49

Thiru Nilā Thingal Thundam

நிலாத்திங்கள் துண்டம்

Thiru Nilā Thingal Thundam

ஸ்ரீ நேரொருவரில்லாவல்லீ ஸமேத ஸ்ரீ நிலாதிங்கள்துண்டத்தான் ஸ்வாமிநே நமஹ

Thayar: Ner oruvar illā Valli (Nilathingal Thunda Thāyār)
Moolavar: Chandhra Chooda Perumāl, Nilāthingal thundathān
Utsavar: Nilāthingal thundathān
Vimaanam: Purushasuktha (Soorya)
Pushkarani: Chandhra
Thirukolam: Nindra (Standing)
Direction: West
Mandalam: Thondai Nādu
Area: Kanchipuram
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Search Keyword: Nilathingalthundam
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TNT 1.8

2059 நீரகத்தாய் நெடுவரையி னுச்சிமேலாய்!
நிலாத்திங்கள்துண்டகத்தாய்! நிறைந்தகச்சி
ஊரகத்தாய்! * ஒண்துரைநீர்வெஃகாவுள்ளாய்
உள்ளுவாருள்ளத்தாய்! * உலகமேத்தும்
காரகத்தாய்! கார்வானத்துள்ளாய்! கள்வா!
காமருபூங்காவிரியின்தென்பால்மன்னு
பேரகத்தாய்! * பேராதுஎன்நெஞ்சினுள்ளாய்!
பெருமான்உன்திருவடியேபேணினேனே. (2)
2059 ## நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய் *
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் * ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய் *
உள்ளுவார் உள்ளத்தாய் ** உலகம் ஏத்தும்
காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா *
காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் * பேராது என் நெஞ்சின் உள்ளாய் *
பெருமான் உன் திருவடியே பேணினேனே-8
2059. ##
neeragatthāy! neduvaraiyin ucchi mElāy! *
nilātthingaL thuNdatthāy! niRaindha kacchi-
ooragatthāy, * oNthuRain^eer veqhā uLLāy! *
uLLuvār uLLatthāy, ** ulagam Etthum-
kāragatthāy! kārvānath thuLLāy! kaLvā! *
kāmarupooNG kāviriyin thenpāl mannu-
pEragatthāy, * pErāthu en nencin uLLāy! *
perumān_un thiruvadiyE pENiNnEnE. (2) 8

Simple Translation

2059. You are in the hearts of your devotees and in Thiruneeragam, on the top of Thiruneermalai, Nilāthingalthundam in Thiruppadi, Thiruvuragam in flourishing Thirukkachi, and Thiruvekka surrounded with flourishing water. The whole world worships you Thirukkalvā, the god of Thirukkāragam and Thirukkārvanam. O thief, you stay in the sky and in Thirupper (Koiladi) where on the southern bank of the Kāviri beautiful flowers bloom in the groves. You, the highest one, stay in my heart and you will not leave me. I worship only your divine feet.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நீரகத்தாய்! திருநீரகத்தில் உள்ளவனே!; நெடுவரையின் திருவேங்கட மலையின்; உச்சி மேலாய்! உச்சியிலிருப்பவனே!; நிலாத்திங்கள் சந்திரனைப் போல் தாபம் போக்கும்; துண்டத்தாய்! பூமியின் ஒரு பாகத்தில் இருப்பவனே!; நிறைந்த கச்சி செழிப்பு நிறைந்த காஞ்சீபுரத்தில்; ஊரகத்தாய்! திருவூரகத்தில் இருப்பவனே!; ஒண் துரை நீர் அழகிய நீர்த்துறையின் கரையில்; வெஃகா உள்ளாய்! திருவெஃகாவில் உள்ளவனே!; உள்ளுவார் சிந்திப்பவரின்; உள்ளத்தாய்! உள்ளத்தில் உள்ளவனே!; உலகம் ஏத்தும் உலகமெல்லாம் துதிக்கும்படி; காரகத்தாய்! திருக்காரகத்தில் உள்ளவனே!; கார்வானத்து உள்ளாய்! திருக்கார்வானத்திலுள்ளவனே!; கள்வா! கள்வனே!; காமரு பூங் விரும்பத்தக்க அழகிய; காவிரியின் காவேரியின்; தென்பால் தென் புறமுள்ளவனே!; மன்னு பேரகத்தாய்! திருப்பேர்நகரில் உறைபவனே!; என் நெஞ்சில் என் நெஞ்சிலிருந்து; பேராது உள்ளாய்! நீங்காமல் இருப்பவனே!!; பெருமான்! பெருமானே!; உன் திருவடியே உன் திருவடிகளையே; பேணினேனே காண விரும்பினேனே
neeragaththAy Oh One who is giving divine presence in thiruneeragam dhivya dhEsam!; nedu varaiyin uchchi mElAy Oh One who stood at the top of tall and great thirumalai!; nilAththingaL thuNdaththAy Oh One who is giving divine presence in the divine place called nilAththingaL thuNdam!; niRaindha kachchi UragaththAy Oh One who is giving divine presence in the divine place called Uragam by pervading the whole of kachchi (by your qualities)!; oNthuRai neer vekhAvuLLAy Oh One who is in sleeping posture at the beautiful shore of water tank that is in thiruvehkA!; uLLuvAr uLLaththAy Oh One who is present in the hearts of those who think of you (as their leader)! (that is also a temple for Him);; ulagam Eththum kAragaththAy Oh One who stood in the divine place called ‘thirukkAragam’ for the whole world to worship!; kAr vAnaththuLLAy Oh One who lives in the divine place called kArvAnam!; kaLvA Oh the thief (who hid the divine form and not showing it to the devotees)! (there is a dhivya dhEsam called kaLvanUr);; kAmaru pUm kAviriyin then pAl mannu pEragaththAy well set in the town of thiruppEr (of appakkudaththAn) that is on the south shore of very beautiful kAvEri!; en nenjil pEradhu uLLAy Oh One who is showing Himself to my mind without break or going away!; perumAn Oh One having many many divine places!; un thiruvadiyE pENinEnE I am calling for your divine feet (wishing to see it).