2

Thirukkozhi

திருக்கோழி

Thirukkozhi

Uraiyur, Nisulāpuri, Urandhai

ஸ்ரீ வாஸலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ அழகியமணவாள ஸ்வாமினே நமஹ

This Divya kshetram is situated in Uraiyur, around 3 Kms from Trichy, and is easily accessible by road. Uraiyur was the ancient Chola Capital, and is the birthplace of Tiruppān Azhvar.

The presiding Deity is Azhagiya Manavālan in the standing posture carrying Sanku and Chakra in His hands. Komalavalli Thāyār is also in the same sanctum in the seated

+ Read more
தாயார் திருநாமம், கமலவல்லி தாயார். தாயார் பெருமாள் சந்நிதியில் பெருமாளுக்கு பக்கத்திலேயே வீற்றிந்த திருக்கோலம். தாயாருக்கு தனி சந்நிதி கிடையாது.

கார்த்திகை மாதத்தில், திருப்பாணாழ்வார் 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. திருப்பாணாழ்வார் இந்த தலத்தில் அவதரித்தவர். இவருக்கு இங்கு தனி சன்னதி + Read more
Thayar: Sri Kamala Valli Nāchiyār
Moolavar: Sri Azhagiya Manavālan
Utsavar: Sundaravarayan
Vimaanam: Kalyāna
Pushkarani: Kalyān Theertham, Soorya Pushkarani, Kudamuruti Nadhi
Thirukolam: Nindra (Standing)
Direction: North
Mandalam: Chozha Nādu
Area: Trichy
State: TamilNadu
Aagamam: Pāncharāthram
Sampradayam: Thenkalai
Timings: 7:00 a.m. to 12:00 noon 5:00 p.m. to 8:00 p.m.
Search Keyword: Woraiyur
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PMT 2.10

667 அல்லிமாமலர்மங்கைநாதன்அரங்கன்மெய்யடியார்கள்தம் *
எல்லையிலடிமைத்திறத்தினில்என்றுமேவுமனத்தனாம் *
கொல்லிகாவலன்கூடல்நாயகன் கோழிக்கோன்குலசேகரன் *
சொல்லினின்தமிழ்மாலைவல்லவர் தொண்டர்தொண்டர்களாவரே. (2)
667 ## அல்லி மா மலர் மங்கை நாதன் * அரங்கன் மெய்யடியார்கள் தம் *
எல்லை இல் அடிமைத் திறத்தினில் * என்றும் மேவு மனத்தனாம் **
கொல்லி காவலன் கூடல் நாயகன் * கோழிக்கோன் குலசேகரன் *
சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர் * தொண்டர் தொண்டர்கள் ஆவரே (10)
667 ## alli mā malar-maṅkai nātaṉ * araṅkaṉ mĕyyaṭiyārkal̤ tam *
ĕllai il aṭimait tiṟattiṉil * ĕṉṟum mevu maṉattaṉām **
kŏlli-kāvalaṉ kūṭal-nāyakaṉ * kozhikkoṉ kulacekaraṉ *
cŏlliṉ iṉtamizh mālai vallavar * tŏṇṭar tŏṇṭarkal̤ āvare (10)

Ragam

Shrī / ஸ்ரீ

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

667. Kulasekharan, the king of Uraiyur, the lord of Kudal Nagar and the protector of Uraiyur composed sweet Tamil pāsurams on Rangan, the beloved of Lakshmi. He abides in the minds of his true devotees if they think only of him and serve him as his slaves. If they learn and recite these pāsurams they will become the devotees of his devotees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அல்லி இதழ் விரிந்த; மா மலர் தாமரை மலரில் அவதரித்த; மங்கை நாதன் பிராட்டியின் பதியான; அரங்கன் அரங்கன்; மெய் உண்மையான; அடியார்கள் தம் பக்தர்களுடைய; எல்லை இல் அடிமை எல்லையில்லாத சேவை; திறத்தினில் என்றும் பணியிலே எப்போதும்; மேவு பொருந்தியிருக்கும்; மனத்தனாம் உள்ளத்தையுடைய; கொல்லி காவலன் கொல்லிநகர் அரசன்; கூடல் நாயகன் மதுரை மன்னன்; கோழிக் கோன் உறையூருக்கு அரசருமான; குலசேகரன் குலசேகரப் பெருமானுடைய; சொல்லின் சொல்லின்; இன் தமிழ் இனிய தமிழ்; மாலை பாசுரங்களை; வல்லவர் அனுசந்திப்பவர்கள்; தொண்டர் அடியார்க்கு; தொண்டர்கள் ஆவரே அடியார்களாக ஆவர்

PT 9.2.5

1762 கோழியும்கூடலும்கோயில்கொண்ட
கோவலரேஒப்பர், குன்றமன்ன *
பாழியந்தோளும் ஓர்நான்குடையர்
பண்டு இவர்தம்மையும்கண்டறியோம் *
வாழியரோஇவர்வண்ணம்எண்ணில்
மாகடல்போன்றுளர், கையில்வெய்ய *
ஆழியொன்றேந்திஓர்சங்குபற்றி
அச்சோஒருவரழகியவா!
1762 கோழியும் கூடலும் கோயில் கொண்ட *
கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன *
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் *
பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் **
வாழியரோ இவர் வண்ணம் எண்ணில் *
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய *
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி *
அச்சோ ஒருவர் அழகியவா 5
1762 kozhiyum kūṭalum koyil kŏṇṭa *
kovalare ŏppar kuṉṟam aṉṉa *
pāzhi am tol̤um or nāṉku uṭaiyar *
paṇṭu ivar-tammaiyum kaṇṭaṟiyom **
vāzhiyaro ivar vaṇṇam ĕṇṇil *
mā kaṭal poṉṟu ul̤ar kaiyil vĕyya *
āzhi ŏṉṟu enti or caṅku paṟṟi- *
acco ŏruvar azhakiyavā-5

Ragam

Sāranga / ஸாரங்க

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1762. She says about the lord of Thirunāgai, “He, the cowherd with four mighty mountain-like arms looks like the god of the temples in Woraiyur and ThirukKoodal. We have not seen him before. Let us praise him. If you see him, he looks like the dark ocean and holds in his hands a heroic discus and a conch. Acho, how can I describe his beauty!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோழியும் உறையூரையும்; கூடலும் மதுரையையும்; கோயில் கொண்ட இருப்பிடமாகவுடைய; கோவலரே ஒப்பர் அரசர் போன்றிருக்கின்றார்; குன்றம் அன்ன மலை போன்ற; பாழி அம் வலிமையான அழகிய; ஓர் நான்கு ஒப்பற்ற நான்கு; தோளும் உடையர் தோள்களையுடையவர்; பண்டு இவர் தம்மையும் இதற்கு முன்பு; கண்டறியோம் நாம் இவரைப் பார்த்ததில்லை; வாழியரோ! பல்லாண்டு பல்லாண்டு; இவர் வாழ்க இவர்; வண்ணம் இவர் வடிவத்தின்; எண்ணில் பெருமையோ; மா கடல் போன்று பெரிய கடல்போன்றது; உளர் கையில் வெய்ய ஒரு கையில் ஒளியுள்ள; ஆழி ஒன்று ஏந்தி ஒரு சக்கரம் ஏந்தியும்; ஓர் சங்கு பற்றி மறு கையில் ஓரு சங்குமுடைய; அழகியவா! ஒருவர் இவருடைய ஒப்பற்ற அழகை; அச்சோ ஆவர் என்னவென்று கூறுவேன்!