierced

PAT 2.3.11

149 கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக்
கடிகமழ்பூங்குழலார்கள் *
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
பெருமானே! எங்களமுதே *
உண்ணக்கனிகள்தருவன் கடிப்பொன்றும்
நோவாமேகாதுக்கிடுவன் *
பண்ணைக்கிழியச்சகடமுதைத்திட்ட
பற்பநாபா! இங்கேவாராய்
149 கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக் * கடிகமழ் பூங்குழலார்கள் *
எண்ணத்துள் என்றும் இருந்து * தித்திக்கும் பெருமானே எங்கள் அமுதே **
உண்ணக் கனிகள் தருவன் * கடிப்பு ஒன்றும் நோவாமே காதுக்கு இடுவன் *
பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட * பற்பநாபா * இங்கே வாராய் (11)
149 kaṇṇaik kul̤irak kalantu ĕṅkum nokkik * kaṭikamazh pūṅkuzhalārkal̤ *
ĕṇṇattul̤ ĕṉṟum iruntu * tittikkum pĕrumāṉe ĕṅkal̤ amute **
uṇṇak kaṉikal̤ taruvaṉ * kaṭippu ŏṉṟum novāme kātukku iṭuvaṉ *
paṇṇaik kizhiyac cakaṭam utaittiṭṭa * paṟpanāpā * iṅke vārāy (11)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

149. O Lord! You stay sweetly in the thoughts of the beautiful girls whose hair is decorated with fragrant flowers who always look at you with love. You are our sweet nectar. I will give you fruits to eat. I will put the thread in your ears without hurting you, O Padmanābhā, who kicked Sakatāsuran when he came as a cart and killed him. Come here.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடிகமழ் மணம் மிக்க; பூங்குழலார்கள் மலர்களணிந்த கூந்தலார்கள்; கண்ணைக் குளிர கண் குளிர; எங்கும் எல்லாபக்கமும்; கலந்து உன் அவயவ சோபையை; நோக்கி பார்த்து; எண்ணத்துள் உன்னோடு கலக்க விரும்பி; என்றும் இருந்து எப்போதும் பொருந்தி இருந்து; தித்திக்கும் அவர்களுக்கு இனிப்பூட்டும்; பெருமானே! பெருமானே!; எங்கள் அமுதே! எங்களுடைய அமிர்தமே!; பண்ணைக் கிழியச் உருக்குலையும்படி; சகடம் உதைத்திட்ட சகடாசுரனை உதைத்த; பற்பனாபா! பத்மநாபனே!; உண்ண உண்பதற்குப்; கனிகள் தருவன் பழங்கள் தருவேன்; ஒன்றும் சிறிதும்; நோவாமே நோகாதபடி; காதுக்கு உன் காதில்; கடிப்பு இடுவன் கடுக்கன் அணிவிப்பேன்; இங்கே வாராய் நீயே விரும்பி இங்கு என்னிடம் வருவாய்
tittikkum You bring sweetness to the Women; pūṅkuḻalārkal̤ with hair containing flowers; kaṭikamaḻ emanating wonderful fragrance; nokki they look; kalantu at You; ĕṅkum in all directions; kaṇṇaik kul̤ira with great satisfaction; ĕṉṟum iruntu You always remain; ĕṇṇattul̤ in their minds; pĕrumāṉe! Perumaney!; ĕṅkal̤ amute! You are our nectar!; cakaṭam utaittiṭṭa You struck Shakatasura; paṇṇaik kiḻiyac and destroyed him; paṟpaṉāpā! Padmanabaney!; kaṉikal̤ taruvaṉ I will give You; uṇṇa fruits to eat; kaṭippu iṭuvaṉ I will insert earrings; kātukku in Your ear bores; novāme without causing; ŏṉṟum any pain; iṅke vārāy please come on Your own

PAT 2.3.12

150 வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்து
வலியவேகாதில்கடிப்பை *
நோவத்திரிக்கில்உனக்கிங்கிழுக்குற்றென்?
காதுகள்நொந்திடும்கில்லேன் *
நாவற்பழம்கொண்டுவைத்தேன்
இவையாணாய்நம்பீ! * முன்வஞ்சமகளைச்
சாவப்பாலுண்டுசகடிறப்பாய்ந்திட்ட
தாமோதரா! இங்கேவாராய்
150 வா என்று சொல்லி என்கையைப் பிடித்து * வலியவே காதில் கடிப்பை *
நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்று என்? * காதுகள் நொந்திடும் கில்லேன் **
நாவல் பழம் கொண்டுவைத்தேன் * இவை ஆணாய் நம்பீ * முன் வஞ்ச மகளைச்
சாவப் பால் உண்டு சகடு இறப் பாய்ந்திட்ட * தாமோதரா இங்கே வாராய் (12)
150 vā ĕṉṟu cŏlli ĕṉkaiyaip piṭittu * valiyave kātil kaṭippai *
novat tirikkil uṉakku iṅku izhukkuṟṟu ĕṉ? * kātukal̤ nŏntiṭum killeṉ **
nāval pazham kŏṇṭuvaitteṉ * ivai āṇāy nampī * muṉ vañca makal̤aic
cāvap pāl uṇṭu cakaṭu iṟap pāyntiṭṭa * tāmotarā iṅke vārāy (12)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

150. O dear child, you told me, “If you hold my hand tightly, call me and put the thread in my ears, will it hurt you? Only my ears will hurt. I won’t let you do that. ” O Damodara, I have brought berries for you. You killed the vicious Putanā by drinking milk from her breasts and destroyed Sakatāsuran when he came in the form of a cart. Come here.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வா என்று சொல்லி ’இங்கே வா’ என்று சொல்லி; என் கையைப் பிடித்து என் கையைப் பிடித்து; வலியவே பிடியைத் தளர்த்தாமல்; காதில் கடிப்பை காதில் கடுக்கனை; நோவத் திரிக்கில் வலிக்கவலிக்கப் போட்டால்; உனக்கு இங்கு உனக்கு இங்கு; இழுக்குற்று என் வலி உண்டாகுமா என்ன; காதுகள் நொந்திடும் என் காதுகள் தானே நோகும்; கில்லேன் வர மாட்டேன்; நாவற் பழம் நாவல் பழம்; கொண்டு வைத்தேன் கொண்டு வந்திருக்கிறேன்; இவை யாணாய் நம்பீ! பார் என் நம்பியே!; முன் முன்னொரு நாள்; வஞ்ச மகளை வஞ்கமாக வந்த பூதனை; சாவப் பாலுண்டு மாள பாலை உறிஞ்சினவனே!; சகடு இற சகடமாக வந்த அசுரன்; பாய்ந்திட மடிய பாய்ந்தவனே!; தாமோதரா! தாமோதரா!; இங்கே வாராய் இங்கு வாராய்
vā ĕṉṟu cŏlli if you call me to come to you; ĕṉ kaiyaip piṭittu and hold my hand; valiyave and without leaving me go; kātil kaṭippai if you insert earrings into My ear; novat tirikkil that is bound to cause pain; iḻukkuṟṟu ĕṉ would that hurt; uṉakku iṅku you; kātukal̤ nŏntiṭum only My ears will hurt; killeṉ so I will not come; kŏṇṭu vaitteṉ i have brought; nāvaṟ paḻam naval fruit; ivai kāṇāy nampī! see, my Nambi!; muṉ once; cāvap pāluṇṭu You by drinking milk killed!; vañca makal̤ai Putana, who came wickedly; pāyntiṭa You leapt and destroyed!; cakaṭu iṟa an asura who came as a cart; tāmotarā! Damodhara!; iṅke vārāy come here

PAT 2.3.13

151 வார்காதுதாழப்பெருக்கியமைத்து
மகரக்குழையிடவேண்டி *
சீரால்அசோதைதிருமாலைச்சொன்னசொல்
சிந்தையுள்நின்றுதிகழ *
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன்
பன்னிருநாமத்தாற்சொன்ன *
ஆராதஅந்தாதிபன்னிரண்டும்வல்லார்
அச்சுதனுக்குஅடியாரே (2)
151 ## வார் காது தாழப் பெருக்கி அமைத்து * மகரக்குழை இட வேண்டி *
சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல் * சிந்தையுள் நின்று திகழ **
பார் ஆர் தொல் புகழான் புதுவை மன்னன் * பன்னிரு நாமத்தால் சொன்ன *
ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார் * அச்சுதனுக்கு அடியாரே (13)
151 ## vār kātu tāzhap pĕrukki amaittu * makarakkuzhai iṭa veṇṭi *
cīrāl acotai tirumālaic cŏṉṉa cŏl * cintaiyul̤ niṉṟu tikazha **
pār ār tŏl pukazhāṉ putuvai maṉṉaṉ * paṉṉiru nāmattāl cŏṉṉa *
ārāta antāti paṉṉiraṇṭum vallār * accutaṉukku aṭiyāre (13)

Ragam

Asāveri / அஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Mother

Simple Translation

Yashodā, wishing to adorn the big beautiful ears and make the lobes bigger, brought emerald earrings and called her child. The chief of Puduvai who is praised by the entire world, composed twelve hymns(pāsurams) with Yashodā's words about Thirumāl, in such a way that they stay in our thoughts. Those who recite these twelve pāsurams with Yashodā's words will be the devotees of Achuthan, the Lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வார் காது இயல்பாகவே நீளமாகவுள்ள காது; தாழப் பெருக்கி அமைத்து தாழ்ந்திடுமாறு செய்து; மகரக்குழை மகரவடிவு குண்டலங்களை; இடவேண்டி போட விரும்பி; சீரால் சிறப்பாக; அசோதை யசோதை; திருமாலை திருமாலைக் குறித்து; சொன்ன சொல் சொன்னவை; சிந்தையுள் நம் மனதில்; நின்று திகழ நிலையாக நின்றிருக்க; பாரார் தொல் வெகு காலமாக உலகத்தாரால்; புகழான் புகழுப்படும்; புதுவை வில்லிபுத்தூர்; மன்னன் மன்னன் பெரியாழ்வார்; பன்னிரு நாமத்தால் பன்னிரண்டு; சொன்ன திருநாமங்களால் சொன்ன; ஆராத ஆராத; அந்தாதி அந்தாதிப் பாடல்கள்; பன்னிரண்டும் பன்னிரண்டையும்; வல்லார் ஓத வல்லவர்கள்; அச்சுதனுக்கு எம்பெருமானுக்கு; அடியாரே அந்தரங்கமானவர்
acotai mother Yashoda; cīrāl specially; iṭaveṇṭi desired to insert; makarakkuḻai the emerald earrings; tāḻap pĕrukki amaittu to make earlobes of Kannan bigger; vār kātu which were already long; niṉṟu tikaḻa in order for this to stay for long; cintaiyul̤ in our mind; cŏṉṉa cŏl of what Yahsoda thought of; tirumālai Kannan; maṉṉaṉ Periazhwar, the king of; putuvai Villiputhur; pukaḻāṉ who was praised; cŏṉṉa composed; pārār tŏl by people for a long time; paṉṉiru nāmattāl tweleve; antāti poetic songs; ārāta in praise of Kannan; vallār those who recite; paṉṉiraṇṭum all the tweleve pasurams; aṭiyāre will remain close to; accutaṉukku Emperuman