Those Who Worship Sāranātha are in My Mind
சாரநாதனைத் தொழுவாரே என் மனத்தில் உள்ளார்
1579 அம்புருவவரிநெடுங்கண் * அலர்மகளை
வரையகலத்தமர்ந்து * மல்லல்
கொம்புருவவிளங்கினமேல்
இளங்கன்றுகொண்டெறிந்தகூத்தர்போலாம் *
வம்பலரும்தண்சோலை வண்சேறை
வானுந்துகோயில்மேய *
எம்பெருமான்தாள்தொழுவார்
எப்பொழுதும்என்மனத்தேஇருக்கின்றாரே.