Chapter 2

Āzhvār separated from Azhagar, cries out in his overwhelming grief; Emperumān comes to his rescue- (முந்நீர் ஞாலம்)

அழகரை முற்றும் அனுபவிக்க ஏலாது ஆழ்வார் கலங்க எம்பெருமான் அவரது கலக்கத்தைத் தீர்த்தல்
These divine hymns comprise Āzhvār's words filled with restless eagerness (words directed towards Bhagavān).
ஆழ்வார், தரித்திருக்கமாட்டாத துடிப்புடன் (பகவானிடம்) கூறும் வார்த்தைகள் நிரம்பிய பகுதி.
Verses: 3024 to 3034
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: will remove the suffering that the senses give
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 3.2.1

3024 முந்நீர்ஞாலம்படைத்த எம்முகில்வண்ணனே! *
அந்நாள்நீதந்த ஆக்கையின்வழியுழல்வேன் *
வெந்நாள்நோய்வீய வினைகளைவேரறப்பாய்ந்து *
எந்நாள்யானுன்னை இனிவந்துகூடுவனே? (2)
3024 ## முந்நீர் ஞாலம் படைத்த * எம் முகில் வண்ணனே *
அந் நாள் நீ தந்த * ஆக்கையின்வழி உழல்வேன் **
வெம் நாள் நோய் வீய * வினைகளை வேர் அறப் பாய்ந்து *
எந் நாள் யான் உன்னை * இனி வந்து கூடுவனே? (1)
3024 ## munnīr ñālam paṭaitta * ĕm mukil vaṇṇaṉe *
an nāl̤ nī tanta * ākkaiyiṉvazhi uzhalveṉ **
vĕm nāl̤ noy vīya * viṉaikal̤ai ver aṟap pāyntu *
ĕn nāl̤ yāṉ uṉṉai * iṉi vantu kūṭuvaṉe? (1)

Ragam

Kuṇḍakriya / குண்டக்கிரியா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My cloud-hued Lord, you raised this world surrounded by oceanic waters. In the body you granted me, I stray, following its errant ways. I don't know when my ills will be rooted out and when I will attain You.

Explanatory Notes

[Ālvār to the Lord:]—

(i) “I was like a wingless bird aṇd by giving me the limbs etc., you capacitated me for a career of gainful activity. But alas! the body, so kindly dowered by you, was misused by me and I have got all miseries heaped on my head. Now that I can hardly brook any separation from you, when will my deadly sins, the impediments for my union with you, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முந்நீர் ஞாலம் கடல் சூழ்ந்த இவ்வுலகை; படைத்த படைத்தவனும்; எம் முகில் மேகத்தைப் போன்றவனுமான; வண்ணனே! எம்பெருமானே!; அந் நாள் அந்த ஸ்ருஷ்டி காலத்தில்; நீ தந்த நீ கொடுத்த; ஆக்கையின் வழி சரீரத்தின் வழியிலே; உழல்வேன் போய் கெட்டுத்திரியும் நான்; வெந் நாள் அந்த துக்ககரமான நாட்களில்; நோய் வீய வியாதிகள் நீங்கி; வினைகளை வேர் பாபங்கள் வேருடன்; அறப் பாய்ந்து அறுக்கப்பட்டு; யான் இனி உன்னை அடியேன் இனி உன்னை; எந் நாள் வந்து எப்போது வந்து; கூடுவனே? அடையப் பெறுவேனோ?
munnīr having 3 types of water; gyālam universe; padaiththa em mugil vaṇṇanĕ created and because of such magnanimous act similar to that of dark clouds (that shower the rain irrespective of land or water), you became my saviour!; annāl̤ during the time of such srushti (creation); you; thandha gave (to reach you); ākkaiyin body-s; vazhi going in its ways (that adds bondage); uzhalvĕn me who is suffering (in garbha (womb), naraka (hell) etc); vem that which leads to a pitiable state (after having acquired knowledge); nāl̤ in such day; nŏy diseases (in the form of ahankāram (considering oneself to be body), artha (worldly wealth), kāma (worldly pleasure) etc); vīya to destroy; vinaigal̤ai karmas (which cause them); vĕr with its traces; aṛappāyndhu plucked and thrown away; yān ī (who used the senses whichwere supposed to be favourable towards you, against you); unnai you (who is the primary saviour); ini after being ungrateful; vandhu come (giving up this situation); kūduvan unite; en nāl̤ when is that?

TVM 3.2.2

3025 வன்மாவையமளந்த எம்வாமனா! * நின்
பன்மாமாயப் பல்பிறவியில்படிகின்றயான் *
தொன்மாவல்வினைத் தொடர்களை முதலரிந்து *
நின்மாதாள்சேர்ந்து நிற்பது எஞ்ஞான்றுகொலோ?
3025 வன் மா வையம் அளந்த * எம் வாமனா
நின் பல் மா மாயப் * பல் பிறவியில் படிகின்ற யான் **
தொல் மா வல்வினைத் * தொடர்களை முதல் அரிந்து *
நின் மா தாள் சேர்ந்து * நிற்பது எஞ்ஞான்றுகொலோ? (2)
3025 vaṉ mā vaiyam al̤anta * ĕm vāmaṉā
niṉ pal mā māyap * pal piṟaviyil paṭikiṉṟa yāṉ **
tŏl mā valviṉait * tŏṭarkal̤ai mutal arintu *
niṉ mā tāl̤ cerntu * niṟpatu ĕññāṉṟukŏlo? (2)

Ragam

Kuṇḍakriya / குண்டக்கிரியா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord Vāmaṉā, you measured the worlds, vast and mighty. As I remain caught up in the cycle of varied births, when will my age-old and violent sins be rooted out, allowing me to stay steadfast at Your lovely feet?

Explanatory Notes

[Lord to the Āzhvār:]—

“Well, if you couldn’t go to me, I came to you, spanned the whole universe, high and low, and set my feet on one and all, with no distinction of rich and poor, Saint or debauchee, land and water”.

[Ālvar to the Lord:]—

“Sire, it is a pity, even then, I was out of your reach. In spite of your initial help in endowing me with a body to + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வன் மா வையம் வலிமையுடைய பெரிய பூமியை; அளந்த எம் வாமனா! அளந்த வாமனனே!; நின் பல் மா மாய உன் மாயங்களுக்குக் கருவியான நான்; பல் பிறவியில் பல வகைப் பிறப்புக்களில்; படிகின்ற யான் அநுபவிக்கும் அடியேனின்; தொல் மா அனாதியான கொடிய; வல் வினை பாபங்களின்; தொடர்களை சுமைகளை; முதல் அரிந்து வேரோடு அறுத்து; நின் மா தாள் உன் சிறந்த திருவடிகளை; சேர்ந்து நிற்பது அடைந்து வாழ்த்தி வணங்கும்; எஞ்ஞான்றுகொலோ? நாள் என்றைக்கோ?
val being tight due to firmness; vast; vaiyam world; al̤andha measured (with your tender divine feet); em made me exist fully for him by such act; vāmanā ŏh vāmana!; nin for your sport; pal variegated (due to the qualities and resulting forms); very difficult to cross over; māyam in prakruthi (material realm) which is amaśing; pal piṛaviyil many different forms (such as dhĕva, manushya etc); padiginṛa living in a well fitting manner; yān ī; thol since time immemorial; countless; val difficult to eradicate; vinai sins; thodargal̤ai chains; mudhal with their cause; arindhu cut them off; nin your (who is apt to be attained); having great glories (that are to be attained); thāl̤ divine feet; sĕrndhu reach; niṛpathu stay there firmly (without moving away); engyānṛu kol when will that be?

TVM 3.2.3

3026 கொல்லாமாக்கோல் கொலைசெய்து, பாரதப்போர் *
எல்லாச்சேனையும் இருநிலத்தவித்தவெந்தாய்! *
பொல்லாவாக்கையின் புணர்வினையறுக்கலறா *
சொல்லாய்யானுன்னைச் சார்வதோர்சூழ்ச்சியே.
3026 கொல்லா மாக்கோல் * கொலை செய்து பாரதப் போர் *
எல்லாச் சேனையும் * இரு நிலத்து அவித்த எந்தாய் **
பொல்லா ஆக்கையின் * புணர்வினை அறுக்கல் அறா *
சொல்லாய் யான் உன்னைச் * சார்வது ஓர் சூழ்ச்சியே (3)
3026 kŏllā mākkol * kŏlai cĕytu pāratap por *
ĕllāc ceṉaiyum * iru nilattu avitta ĕntāy **
pŏllā ākkaiyiṉ * puṇarviṉai aṟukkal aṟā *
cŏllāy yāṉ uṉṉaic * cārvatu or cūzhcciye (3)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Master! With just a non-lethal horsewhip in Your hand, You routed the armies in this vast land during Bhārat's great battle. May You reveal the way to sever my connection with this burdensome body, which is so hard to escape, so that I may attain Your lovely feet.

Explanatory Notes

(i) It is sheer ignorance to hold that the great battle of Mahā Bhārata was won by the Pāṇḍavas. Actually it was Lord Kṛṣṇa, who got Mother Earth rid of her unwholesome burden, and it was indeed the purpose of His incarnation. Barring a few, on both sides (the five Pāṇḍavas, Aśvattāma, Kṛpācārya and Kṛtavarmā), all the rest were annihilated and it was all the work of Śrī + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொல்லா கொல்லுவதற்கு ஆயுதமில்லாமல்; மாக்கோல் குதிரையை விரட்டும் சாட்டை கொண்டே; கொலை எதிரிகளைக் கொலை; செய்து செய்து முடித்த; பாரதப் போர் பாரதப் போரில்; எல்லாச் சேனையும் எல்லா படைகளையும்; இரு நிலத்து இப்பெரிய பூமியில்; அவித்த எந்தாய்! அழித்த எம்பெருமானே!; பொல்லா துன்பங்களுக்குக் காரணமான; ஆக்கையின் இந்த சரீரத்தின்; புணர்வினை ஸம்பந்தத்தை; அறுக்கல் அறுக்க முயற்சித்தாலும்; அறா அறுக்க முடியவில்லை; யான் இதிலே அகப்பட்ட அடியேன்; உன்னை சார்வது உன்னை அடைவதற்கு; ஓர் சூழ்ச்சியே ஒரு உபாயத்தை; சொல்லாய் சொல்லியருள வேண்டும்
kollā tool which is not meant to kill; that which drives a horse; kŏl stick with thorn; kolai killing; seydhu done; bhāradhap pŏr in the mahābhāratha yudhdham (battle); ellāch chĕnaiyum all the armies (irrespective of them belonging to the enemies or pāṇdavas, those who are causing burden to the earth); iru nilaththu in the vast land (of dharmakshĕthra- the righteous place of kurukshĕthra); aviththa destroyed; endhāy my swāmy (lord and master)!; pollā that which causes disaster; ākkaiyin with the body; puṇarvinai connection; aṛukkal (if ī tried) to cut off; aṛā unable to do so;; yān me (who is caught in this); unnai you (who can eliminate my hurdles); chārvadhu to reach; ŏr distinct; sūzhchchi method; sollāy please tell (like you explained to arjuna)

TVM 3.2.4

3027 சூழ்ச்சிஞானச் சுடரொளியாகி * என்றும்
ஏழ்ச்சிக்கேடின்றி எங்கணும்நிறைந்தவெந்தாய்! *
தாழ்ச்சிமற்றெங்கும்தவிர்ந்து நின்தாளிணக்கீழ்
வாழ்ச்சி * யான்சேரும்வகை அருளாய்வந்தே.
3027 சூழ்ச்சி ஞானச் * சுடர் ஒளி ஆகி * என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி * எங்கணும் நிறைந்த எந்தாய் **
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து * நின் தாள் இணைக்கீழ் *
வாழ்ச்சி யான் சேரும் * வகை அருளாய் வந்தே (4)
3027 cūzhcci ñāṉac * cuṭar ŏl̤i āki * ĕṉṟum
ezhccik keṭu iṉṟi * ĕṅkaṇum niṟainta ĕntāy **
tāzhcci maṟṟu ĕṅkum tavirntu * niṉ tāl̤ iṇaikkīzh *
vāzhcci yāṉ cerum * vakai arul̤āy vante (4)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, Your radiant knowledge envelops everyone; You neither contract nor expand, but You are present everywhere at all times. Please come and tell me how I can dispel any thoughts other than You and dwell in reverence at Your lovely feet.

Explanatory Notes

[Āzhvār to the Lord:]—

“My Lord, let alone my failure to benefit by your Avatāras, as Vāmana and Kṛṣṇa. Even your Omnipresence, and omniscience, directed towards the uplift of your subject, has not delivered the goods in my case. It is now up to you to devise other ways of redeeming mt, if need be, through yet another incarnation, wholly for my sake.”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சூழ்ச்சி சூழ்ந்திருக்கும்; சுடர் ஒளி ஒளியுள்ள; ஞான ஆகி ஞானத்தையுடையவன் நீ; என்றும் என்றும் எப்போதும்; ஏழ்ச்சி விகசித்தலும்; கேடு இன்றி குவிதலும் இன்றி; எங்கணும் எவ்விடத்திலும்; நிறைந்த வியாபித்திருக்கின்ற; எந்தாய்! என் தந்தையே!; மற்று எங்கும் உன்னைத் தவிர எந்த விஷயத்திலும்; தாழ்ச்சி தவிர்ந்து ஆசையை தவிர்த்து; நின் தாள் இணைக் கீழ் உன் திருவடிகளின் கீழ்; வாழ்ச்சி வாழ்ந்திருக்கும் வாழ்வை; யான் சேரும் நான் அடையும்படி; வகை வந்தே என் முன்னே வந்து தோன்றி; அருளாய் அருள வேண்டும்
sūzhchchi surrounding (everything); gyānach chudar having the rays of knowledge; ol̤iyāgi being naturally self-effulgent; enṛum at all times; ĕzhchchi expansion; kĕdu contraction; inṛi not having; engaṇum everywhere; niṛaindha fully pervading; endhāy ŏh the lord who accepted me (like surrounding a town to capture a single person)!; maṝu except (you); engum in all aspects; thāzhchchi engagement in; thavirndhu skipped; nin your (apt); thāl̤ (enjoyable) divine feet; iṇai two; kīzh underneath; vāzhchchi living such life (of being subservient to you); yān ī (who have not done this before); sĕrum attaining; vagai method; vandhu coming and standing (in front of me assuming a particular form); arul̤āy mercifully tell me

TVM 3.2.5

3028 வந்தாய்போலேவந்தும் என்மனத்தினைநீ *
சிந்தாமற்செய்யாய் இதுவேஇதுவாகில் *
கொந்தார்க்காயாவின் கொழுமலர்த்திருநிறத்த
எந்தாய் * யான்உன்னை எங்குவந்தணுகிற்பனே?
3028 வந்தாய் போலே * வந்தும் என் மனத்தினை நீ *
சிந்தாமல் செய்யாய் * இதுவே இது ஆகில் **
கொந்து ஆர்க் காயாவின் * கொழு மலர்த் திரு நிறத்த *
எந்தாய் யான் உன்னை * எங்கு வந்து அணுகிற்பனே? (5)
3028 vantāy pole * vantum ĕṉ maṉattiṉai nī *
cintāmal cĕyyāy * ituve itu ākil **
kŏntu ārk kāyāviṉ * kŏzhu malart tiru niṟatta *
ĕntāy yāṉ uṉṉai * ĕṅku vantu aṇukiṟpaṉe? (5)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My Lord, your grand complexion is like a bunch of red flowers. If You continue to deny me Your helping hand and fail to guide my wandering mind, how can I attain You on my own? Please do appear before me, as You did for the sake of Gajendra and Prahlāda.

Explanatory Notes

In the preceding song, the Āzhvār requested the Lord to incarnate once more for his sake. The Lord tells the Āzhvār that, as Śrī Rāma, He was in this abode for eleven thousand years and, as Śrī Kṛṣṇa, He stayed here for one hundred years. It would be pretty difficult for Him to incarnate again. The Āzhvār, however, pleads that the Lord should incarnate for his sake, at + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வந்தாய் பிரகலாதன் கஜேந்திரனுக்கு வந்தது; போலே வந்தும் போல் வந்து; என் மனத்தினை என் மனத்தை; நீ சிந்தாமல் நீ சிதிலமாகாதபடி; செய்யாய் செய்யவில்லை; இதுவே உதவாமையாகிற இதுவே; இது ஆகில் நீடித்திருக்குமாகில்; கொந்து ஆர் கொத்துக் கொத்தாய்; காயாவின் காயாம்பூ; கொழு மலர் மலரின் சிறந்த; திரு நிறத்த நிறத்தையுடைய; எந்தாய்! எம்பெருமானே!; யான் உன்னை அடியேன் உன்னை; எங்கு வந்து எங்கு வந்து; அணுகிற்பனே அணுகுவேன்
vandhāy pŏlĕ as you came (for prahlādha, gajĕndhra); vandhum even if appeared; en my (me who desired to approach you); manaththinai heart; you (who helped when in danger); sindhāmal from becoming weak (thinking about the hurdles); seyyāy not doing; idhuvĕ this (being unhelpful ); idhu your true nature; āgil if it is; kondhu bunches; ār filled; kāyāvin kāyām (flax- a bluish flower); kozhu malar fresh flowers; thiruniṛaththa having such complexion; endhāy oh the master who won over me (by manifesting such beauty)!; yān ī (who cannot survive without your beauty); unnai you (who showed this beauty); engu where (how); vandhu come; aṇugiṛpan will be able to approach?

TVM 3.2.6

3029 கிற்பன்கில்லேனென்றிலன் முனநாளால் *
அற்பசாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன் *
பற்பல்லாயிரம் உயிர்செய்தபரமா! * நின்
நற்பொற்சோதித்தாள் நணுகுவதெஞ்ஞான்றே?
3029 கிற்பன் கில்லேன் * என்று இலன் முன நாளாய் (ல்) *
அற்ப சாரங்கள் * அவை சுவைத்து அகன்றொழிந்தேன் **
பற்பல் ஆயிரம் * உயிர் செய்த பரமா * நின்
நற்பொன் சோதித்தாள் * நணுகுவது எஞ்ஞான்றே? (6)
3029 kiṟpaṉ killeṉ * ĕṉṟu ilaṉ muṉa nāl̤āy (l) *
aṟpa cāraṅkal̤ * avai cuvaittu akaṉṟŏzhinteṉ **
paṟpal āyiram * uyir cĕyta paramā * niṉ
naṟpŏṉ cotittāl̤ * naṇukuvatu ĕññāṉṟe? (6)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

In the past, I did nothing good and did not avoid evil. I strayed away from you and became absorbed in petty pleasures. You have the power to animate myriads of souls at your will, oh, mighty Lord. When shall I attain your resplendent feet?

Explanatory Notes

[Alvar to the Lord:]—

“My Lord, I am guilty, both ways, not doing any good that will take me unto your lovely feet and at the same time, not desisting from evil, which puts me very much away from you. I strayed away from you, doing things as I liked. Seeing what you have done to myriads of souls for their uplift, 1 am sure I would not be asking of you too much if I prayed that you should redeem me and make me fit to attain your lustrous feet”.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன நாளால் கழிந்த காலங்களில்; கிற்பன் புண்ணியம் தரும் நல்ல செயல்களை; என்று இலன் செய்ய நான் இசையவில்லை; கில்லேன் பாப கர்மங்களைச் செய்யாமல்; என்று இலன் தவிர்க்கவும் இல்லை; அற்ப சாரங்கள் அல்ப விஷயங்களையே; அவை சுவைத்து அநுபவித்து; அகன்று உன்னை விட்டு நீங்கி; ஒழிந்தேன் கெட்டு ஒழிந்தேன்; பற்பல் ஆயிரம் எண்ணிறந்த ஜீவராசிகளை; உயிர் செய்த நினைத்தபடி உண்டாக்கவல்ல; பரமா! ஸாமர்த்தியம் படைத்தவனே!; நின் நற் பொன் உன்னுடைய பொன்மயமான; சோதித் தாள் ஒளியுள்ள திருவடிகளை; நணுகுவது அடியேன் அடைவது; எஞ்ஞான்றே? என்றைக்கோ?
muna nāl̤ āl in previous times; kiṛpan enṛu ilan (if told to -do-- that is for the well-being) ī will disagree saying -ī am incapable-;; killĕn enṛu ilan (if told to -refrain-- that it is not good to engage in evil activities) ī will not avoid engaging in such activities; aṛpam very insignificant; sārangal̤ having attractions; avai those diverse evil aspects; suvaiththu enjoyed them (wrongly thinking that they have real attraction); aganṛu ozhindhĕn (due to that) ī have gone far away [from emperumān]; pal pal many many; āyiram countless; uyir types of life forms; seydha able to create (as desired); paramā oh one who has great ability!; nin your (you who is apt master); nal spiritual (not made of worldly matter); pon very relishable; sŏdhi radiant; thāl̤ divine feet; naṇuguvadhu to attain; engyānru when?

TVM 3.2.7

3030 எஞ்ஞான்றுநாமிருந்திருந்து இரங்கிநெஞ்சே! *
மெய்ஞ்ஞானமின்றி வினையியல்பிறப்பழுந்தி *
எஞ்ஞான்றுமெங்கும் ஒழிவறநிறைந்துநின்ற *
மெய்ஞ்ஞானச்சோதிக் கண்ணனைமேவுதுமே?
3030 எஞ்ஞான்றும் நாம் இருந்து இருந்து * இரங்கி நெஞ்சே *
மெய்ஞ்ஞானம் இன்றி * வினை இயல் பிறப்பு அழுந்தி **
எஞ்ஞான்றும் எங்கும் * ஒழிவு அற நிறைந்து நின்ற *
மெய்ஞ் ஞானச் சோதிக் * கண்ணனை மேவுதுமே (7)
3030 ĕññāṉṟum nām iruntu iruntu * iraṅki nĕñce *
mĕyññāṉam iṉṟi * viṉai iyal piṟappu azhunti **
ĕññāṉṟum ĕṅkum * ŏzhivu aṟa niṟaintu niṉṟa *
mĕyñ ñāṉac cotik * kaṇṇaṉai mevutume (7)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My mind, deeply entangled in ignorance and sin, we have been journeying through countless births. Will we ever attain Kaṇṇaṉ, the lustrous and omniscient Lord, who pervades all things eternally?

Explanatory Notes

Mention of the Lord’s resplendent feet, in the preceding song, set the Āzhvār’s mind throbbing for them and now the Āzhvār hastens to disabuse his mind, sunk deep in age-long ignorance and accumulated sins, of its ill-conceived ambition.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; எஞ்ஞான்று எப்பொழுதும்; நாம் இருந்து இருந்து நிரந்தரமாக; இரங்கி வருந்தி; மெய்ஞ்ஞானம் உண்மையான ஞானம்; இன்றி இல்லாமையாலே; வினை இயல் பாப புண்யம் ஆகிய; பிறப்பு அழுந்தி பிறவிகளில் அழுந்தி; எஞ்ஞான்றும் எல்லாக் காலத்திலும்; எங்கும் எல்லா பொருள்களிலும் எப்போதும்; ஒழிவு அற ஒன்றுவிடாமல் அனைத்திலும்; நிறைந்து நின்ற நிறைந்து வியாபித்து நின்ற; மெய்ஞ்ஞான சோதி ஒளிமயமான ஞானமுடைய; கண்ணனை கண்ணனை; மேவுதுமே? அடைய முடியுமோ?
nenjĕ! ŏh heart!; engyānṛum always; irundhu irundhu being; irangi grieving (due to desire for the goal); mey gyānam true knowledge (which is the tool for attaining such goal); inṛi not having; vinai due to the sins (that are the hurdles for attaining such goal); iyal leading to; piṛappu births; azhundhi trapped; nām we (who have this as the routine); engyānṛum all times; engum in all entities; ozhivaṛa without leaving anything; niṛaindhu fully pervading; ninṛa stayed; mey gyānam eternal knowledge; sŏdhi having radiance of; kaṇṇanai krishṇa (who appeared to be easily approachable by his devotees); mĕvudhumĕ when will we reach?

TVM 3.2.8

3031 மேவுதுன்பவினைகளை விடுத்துமிலேன் *
ஓவுதலின்றி உன்கழல்வணங்கிற்றிலேன் *
பாவுதொல்சீர்க்கண்ணா! என்பரஞ்சுடரே! *
கூவுகின்றேன்காண்பான் எங்கெய்தக்கூவுவனே?
3031 மேவு துன்ப வினைகளை * விடுத்துமிலேன் *
ஓவுதல் இன்றி * உன் கழல் வணங்கிற்றிலேன் **
பாவு தொல் சீர்க் கண்ணா * என் பரஞ்சுடரே *
கூவுகின்றேன் காண்பான் * எங்கு எய்தக் கூவுவனே? (8)
3031 mevu tuṉpa viṉaikal̤ai * viṭuttumileṉ *
ovutal iṉṟi * uṉ kazhal vaṇaṅkiṟṟileṉ **
pāvu tŏl cīrk kaṇṇā * ĕṉ parañcuṭare *
kūvukiṉṟeṉ kāṇpāṉ * ĕṅku ĕytak kūvuvaṉe? (8)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I did not free myself from sins that breed many miseries, nor did I continually worship Your holy feet. My beloved Kaṇṇā, of supreme radiance and inherent grace, I call out to You now and again to behold You, the all-pervading one, but where and how can I truly attain You?

Explanatory Notes

[Āzhvār to the Lord:]—

“Sire, all along, I have been providing grist for the grinding mill of my senses but little did I do for my advancement. And now, I call you out, as if I have the necessary qualification to meet you. But you are everywhere, and in me too; you make me pounce upon your auspicious traits so natural to you that they attract even a sinner like me”.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துன்பம் மேவு பலவகைத் துயரங்களை விளைக்கவல்ல; வினைகளை பாபங்களை; விடுத்தும் இலேன் போக்கவும் இல்லை; ஓவுதல் இன்றி நிரந்தரமாக; உன் கழல் உன் திருவடிகளை; வணங்கிற்று இலேன் வணங்கியதும் இல்லை; பாவு தொல் எங்கும் பரவிய இயற்கையான; சீர்க் கண்ணா! நற்குணங்களையுடைய கண்ணனே!; என் பரஞ்சுடரே! என் பரஞ்சுடரே!; காண்பான் உன்னைக் காணும்பொருட்டு; கூவுகின்றேன் அழைக்கின்றேன் கதறுகின்றேன்; எங்கு எய்த எங்கு எப்படி உன்னை; கூவுவனே அடையமுடியும்?
mĕvu thunbam having inseparable sorrows; vinaigal̤ai sins; viduththum ilĕn did not give up (by engaging in thapa (penance), gyāna (knowledge), sama (good qualities) etc); ŏvudhal inṛi constantly; un your (the apt you); kazhal divine feet; vaṇangiṝilĕn did not worship (as said in thiruvāimozhi 1.3.5 -vaṇakkudaith thavaneṛi #); pāvu pervaded (everywhere); thol natural; sīr having qualities (for protection [of his devotees]); kaṇṇā being krishṇa; en for me whose desires are triggered by; param sudarĕ oh one who is having infinitely radiant form!; kāṇbān to see; kūvuginṛĕn crying out (like those who engaged in various processes and called out for you since you did not appear even after such efforts); engu where; eydha to reach; kūvuvan will ī call?

TVM 3.2.9

3032 கூவிக்கூவிக் கொடுவினைத்தூற்றுள்நின்று *
பாவியேன்பலகாலம் வழிதிகைத்தலமர்கின்றேன் *
மேவியன்றாநிரைகாத்தவன் உலகமெல்லாம்
தாவியவம்மானை * எங்கினித்தலைப்பெய்வனே?
3032 கூவிக் கூவிக் * கொடுவினைத் தூற்றுள் நின்று *
பாவியேன் பல காலம் * வழி திகைத்து அலமர்கின்றேன் **
மேவி அன்று ஆ நிரை காத்தவன் * உலகம் எல்லாம் *
தாவிய அம்மானை * எங்கு இனித் தலைப்பெய்வனே? (9)
3032 kūvik kūvik * kŏṭuviṉait tūṟṟul̤ niṉṟu *
pāviyeṉ pala kālam * vazhi tikaittu alamarkiṉṟeṉ **
mevi aṉṟu ā nirai kāttavaṉ * ulakam ĕllām *
tāviya ammāṉai * ĕṅku iṉit talaippĕyvaṉe? (9)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Caught up in the dense entanglement of worldly life, the source of dire sins, I lost my way and wandered for ages. I repeatedly call upon my Lord, who once shepherded cows and measured all the worlds. Where and how shall I truly find Him?

Explanatory Notes

[Āzhvār to the Lord:]—

“My Lord, as Śrī Kṛṣṇa, you protected the cows in the pastoral village of Gokula and not a drop of rain fell on them although it was pouring down with mad fury for a whole week. And then, when you spanned the entire universe, as Tṛvikrama, you set your lovely feet on one and all but I eluded you, even then. Having missed such a golden opportunity, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொடு கொடிய; வினை பாவங்களுக்கு பிறப்பிடமாகிய; தூற்றுள் நின்று ஸம்ஸாரமாகிய புதரில் அகப்பட்டு; பலகாலம் பலகாலம்; வழி திகைத்து வழி தெரியாமல் திகைத்து; அலமர்கின்றேன் வருந்திக் கிடக்கின்ற; பாவியேன் மகா பாபியான நான்; அன்று மேவி ஆ நிரை அன்று உள்ளமுவந்து பசுக்களை; காத்தவன் காத்தவனும்; உலகம் எல்லாம் உலகம் எல்லாம்; தாவிய தாவி அளந்தவனுமான; அம்மானை எம்பெருமானை; கூவிக் கூவி கூவிக் கூவிப் பலகாலும் அழைத்தும்; எங்கு இனி கிடைக்காதவனை இனி எங்கே; தலைப் பெய்வனே சென்று அவனை அடைவேன்
kodu cruel; vinai source for sins; thūṝul̤ being caught in the quagmire (samsāram- material realm, where one cannot escape from); ninṛu staying here; pala kālam for long time; vazhi way (to escape); thigaiththu being confused; alamaruginṛĕn toiled (in such situation); pāviyĕn me who is very sinful; anṛu back when (you helped by giving sticks to the cowherd boys to herd the cows); mĕvi with full heart (instead of just to accomplish the task); ānirai cows; kāththavan you who protected; ulagamellām towards all worlds (unlike limiting to a single place [like in krishṇāvathāram]); thāviya you who performed the act of thraivikrama (being victorious over the three worlds); ammānai sarva swāmy (the master of all); ini after missing out back then; kūvik kūvi crying out again and again with great grief; engu where; thalaip peyvan will ī reach?

TVM 3.2.10

3033 தலைப்பெய்காலம் நமன்தமர்பாசம்விட்டால் *
அலைப்பூணுண்ணும் அவ்வல்லலெல்லாமகல *
கலைப்பல்ஞானத்து என்கண்ணனைக்கண்டுகொண்டு *
நிலைப்பெற்றென்னெஞ்சம்பெற்றது நீடுயிரே.
3033 தலைப்பெய் காலம் * நமன்தமர் பாசம் விட்டால் *
அலைப்பூண் உண்ணும் * அவ் அல்லல் எல்லாம் அகல **
கலைப் பல் ஞானத்து * என் கண்ணனைக் கண்டுகொண்டு *
நிலைப் பெற்று என் நெஞ்சம் பெற்றது * நீடு உயிரே (10)
3033 talaippĕy kālam * namaṉtamar pācam viṭṭāl *
alaippūṇ uṇṇum * av allal ĕllām akala **
kalaip pal ñāṉattu * ĕṉ kaṇṇaṉaik kaṇṭukŏṇṭu *
nilaip pĕṟṟu ĕṉ nĕñcam pĕṟṟatu * nīṭu uyire (10)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Gruesome miseries, akin to Yama’s burden, have come to an end, and I have seen Kaṇṇaṉ, my beloved Lord, comprehended through many sacred texts. My mind is now steady, and my soul has been restored to its original purity and true stature.

Explanatory Notes

(i) Śrī Nampiḷḷai elucidates the context of this song, as follows:

Finding the Āzhvār in an extremely critical condition, the Lord calls upon him to enjoy His Iconic Form in Tiruvēṅkaṭaṃ and sustain himself. Thereupon, the Āzhvār feels greatly relieved and gives vent to his sense of relief, in this song.

(ii) Being away from the Lord is as gruesome as suffering + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நமன் தமர் யமபடர்கள்; தலைப் பெய் காலம் வந்து கிட்டுங்காலம்; பாசம் விட்டால் பாசக் கயிற்றை வீசினால்; அலைப்பூண் அவர்களால் ஏற்படும் துயரம்; உண்ணும் அநுபவிக்குமாப் போலே வந்த; அ அல்லல் எல்லாம் அந்த துயரங்களெல்லாம்; அகல நீங்க; பல் பலவகைப்பட்ட; கலை சாஸ்த்ரங்களாலே; ஞானத்து அறியப்படும்; என் கண்ணனை என் கண்ணனை; கண்டு கொண்டு காணப்பெற்று; என் நெஞ்சம் என் மனமானது; நிலைப் பெற்று நிலைப் பெற்றது; உயிரே ஆத்மாவும்; நீடு பெற்றது நித்யத்வத்தைப் பெற்றது
naman thamar the servitors of yama; thalaip pey kālam in the last moments; pāsam rope; vittāl throw; alaippūṇ being tortured; uṇṇum such as experiencing it (due to seeing enemies); a that; allal ellām sorrows; agala to eliminate; pal many types of; kalai vĕdhams; gyānam having known; en [emperumān] who is easily approachable by me; kaṇṇanai krishṇa; kaṇdu koṇdu having seen; en nenjam my heart (which is broken); nilai stability; peṝu acquired; uyir āthmā (which was going to be finished due to grief); nīdu eternity; peṝadhu acquired

TVM 3.2.11

3034 உயிர்களெல்லாவுலகமுமுடையவனை *
குயில்கொள்சோலைத் தென்குருகூர்ச்சடகோபன் *
செயிரில்சொல்லிசைமாலை ஆயிரத்துள்இப்பத்தும் *
உயிரின்மேலாக்கை ஊனிடையொழிவிக்குமே. (2)
3034 ## உயிர்கள் எல்லா * உலக(மு)ம் உடையவனை *
குயில் கொள் சோலைத் * தென் குருகூர்ச் சடகோபன் **
செயிர் இல் சொல் இசை மாலை * ஆயிரத்துள் இப் பத்தும் *
உயிரின்மேல் ஆக்கை * ஊனிடை ஒழிவிக்குமே (11)
3034 ## uyirkal̤ ĕllā * ulaka(mu)m uṭaiyavaṉai *
kuyil kŏl̤ colait * tĕṉ kurukūrc caṭakopaṉ **
cĕyir il cŏl icai mālai * āyirattul̤ ip pattum *
uyiriṉmel ākkai * ūṉiṭai ŏzhivikkume (11)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

These ten songs from the thousand-song hymnal garland, chaste and sweet, composed by Caṭakōpaṉ of Kurukūr, where Koels joyfully sing in the orchards, are in adoration of the Sovereign Master of all worlds and beings. Chanting these songs will free the chanters from their fleshy shackles.

Explanatory Notes

(i) The Āzhvār invests the Lord and the surroundings with his own feelings. Now that he has been put back on his feet, he sees in the Lord a special aura, and His ownership of all things and souls now becomes more pronounced, with the resuscitation of the Āzhvār himself.

(ii) Kurukūr is described, in this song, as a lovely place abounding in orchards, where koels sing + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எல்லா உயிர்கள் எல்லா உயிர்களையும்; உலகமும் உலகங்களையும் உடைமையாக; உடையவனை உடையவனைக் குறித்து; குயில் கொள் குயில்களையுடைய; சோலை சோலைகள் சூழ்ந்த; தென் குருகூர் குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார் அருளிச்செய்த; செயிர் இல் குற்றமற்ற; சொல் சொற்களைக் கொண்டு; இசை மாலை இசையோடுங்கூடின மாலையான; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுக்குள்; இப் பத்தும் இப்பத்துப் பாசுரங்களும்; உயிரின் மேல் ஆத்மாவுக்கு பந்தமான; ஆக்கை பிறவிக்கு காரணமான உடலையும்; ஊனிடை கர்மத்தையும்; ஒழிவிக்குமே போக்கும்
ellā uyirgal̤ all living beings; ellā ulagamum all worlds; udaiyavanai one who owns; kuyil kol̤ having cuckoos; sŏlai having gardens; then beautiful; kurugūrch chatakŏpan mercifully spoken by nammāzhvār who is the leader of āzhvārthirunagari; seyir poetic defects; il without; sol having words; isai with music/tune; mālai having garland; āyiraththul̤ among the thousand; ippaththum this decad; uyirin mĕl that which is unnatural and cause of bondage for the āthmā; ūn ākkai idai from the body which is made of flesh etc; ozhivikkum will free