Chapter 7

Song of the 12 names - (கேசவன் தமர்)

பன்னிரு நாமப் பாட்டு
Upon realizing Bhagavān’s love and affection for him, Āzhvār elaborates on the immense help rendered by Bhagavān in detail here in these hymns.
பகவான் தம்மீது வைத்திருக்கும் பேரன்பைக் கண்டு, அவரது பேருதவியை ஆழ்வார் விரிவாகக் கூறுகிறார்.
Verses: 2967 to 2979
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: தக்கராகம்
Timing: 6.00-7.30 PM
Recital benefits: will reach the feet of the highest one
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 2.7.1

2967 கேசவன்தமர் கீழ்மேலெமரேழெழுபிறப்பும் *
மாசதிரிதுபெற்று நம்முடைவாழ்வுவாய்க்கின்றவா! *
ஈசனென்கருமாணிக்கமென்செங்கோலக்கண்ணன் விண்ணோர்
நாயகன் * எம்பிரானெம்மான் நாராயணனாலே. (2)
2967 ## கேசவன் தமர் * கீழ் மேல் எமர் ஏழ் எழு பிறப்பும் *
மா சதிர் இது பெற்று * நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா! **
ஈசன் என் கருமாணிக்கம் என் செங்கோலக் கண்ணன் * விண்ணோர்
நாயகன் * எம் பிரான் எம்மான் * நாராயணனாலே (1)
2967 ## kecavaṉ tamar * kīzh mel ĕmar ezh ĕzhu piṟappum *
mā catir itu pĕṟṟu * nammuṭai vāzhvu vāykkiṉṟavā! **
īcaṉ ĕṉ karumāṇikkam ĕṉ cĕṅkolak kaṇṇaṉ * viṇṇor
nāyakaṉ * ĕm pirāṉ ĕmmāṉ * nārāyaṇaṉāle (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My delectable blue gem, Master of all, with beautiful red-lotus eyes, and Chief of the Nithyasuris, Nārāyaṇaṉ, my Lord and Benefactor, has elevated all who are associated with me as Kēcavā's (His) devotees, across seven generations up and down. How grand is the growth of our spiritual wealth!

Explanatory Notes

(i) ‘Kēcava’ yields three meanings, viz,:

(a) One with lovely locks of hair,
(b) Slayer of Keśi, the demon—Śrī Kṛṣṇa and
(c) Progenitor of Brahmā and Śiva.

(ii) Reference to seven generations, up and down, follows the trend in the Vedic texts.

(iii) The spiritual growth resulting from the Lord’s spontaneous grace is indeed astounding; the progress made by our own efforts will but be tiny in comparison.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஈசன் எனக்கு ஸ்வாமியாய்; என் கருமாணிக்கம் எனக்கு நீலரத்தினம் போன்றவனாய்; என் செங்கோல சிவந்த கண்களயுடைய; கண்ணன் கண்ணனாய்; விண்ணேர் நித்யஸூரிகளுக்கு; நாயகன் நாயகனாய்; எம் பிரான் எம்மான் எனக்கு தலைவனான; நாராயணனாலே நாராயணனால்; கீழ் மேல் என்னைச்சேர்ந்தவர்கள் கீழ் மேல்; ஏழ் ஏழு பிறப்பும் ஏழ் ஏழ் பிறப்புக்களிலும்; கேசவன் தமர் கேசவன் அடியாரானார்கள்; எமர் இது என்னைச் சேர்ந்தவர்கள்; மா சதிர் பெற்று இந்த பெரிய சிறப்பைப் பெற்று; நம்முடை நம்முடைய; வாழ்வு வாய்க்கின்றவா! வாழ்வு வளருகிறபடி என்னே!
īsan having lordship (towards everyone); en karumāṇikkam (instead of such common aspect towards everyone) showing his blue-emerald like form; en sem kŏlak kaṇṇan (contrasting his bluish form) making me exist fully for him with his reddish beautiful divine eyes; viṇṇŏr nāyagan acknowledged by the nithyasūris too; empirān giving me joy; emmān due to being my lord; nārāyaṇālĕ by ṣrīman nārāyaṇan (who has unlimited vāthsalyam (motherly forbearance); kīzh mĕl ĕzh ezhu piṛappum seven generations of ancestors and descendants; kĕṣavan thamar devotees of kĕṣava (who is greater than all); emar mine; idhu this (unconditional acknowledgement of bhagavān); great; sadhir glory; peṝu having acquired; nammudaiya our; vāzhvu this wealth of ṣrīvaishṇavam; vāykkinṛavā flourishing!

TVM 2.7.2

2968 நாரணன் முழுவேழுலகுக்கும்நாதன் வேதமயன் *
காரணம்கிரிசை கருமமிவை முதல்வனெந்தை *
சீரணங்கமரர்பிறர்பலரும் தொழுதேத்தநின்று *
வாரணத்தைமருப்பொசித்தபிரான் என்மாதவனே.
2968 நாரணன் முழு ஏழ் உலகுக்கும் * நாதன் வேத மயன் *
காரணம் கிரிசை கருமம் இவை * முதல்வன் எந்தை **
சீர் அணங்கு அமரர் பிறர் பலரும் * தொழுது ஏத்த நின்று *
வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் * என் மாதவனே (2)
2968 nāraṇaṉ muzhu ezh ulakukkum * nātaṉ veta mayaṉ *
kāraṇam kiricai karumam ivai * mutalvaṉ ĕntai **
cīr aṇaṅku amarar piṟar palarum * tŏzhutu etta niṉṟu *
vāraṇattai maruppu ŏcitta pirāṉ * ĕṉ mātavaṉe (2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Nāraṇaṉ, the Supreme support of all the worlds, ordains everything, including cause, effect, and action. He permeates the Vedas and is adored by the Nithyasuris (exalted Celestials) and all others. Mātavaṇ, who killed the giant tusker, is my beneficent Lord.

Explanatory Notes

(i) ‘Nārāyaṇa’, as a Bahuvrīhi compound, brings out the meaning that the Lord is the In-dweller of all things and creatures having name and form:

(ii) The Tatpuruṣa compound of the word reveals the Lord as sustaining the whole universe.

(iii) ‘Nāra’ treats of the objects pervaded by the Lord; One aspect of ‘ayana’ spotlights the Lord as the ‘Means’ and another + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாரணன் நாராயணனும்; முழு ஏழ் உலகுக்கும் எல்லா உலகங்களுக்கும்; நாதன் தலைவனும்; வேதமயன் வேதத்தின் வடிவமும்; காரணம் கிரிசை காரணம் காரியம்; கருமம் இவை இவற்றுக்கான பலன் ஆகியவற்றுக்கு; முதல்வன் முதல்வனும்; எந்தை என் தந்தையானவன்; சீர் அணங்கு சிறந்த குணங்களும் புகழுமுடைய; அமரர் பிறர் பலரும் நித்யஸூரிகளும் மற்றும் பலரும்; தொழுது ஏத்த நின்று தொழுது ஏத்தும்படி நின்றவன்; வாரணத்தை குவலயாபீட யானையின்; மருப்பு ஒசித்த கொம்பை முறித்த; பிரான் உபகாரகனான திருமால்; என் மாதவனே எம் பெருமானே!
nāraṇan one who has the name nārāyaṇa; muzhu ĕzh ulagukkum for all worlds; nādhan being the swāmi (nātha, lord); vĕdhamayan he being revealed by vĕdham (which primarily speaks about this name); kāraṇam cause for kriyā (activity); kirisai kriyā, activity; karumam kāryam, which is the result of such activity; ivai for these; mudhalvan being the prime cause; sīr one who is having [auspicious] qualities; aṇangu divine; amarar dhĕvas (celestial beings); piṛar rishis (sages), manushyas (humans) et al; palarum all; thozhudhu worshipping; ĕththa to be praised; ninṛu stood; vāraṇaththai elephant named kuvalyāpīdam; maruppu tusk; osiththa broke; pirān being the most generous lord; en revealing to me (that all these aspects which fall under the category of nāra (groups of eternal entities) are his wealth); mādhavan krishṇa who is ṣriya:pathi (lord of ṣrī mahālakshmi); endhai is my master who made me fully exist for him

TVM 2.7.3

2969 மாதவனென்றதேகொண்டு என்னையினியிப்பாற்பட்டது *
யாதவங்களும்சேர்கொடேனென்று என்னுள்புகுந்திருந்து *
தீதவம்கெடுக்குமமுதம் செந்தாமரைக்கண்குன்றம் *
கோதவமிலென்கன்னற்கட்டிஎம்மானென்கோவிந்தனே.
2969 மாதவன் என்றதே கொண்டு * என்னை இனி இப்பால் பட்டது *
யாது அவங்களும் சேர்கொடேன் என்று * என்னுள் புகுந்து இருந்து **
தீது அவம் கெடுக்கும் அமுதம் * செந்தாமரைக் கண் குன்றம் *
கோது அவம் இல் என் கன்னல் கட்டி * எம்மான் என் கோவிந்தனே (3)
2969 mātavaṉ ĕṉṟate kŏṇṭu * ĕṉṉai iṉi ippāl paṭṭatu *
yātu avaṅkal̤um cerkŏṭeṉ ĕṉṟu * ĕṉṉul̤ pukuntu iruntu **
tītu avam kĕṭukkum amutam * cĕntāmaraik kaṇ kuṉṟam *
kotu avam il ĕṉ kaṉṉal kaṭṭi * ĕmmāṉ ĕṉ kovintaṉe (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

I casually spoke the name 'Mātavaṉ', and yet my Lord Kōvintaṉ entered within me, removing all evils. The lotus-eyed Lord, my flawless nectar, my firm rock, now stands solid within me.

Explanatory Notes

(i) ‘Madhava’ is the Lord’s name, most intimately associated with the Mother, Lakṣmī, meaning the ‘Consort of Mā’ and, for this reason, most endearing to Him. Śrī Parāśara Bhaṭṭar tells Goddess Raṅganāyakī, enshrined in Śrīraṅgam, that the Lord is dear to the devotees because of Her association with Him (śloka 51 of Śrī guṇaratnakośam [Guṇaratnakośa])

In aphorism 111 + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம்மான் எம்மானான; என் கோவிந்தனே என் கோவிந்தன்; மாதவன் என்றதே மாதவன் என்று நான் வாயினால்; கொண்டு என்னை சொன்னதையே கொண்டு எனக்கு; இனி இப்பால் பட்டது இனிமேலுள்ள காலமெல்லாம்; யாது அவங்களும் யாதொரு தீங்கும்; சேர்கொடேன் என்று சேரவிடமாட்டேன் என்றான்; என்னுள் புகுந்து இருந்து என்னுள் புகுந்து இருந்து; தீது அவம் பலவகைப் பாவங்களையும்; கெடுக்கும் போக்கி அருளும்; அமுதம் அமுதம் போன்றவனும்; செந்தாமரைக் கண் சிவந்த கண்களையுடையவனும்; குன்றம் குன்றம் போன்றவனுமானவன்; கோது அவம் இல் மேலும் கோதும் அவமுமில்லாத; கன்னல் கட்டி வெல்லக்கட்டி போல்; என் எனக்கு இனியவன் ஆனான்
en for me; gŏvindhan one who appeared as krishṇa; emmān one who is my swāmi (lord); mādhavan ṣrīmān (mādhava- the lord of lakshmi); enṛadhĕ considering that word (which was uttered without heart-s intent) alone; koṇdu having that as the reason; ennai me (who does not know the difference between different utterings); ini after uttering; ippāl pattadhu for the subsequent times; avangal̤ (avam- sin/defect) defects such as avidhyā (ignorance); yādhum completely; sĕrkodĕn will not let them approach/affect; enṛu vowing that; en ul̤ in my heart; pugundhu entered; irundhu stayed there without any other thought; thīdhu vices (which were committed knowingly); avam (incidental) vices; kedukkum destroying; amudham eternally sweet; sem reddish; thāmarai lotus like; kaṇ divine eyes; kunṛam letting me experience his well established divine form; kŏdhu the type of defect that arises due to mixing with other objects; avam the type of defect that arises due to being cooked; il not having; en kannal katti sweet like a block of sugar

TVM 2.7.4

2970 கோவிந்தன் குடக்கூத்தன் கோவலனென்றென்றே குனித்து *
தேவும்தன்னையும் பாடியாடத்திருத்தி * என்னைக்கொண்டுஎன்
பாவந்தன்னையும்பாறக்கைத்து எமரேழெழுபிறப்பும் *
மேவும்தன்மையமாக்கினான் வல்லனெம்பிரான்விட்டுவே.
2970 கோவிந்தன் குடக் கூத்தன் * கோவலன் என்று என்றே குனித்து *
தேவும் தன்னையும் * பாடி ஆடத் திருத்தி * என்னைக் கொண்டு என் **
பாவம் தன்னையும் * பாறக் கைத்து எமர் ஏழ் எழு பிறப்பும் *
மேவும் தன்மையம் ஆக்கினான் * வல்லன் எம்பிரான் விட்டுவே (4)
2970 kovintaṉ kuṭak kūttaṉ * kovalaṉ ĕṉṟu ĕṉṟe kuṉittu *
tevum taṉṉaiyum * pāṭi āṭat tirutti * ĕṉṉaik kŏṇṭu ĕṉ **
pāvam taṉṉaiyum * pāṟak kaittu ĕmar ezh ĕzhu piṟappum *
mevum taṉmaiyam ākkiṉāṉ * vallaṉ ĕmpirāṉ viṭṭuve (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Gōvintaṉ, the pot-dancer and cowherd, the Supreme Lord, has me singing and dancing in awe of His glory. He has blessed me, driving away my sins, and bestowed His grace on those connected to me for generations. How powerful is Viṣṇu, my great benefactor!

Explanatory Notes

(i) The Āzhvār is lost in admiration of the immense prowess of Lord Viṣṇu, in redeeming him and placing him on a par with the Evcr-free angels in spiritual world (Nitya Sūrīs), a literal transformation of a base metal into gold. All his sins destroyed, he has been endowed with a mind steeped in the hilarious enjoyment of the Lord’s glory. His amazing simplicity (Saulabhya) + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வல்லன் சக்திமானாய்; விட்டு விஷ்ணுபகவான் வியாபித்தவனாய்; எம் பிரான் என்னை என்னை அங்கீகரித்தவனாய்; கோவிந்தன் கோவிந்தன் என்றும்; குடக்கூத்தன் குடக்கூத்தாடுபவன் என்றும்; கோவலன் கோவலன் என்றும் இத்தகைய; என்று என்றே நாமங்களையே சொல்லி; குனித்து கூத்தாடி; தேவும் தன்னையும் மேன்மையையும் எளிமையையும்; பாடி ஆட திருத்தி புகழ்ந்துபாடி ஆட அருள்புரிந்து; என்னைக் கொண்டு அடியேனை அடிமை கொண்டு; என் பாவம் தன்னையும் எனது பாவங்களையும்; பாறக் கைத்து சிதறும்படி ஓட்டி; எமர் என்னைச் சேர்ந்தவர்களை; ஏழ் எழு பிறப்பும் ஏழ் ஏழு பிறப்பும்; மேவும் தன்னை அடையும்படியான; தன்மையம் தன்மை உள்ளவர்களாக; ஆக்கினான் ஆக்கினான்
vallan being capable (of completing any task he desires); vittu pervading all objects [as vishṇu]; empirān my lord who acknowledged me (like rounding up a town to catch a single person]; gŏvindhan (suiting his birth) having abundance of cows; kudak kūththan (expressing the joy of such abundance of cattle through) being a dancer (with pots); kŏvalan having a birth in cowherd clan (which matches such wealth and activities); enṛu enṛĕ saying these aspects individually; kuniththu dancing out of great joy; thĕvum dhĕvathvam- supremacy (which is the cause for such simplicity); thannaiyum his special aspect of simplicity; pādi singing (to express the joy); āda to dance; thiruththi reformed me (to be on a par with nithyasūris like an alchemist who would change iron to gold); ennai me; koṇdu accepting (me as his own); en my; pāvam thannaiyum sins; pāṛa to run away; kaiththu drove; emar those who are related to me; ĕzh ezhu piṛappum seven times seven births; mĕvum thanmaiyum made us to desire for him and attain him; ākkinān done

TVM 2.7.5

2971 விட்டிலங்குசெஞ்சோதித் தாமரைபாதம்கைகள்கண்கள் *
விட்டிலங்குகருஞ்சுடர் மலையேதிருவுடம்பு *
விட்டிலங்குமதியம்சீர்சங்கு சக்கரம்பரிதி *
விட்டிலங்குமுடியம்மான் மதுசூதனன்தனக்கே.
2971 விட்டு இலங்கு செஞ்சோதித் * தாமரை பாதம் கைகள் கண்கள் *
விட்டு இலங்கு கருஞ்சுடர் * மலையே திரு உடம்பு **
விட்டு இலங்கு மதியம் சீர் * சங்கு சக்கரம் பரிதி *
விட்டு இலங்கு முடி அம்மான் * மதுசூதனன் தனக்கே (5)
2971 viṭṭu ilaṅku cĕñcotit * tāmarai pātam kaikal̤ kaṇkal̤ *
viṭṭu ilaṅku karuñcuṭar * malaiye tiru uṭampu **
viṭṭu ilaṅku matiyam cīr * caṅku cakkaram pariti *
viṭṭu ilaṅku muṭi ammāṉ * matucūtaṉaṉ taṉakke (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My Lord, Matucūtaṉ, wears a majestic and exceedingly bright crown. His eyes, hands, and feet are as lovely as red and broad lotuses. His body shines like a blue mountain, while His conch resembles the bright Moon and His discus, a radiant Sun.

Explanatory Notes

Tirumāḻai Āṇṭāṉ told Rāmānuja that this song reveals how the Āzhvār was attracted to the Lord through the display of His exquisite personal charms and ascribed this interpretation to his Master, Śrī Āḷavantār (Yāmuṉa) Śrī Rāmānuja was unusually quiet and when asked by the Instructor whether he had nothing to say against, as he very often did, Śrī Rāmānuja signified his + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விட்டு இலங்கு நன்றாக பரந்து விளங்கும்; முடி அம்மான் முடியுடைய; மதுசூதனன் தனக்கு மதுசூதனனுக்கு; பாதம் கைகள் கண்கள் பாதம் கைகள் கண்கள்; விட்டு இலங்கு விரிந்து விளங்குகின்ற; செஞ்சோதி சிவந்த சுடரையுடைய; தாமரை தாமரைப்பூக்களேயாம்; திரு உடம்பு திரு உடம்பு; விட்டு இலங்கு தரும் மலர்ந்து விளங்கும்; கருஞ் சுடர் மலையே நீல ஒளியுடைய மலை போன்றது; சீர் சங்கு சிறந்த சங்கானது; விட்டு இலங்கு களங்கமின்றி விளங்கும்; மதியம் சந்திரனைப் போன்றது; சக்கரம் பரிதி சக்கரம் சூரியனைப் போன்றது
vittu being vishṇu; vittu spread; ilangu shining; mudi having a crown; ammān being the lord/master; madhusūdhanan thanakku for madhusūdhana; ilangu adding splendour; sem reddish; sŏdhi having radiance; thāmaraiyĕ like a lotus flower; pādham divine feet; kaigal̤ divine hands; kaṇgal̤ divine eyes; vittu well expanded; ilangu shining; karum bluish; sudar having rays; malaiyĕ like a mountain; thiru beautiful; udambu form; sīr beautiful; sangu his pānchajanyam- conch; vittu expanded; ilangu shining; madhiyamĕ like the moon; chakkaram sudharṣana chakram- disc (wheel); vittilangu similar (expanded and shining); paridhiyĕ like the sun

TVM 2.7.6

2972 மதுசூதனையன்றிமற்றிலேனென்று எத்தாலும்கருமமின்றி *
துதிசூழ்ந்தபாடல்கள்பாடியாட நின்றூழியூழிதொறும் *
எதிர்சூழல்புக்கெனைத்தோர்பிறப்பும் எனக்கேயருள்கள் செய்ய *
விதிசூழ்ந்ததாலெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே.
2972 மதுசூதனை அன்றி மற்று இலேன் என்று * எத்தாலும் கருமம் இன்றி *
துதி சூழ்ந்த பாடல்கள் பாடி ஆட * நின்று ஊழி ஊழிதொறும் **
எதிர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் * எனக்கே அருள்கள் செய்ய *
விதி சூழ்ந்ததால் எனக்கேல் அம்மான் * திரிவிக்கிரமனையே (6)
2972 matucūtaṉai aṉṟi maṟṟu ileṉ ĕṉṟu * ĕttālum karumam iṉṟi *
tuti cūzhnta pāṭalkal̤ pāṭi āṭa * niṉṟu ūzhi ūzhitŏṟum **
ĕtir cūzhal pukku ĕṉaittor piṟappum * ĕṉakke arul̤kal̤ cĕyya *
viti cūzhntatāl ĕṉakkel ammāṉ * tirivikkiramaṉaiye (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 8-14, 9-22

Simple Translation

I take refuge only in Matucūtan, and I continually sing hymns of His glory for its own sake. This is thanks to the extraordinary grace of Tirivikkiramaṉ, who took births alongside me throughout the ages to guide me on the right path.

Explanatory Notes

The Āzhvār has passed through a staggering cycle of births. The Lord also incarnated every time, in order to get hold of the Āzhvār, but only now He could get hold of him and bring him up to the required standard. A pertinent question is asked at this stage as to why the Omnipotent Lord should not have grabbed at the Āzhvār straightaway if He was so keen on getting at + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மதுசூதனை அன்றி மதுசூதனைத் தவிர; மற்று வேறொரு பற்று; இலேன் என்று உடையேன் அல்லேன் என்று; எத்தாலும் உறுதி பூண்டு வேறு ஒரு பொருளாலும்; கருமம் இன்றி ஒரு கார்யமும் இல்லாமல் பயனும் இன்றி; துதி சூழ்ந்த அவன் திருக்குணங்கள் சூழ்ந்த; பாடல்கள் நின்று பாடல்களை நின்று; பாடி ஆட பாடி ஆடும்படி; ஊழி ஊழி தொறும் கல்பந்தோறும் கல்பந்தோறும்; எனைத்தோர் பிறப்பும் அநேக பிறப்புக்களில்; எனக்கே எதிர் எனக்கு எதிரில்; சூழல் புக்கு சூழ்ச்சியோடே அவதரித்து; அருள்கள் அசாதாரணமான உபகாரங்களை; செய்ய செய்ய; எனக்கேல் என் பொருட்டாகவே; அம்மான் பெருமானான; திரிவிக்கிரமனையே திரிவிக்கிரமனை; விதி சூழ்ந்ததால் ஓர் விதி சூழ்ந்து கொண்டது
madhusūdhanai anṛi ŏther than madhusūdhanan (who removed my obstacles); maṝu any other goal; ilĕn ī don-t have; enṛu saying thus; eththālum with anything; karumam expectation for a result; inṛi not having; thudhi in the form of sthŏthram (praises); sūzhndha covering (his countless qualities); pādalgal̤ai songs; ninṛu staying firm (without attachment for ulterior motives); pādi sing; ādi dance; ūzhi ūzhi thoṛum kalpa (a day of brahmā) after kalpa; enaiththu many; ŏr unique/distinct; piṛappum in births; edhir to be friendly with me; sūzhal pukku appearing with tricks; enakkĕ exclusively for me; arul̤gal̤ favours (from initial merciful blessing to total devotion towards him); seyya to do; enakku for me; ĕl position himself; ammān being my lord; thirivikkiramanai thrivikrama; vidhi mercy in the form of unavoidable destiny; sūzhndhadhu wrapped

TVM 2.7.7

2973 திரிவிக்கிரமன்செந்தாமரைக்கண் எம்மானென் செங்கனிவாய் *
உருவிற்பொலிந்தவெள்ளைப்பளிங்கு நிறத்தனனென் றென்று * உள்ளிப்
பரவிப்பணிந்து பல்லூழியூழிநின்பாதபங்கயமே *
மருவித்தொழும்மனமேதந்தாய் வல்லைகாணென் வாமனனே!
2973 திரிவிக்கிரமன் செந்தாமரைக் கண் * எம்மான் என் செங்கனி வாய் *
உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு * நிறத்தனன் என்று என்று ** உள்ளிப்
பரவிப் பணிந்து * பல் ஊழி ஊழி நின் பாத பங்கயமே *
மருவித் தொழும் மனமே தந்தாய் * வல்லைகாண் என் வாமனனே (7)
2973 tirivikkiramaṉ cĕntāmaraik kaṇ * ĕmmāṉ ĕṉ cĕṅkaṉi vāy *
uruvil pŏlinta vĕl̤l̤aip pal̤iṅku * niṟattaṉaṉ ĕṉṟu ĕṉṟu ** ul̤l̤ip
paravip paṇintu * pal ūzhi ūzhi niṉ pāta paṅkayame *
maruvit tŏzhum maṉame tantāy * vallaikāṇ ĕṉ vāmaṉaṉe (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-32, 15-15

Simple Translation

Vāmaṉaṉ, my Lord, You measured the entire universe in just three strides as Tirivikkiramaṉ and instilled in me a mind fixed on Your lotus feet, adoring You endlessly. My red lotus-eyed Master with sparkling teeth, how capable You are!

Explanatory Notes

(1) Āzhvār to the Lord: How capable of you, how gracious! you have endowed me with a mind which adores You and sings your glory all the time as an end in itself.

(2) Śrī Nampiḻḻai has it that it was not a case of reconditioning the Āzhvār’s mind so as to make it God-bent but one of fitting him with a new mind altogehter, one picked out from the Lord’s strong room where valuables are stored up.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரிவிக்கிரமன் மூவடியால் உலகை அளந்த திரிவிக்கிரமன்; என்று என்றும்; செந்தாமரை செந்தாமரை போன்ற; கண் எம்மான் கண்களையுடையவன் என்றும்; என் செங்கனி வாய் சிவந்த கனி போன்ற வாயிலே; வெள்ளை உருவில் சுத்த வெண்மையான; நிறத்தனன் பொலிந்த நிறத்தையுடைய; பளிங்கு ஸ்படிகம் போன்ற பற்களையுடையவன்; என்று என்றும்; உள்ளிப் பரவி கண் அழகையும் புன்சிரிப்பையும்; பணிந்து அநுபவித்து துதித்து பணிந்து வணங்கும்படியும்; பல் ஊழி ஊழி நெடுங்காலம்; நின் பாத பங்கயம் உனது பாதாரவிந்தங்களிலேயே; மருவித் தொழும் பொருந்தி கைங்கர்யம் செய்யும்; மனமே தந்தாய் மனத்தையும் தந்தாய்; என் வாமனனே! என் வாமனனே!; வல்லை காண் நீ அன்றோ வல்லவன்!
thirivikkiraman one who measured the worlds and won over them; sem reddish; thāmarai lotus flower like; kaṇ with the eyes; emmān my lord who accepted my service to say -jitham- (victory to him); en sem kani vāy uruvil polindha vel̤l̤aip pal̤ingu niṛaththan one who let me experience the beautiful row of white pearl like teeth inside the reddish mouth (lips) and made me exist for him exclusively; enṛu enṛu thus saying each aspect individually; ul̤l̤i contemplating in the heart; paravi (as the experience is not subdued in the heart, it is expressed by) speaking in a disorderly manner; paṇindhu (due to that overwhelming love) bowing (at the lotus feet); pal many; ūzhi ūzhi until time exists in different types of kalpa (i.e., forever); nin your; pādha pangayamĕ enjoyable lotus feet; maruvi fitting well (without any other expectation); thozhum serving; manamĕ mind; thandhāy you bestowed; en vāmananĕ ŏh my vāmana!; vallai kāṇ you are very capable

TVM 2.7.8

2974 வாமனன்! என்மரதகவண்ணன்! தாமரைக்கண்ணினன்!
காமனைப்பயந்தாய்! * என்றென்று உன்கழல்பாடியே பணிந்து
தூமனத்தனனாய்ப் பிறவித்துழதிநீங்க * என்னைத்
தீமனங்கெடுத்தாய் உனக்கென்செய்கேன்? என்சிரீதரனே!
2974 வாமனன் என் மரதக வண்ணன் * தாமரைக் கண்ணினன்
காமனைப் பயந்தாய் * என்று என்று உன் கழல் * பாடியே பணிந்து **
தூ மனத்தனனாய்ப் * பிறவித் துழதி நீங்க * என்னைத்
தீ மனம் கெடுத்தாய் * உனக்கு என் செய்கேன்? என் சிரீதரனே (8)
2974 vāmaṉaṉ ĕṉ marataka vaṇṇaṉ * tāmaraik kaṇṇiṉaṉ
kāmaṉaip payantāy * ĕṉṟu ĕṉṟu uṉ kazhal * pāṭiye paṇintu **
tū maṉattaṉaṉāyp * piṟavit tuzhati nīṅka * ĕṉṉait
tī maṉam kĕṭuttāy * uṉakku ĕṉ cĕykeṉ? ĕṉ cirītaraṉe (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-32, 15-15

Simple Translation

Oh, Citītaraṉ, my Lord, you redeemed my troubled mind and freed me from life's miseries. Now, with a pure mind, I worship your feet, singing and adoring you as the Father of Kāmaṉ, Vāmaṉaṉ, my lotus-eyed Lord, and the emerald mount. How can I ever repay this great good you've done for me?

Explanatory Notes

(i) The Lord is referred to as the Father of Kāmaṉ (Manmatha), because He begot through Rukmiṇī Devī, a Son by name Pradhyumna of exquisite beauty, said to be an ‘Aṃśa’ or incarnation of Manmatha, the minor-deity inducing amorous love.

(ii) What was the Āzhvār’s mind like before it was redeemed? Śrī Nampiḷḷai says that it was hardly fit for reconditioning, as such, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாமனன்! என்று வாமனனே! என்றும்; என் மரதக மரதகம் போன்ற; வண்ணன்! என்று வடிவழகையுடையவனே! என்றும்; தாமரை தாமரை போன்ற; கண்ணினன்! கண்களையுடையவனே! என்றும்; காமனை மன்மதனை மகனாக; பயந்தாய்! என்று பெற்றவனே! என்றும்; உன் கழல் உன் திருவடிகளில்; பாடியே பணிந்து பாடிப் பணிந்து வணங்கி; தூ மனத்தனன் ஆய் தூய மனத்தை உடையேனாய்; பிறவித் துழதி நீங்க பிறவித் துயரம் தீரும் படியாக; என்னை என்னை; தீ மனம் கெடுத்தாய் தீயமனம் அற்றவனாக ஆக்கினாய்; என் சிரீதரனே! உனக்கு என் சிரீதரனே! உனக்கு; என் செய்கேன்? என்ன கைம்மாறு செய்வேன்?
vāmanan ŏh (most easily approachable) vāmana!; en for me to experience; maradhaga vaṇṇan ŏh one who is having a beautiful form resembling emerald!; thāmarai like lotus flower; kaṇṇinan ŏh one who is having such eyes!; kāmanai for cupid (who is loved by all); payandhāy ŏh one who is the creator!; enṛu enṛu saying so; un kazhal your divine feet; pādiyĕ sing; paṇindhu bow to them; thū manaththananāy having pure mind (which does not hanker for ulterior goals); piṛavi caused by birth; thuzhadhi sufferings; nīnga to eradicate; ennaith thīmanam keduththāy reformed my evil mind (which was focussed on worldly pleasures); en being the helper for such me; sirīdharanĕ ŏh ṣrīmān (lord of ṣrī mahālakshmi)!; unakku for you (who are complete); en what; seygĕn can ī do?

TVM 2.7.9

2975 சிரீதரன்செய்யதாமரைக்கண்ணன் என்றென்றிராப் பகல்வாய்
வெரீஇ * அலமந்துகண்கள்நீர்மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து *
மரீஇயதீவினைமாளவின்பம்வளர வைகல்வைகல்
இரீஇ * உன்னையென்னுள்வைத்தனை என்னிருடீகேசனே!
2975 சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன் * என்று என்று இராப்பகல் வாய்
வெரீஇ * அலமந்து கண்கள் நீர் மல்கி * வெவ்வுயிர்த்து உயிர்த்து **
மரீஇய தீவினை மாள இன்பம் வளர * வைகல் வைகல்
இரீஇ * உன்னை என்னுள் வைத்தனை * என் இருடீகேசனே (9)
2975 cirītaraṉ cĕyya tāmaraik kaṇṇaṉ * ĕṉṟu ĕṉṟu irāppakal vāy
vĕrīi * alamantu kaṇkal̤ nīr malki * vĕvvuyirttu uyirttu **
marīiya tīviṉai māl̤a iṉpam val̤ara * vaikal vaikal
irīi * uṉṉai ĕṉṉul̤ vaittaṉai * ĕṉ iruṭīkecaṉe (9)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My Lord Iruṭīkēcaṉ, how gracious You are! You reside within me and expand my joy every moment. You have freed me from all my past dense sins. Day and night, with hot tears in my rolling eyes, I kept crying out, "Oh, Cirītaraṉ, oh, lotus-eyed Lord."

Explanatory Notes

Āzhvār to the Lord:

“I was crying out for you all the time, with tears welling up my eyes, breathing hot, but all my erstwhile miseries you have now irrevocably cut out so that I go on enjoying you, and my joy grows by leaps and bounds every moment”.

Well, this is the interpretation, current from the days of Śrī Parāśara Bhaṭṭar who gave out this meaning. The earlier + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் இருடீகேசனே! என் இருடீகேசனே! என்றும்; சிரீதரன் என்று சிரீதரனே! என்றும்; செய்ய தாமரை செந்தாமரை; கண்ணன் என்று கண்ணனே! என்றும்; இராப்பகல் இராப்பகல் இடைவிடாது; வாய்வெரீ இ அலமந்து வாய் ஓயாமல் பிதற்றி; கண்கள் நீர் மல்கி கண்களில் நீர்ததும்ப; வெவ் உயிர்த்து உயிர்த்து வெப்பமான நெடுமூச்செறிந்து; மரீ இய தீவினை சேர்ந்திருக்கின்ற பாபங்கள்; மாள தொலையும்படியாகவும்; இன்பம் வளர ஆனந்தம் மேலும் வளரும்படியாகவும்; வைகல் வைகல் கழிகிற காலம் தோறும்; இரீ இ உன்னை உன்னை என் நெஞ்கினுள்ளே; என்னுள் வைத்தனை இருத்தி வைத்தாய்
sireeidharan one who is ṣriya:pathi (husband of ṣrī mahālakshmi); seyya fresh (due to the joy acquired after uniting with her); thāmarai like a lotus flower; kaṇṇan one who has eyes; enṛu enṛu saying so; irāp pagal night and day; vāy vereei repeatedly saying/blabbering; alamandhu (as said in thiruvāimozhi 2.4.1 -engum nādi nādi #) looking blank and confused; kaṇgal̤ nīr malgi (as said in thiruvāimozhi 2.4.5 -kuval̤ai oṇ kaṇṇa nīr koṇdāl̤- and thiruvāimozhi 2.4.10 -kĕzhil oṇ kaṇṇa nīr koṇdāl̤-) shedding tears; vevvuyirththu uyirththu (as said in thiruvāimozhi 2.4.4 -ul̤l̤am malanga vevvuyirkkum- and thiruvāimozhi 2.4.8 -nenjam vĕva nedithuyirkkum-) breathing hot and long, continuously; mareeiya suffered (as in thiruvāimozhi 2.4 -ādiyādi #); thīvinai vices; māl̤a to eradicate; inbam val̤ara to increase the joy (starting from thiruvāimozhi 2.5 -andhāmaththanbu-); vaigal vaigal always; en irudīkĕṣanĕ since you are the controller of my senses; en ul̤ in my heart (which is submissive towards you); unnai you (who are the controller, enjoyer); ireei (as said in thiruvāimozhi 2.6.2 -pakka nŏkkaṛiyān-) keeping; vaiththanai placed

TVM 2.7.10

2976 இருடீகேசனெம்பிரான் இலங்கையரக்கர்குலம் *
முருடுதீர்த்தபிரான்எம்மான் அமரர்பெம்மா னென்றென்று *
தெருடியாகில்நெஞ்சே! வணங்கு திண்ணமறியறிந்து *
மருடியேலும்விடேல்கண்டாய் நம்பிபற்பநாபனையே.
2976 இருடீகேசன் எம் பிரான் * இலங்கை அரக்கர் குலம் *
முருடு தீர்த்த பிரான் எம்மான் * அமரர் பெம்மான் என்று என்று **
தெருடியாகில் நெஞ்சே வணங்கு * திண்ணம் அறி அறிந்து *
மருடியேலும் விடேல் கண்டாய் * நம்பி பற்பநாபனையே (10)
2976 iruṭīkecaṉ ĕm pirāṉ * ilaṅkai arakkar kulam *
muruṭu tīrtta pirāṉ ĕmmāṉ * amarar pĕmmāṉ ĕṉṟu ĕṉṟu **
tĕruṭiyākil nĕñce vaṇaṅku * tiṇṇam aṟi aṟintu *
maruṭiyelum viṭel kaṇṭāy * nampi paṟpanāpaṉaiye (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

My mind, if you have any clarity left, worship my Lord, Iruṭikēcaṉ, Chief of Nithyasuris. Know for sure and take action—He is our great Benefactor who freed Laṅkā from the tough Rākṣasa clan. Do not shy away from Him; hold on to Paṟpanāpaṉ, the perfect one.

Explanatory Notes

(i) By addressing his mind in this manner the Āzhvār was only disclosing to the Lord his firm hold on Him.

(ii) Slaying the ten-headed Rāvaṇa is on a par with the redemption of the Āzhvār’s mind which, aided by the five motororgans and five sense-organs, was holding fiendish sway over him, launched into the Sea of Saṃsāra. Śrī Nampiḻḷai likens the bestowal, on the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; தெருடியாகில் நீ அறிவுடையை யாகில்; இருடீகேசன் என்று ஹ்ருஷீகேசனே! என்றும்; எம்பிரான் என்று எம்பிரானே! என்றும்; இலங்கை இலங்கையிலிருந்த; அரக்கர் குலம் அரக்கர் குலத்தவனான ராவணனின்; முருடு தீர்த்த கொடுமை தொலைத்த; பிரான் எம்மான் பிரானே! என்றும்; அமரர் பெம்மான் நித்யஸூரிகளின் நாதனே என்றும்; வணங்கு கூறி வணங்கு; திண்ணம் அறி இதைத் திடமாக அறிவாயாக; அறிந்து அறிந்தபின்; மருடியேலும் மீண்டும் கலங்குவாயேயாகிலும்; நம்பி பற்பநாபனையே குண பூர்ணனான பத்மநாபனை; விடேல் கண்டாய்! விடாதே கொள் என்கிறார்
irudīkĕṣan controlling my mind (which is the entrance for all my 10 senses); empirān my saviour (who favoured me); ilangai in lankā; arakkar kulam for the clan of rākshasas; murudu most cruel rāvaṇa; thīrththa destroyed; pirān one who helped (the citiśens); amarar pemmān like nithyasūris (their leader); emmān my lord who let me enjoy him (like nithyasūris enjoy him); enṛu enṛu meditating like this in many ways; nenjĕ! oh mind!; therudiyāgil if you are wise; vaṇangu see that you worship (him);; thiṇṇam firmly; aṛi know; aṛindhu even after having such knowledge; marudiyĕlum if you get disturbed (due to your unworthiness); nambi being complete in all qualities; paṛpanābanai this great saviour who has divine lotus flower in his navel (which is the cause for everything); vidĕl kaṇdāy don-t let go of him- so says āzhvār to his heart

TVM 2.7.11

2977 பற்பநாபன்உயர்வறவுயரும் பெருந்திறலோன் *
எற்பரன்என்னையாக்கிக்கொண்டு எனக்கேதன்னைத்தந்த
கற்பகம் * என்னமுதம்கார்முகில்போலும் வேங்கடநல்
வெற்பன் * விசும்போர்பிரான் எந்தைதாமோதரனே.
2977 பற்பநாபன் உயர்வு அற உயரும் * பெரும் திறலோன் *
எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு * எனக்கே தன்னைத் தந்த
கற்பகம் ** என் அமுதம் கார் முகில் போலும் * வேங்கட நல்
வெற்பன் * விசும்போர் பிரான் * எந்தை தாமோதரனே (11)
2977 paṟpanāpaṉ uyarvu aṟa uyarum * pĕrum tiṟaloṉ *
ĕṟparaṉ ĕṉṉai ākkik kŏṇṭu * ĕṉakke taṉṉait tanta
kaṟpakam ** ĕṉ amutam kār mukil polum * veṅkaṭa nal
vĕṟpaṉ * vicumpor pirāṉ * ĕntai tāmotaraṉe (11)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

From Paṟpanāpaṉ's navel sprouted the lotus, from which all worlds emerged with unmatched strength. He is completely absorbed in me. He is the 'Kaṛpaka' tree that gave me life and then offered itself to me. He is the Chief of Nithyasuris, and Vēṅkaṭam is His favorite abode. He is my nectar, the cloud-hued Lord, and my loving Master, Tāmōtaraṉ.

Explanatory Notes

(i) The Āzhvār says that the Supreme Lord, with none above Him, is also the humblest; having made the Āzhvār His vassal, the Lord is wholly absorbed in him, making it appear that He knows no one else.

(ii) The ‘Kaṛpaka’ tree is the legendary wish-yielding tree. Even as there is a vast gulf between the Lord’s attributes and the comparable material in each case, the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பற்பநாபன் உந்தித் தாமரையை உடையவன்; உயர்வு அற தன்னைவிட உயர்த்தியில்லை; உயரும் பெரும் என்னும்படி பெரும்; திறலோன் திறலை உடையவன்; எற்பரன் என்னிடத்தில் ஊற்றமுடையவனும்; என்னை என்னை; ஆக்கிக் கொண்டு உண்டாக்கிக் கொண்டு; எனக்கே தன்னைத் தந்த எனக்கே தன்னைத் தந்த; கற்பகம் கற்பகமாய்; என் அமுதம் எனக்கு அமுதம் போன்றவனும்; கார் முகில் போலும் காளமேகம் போன்றவனும்; வேங்கட நல் வேங்கடம் என்ற நல்ல; வெற்பன் திருமலையை இருப்பிடமாக உடையவனும்; விசும்போர் பிரான் நித்யஸூரிகளுக்குத் தலைவனுமான; தாமோதரனே அவனே தாமோதரன்; எந்தை என் தந்தை
paṛpanāban being the one who has divine lotus flower in his navel (which is the cause for creation of the material worlds); uyarvaṛa uyarum being very tall; perum boundless; thiṛalŏn having the ability; eṛparan (having such greatness) being focussed towards me; ennai me; ākki created; koṇdu acknowledged me; enakkĕ exclusively for me; thannai him; thandha gave; kaṛpagam kalpaka tree (which fulfils the wishes of one who seeks); en for me; amudham being sweet like nectar; kār mugil pŏlum resembling a dark cloud (which would rain without checking the ground status); vĕngadam having the name thiruvĕngadam (which is suitable abode for such dark cloud); nal exceptional; veṛpan having thirumalā as his abode; visumbŏr nithyasūris, the residents of paramapadham; pirān one who has subservience towards his devotees to let them enjoy him; dhāmŏdharan dhāmŏdhara; endhai accepted me as his servitor

TVM 2.7.12

2978 தாமோதரனைத்தனிமுதல்வனை ஞாலமுண்டவனை *
ஆமோதரமறிய ஒருவர்க்கென்றெதொழுமவர்கள் *
தாமோதரனுருவாகிய சிவற்கும்திசைமுகற்கும் *
ஆமோதரமறிய எம்மானைஎன்னாழிவண்ணனையே.
2978 தாமோதரனை தனி முதல்வனை * ஞாலம் உண்டவனை *
ஆமோ தரம் அறிய * ஒருவர்க்கு என்றே தொழும் அவர்கள் **
தாமோதரன் உரு ஆகிய * சிவற்கும் திசைமுகற்கும் *
ஆமோ தரம் அறிய * எம்மானை என் ஆழி வண்ணனையே? (12)
2978 tāmotaraṉai taṉi mutalvaṉai * ñālam uṇṭavaṉai *
āmo taram aṟiya * ŏruvarkku ĕṉṟe tŏzhum avarkal̤ **
tāmotaraṉ uru ākiya * civaṟkum ticaimukaṟkum *
āmo taram aṟiya * ĕmmāṉai ĕṉ āzhi vaṇṇaṉaiye? (12)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

Tāmōtaraṉ, my incomparable, primordial Lord of oceanic hue, devoured all the worlds. Even exalted Ticaimukaṉ (Brahmā) and Civaṉ (Śiva) cannot fully understand Him, despite residing on His person, worshiping Him, and believing they can fathom His glory.

Explanatory Notes

The Lord cannot be comprehended through one’s own effort by any one, including the exalted Brahmā and Śiva, although they stay right on His body and are inclined to be presumptuous, venturing to attempt the impossible. But He is fully comprehended by the Āzhvār and devotees like him to whom the Lord has, on His own, vouchsafed all that knowledge, clear and concise, full + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாமோதரனை தாமோதரனும்; தனி உலகுக்கெல்லாம்; முதல்வனை காரணமாயிருப்பவனும்; ஞாலம் பிரளயகாலத்தில் உலகங்களை; உண்டவனை வயிற்றிலே வைத்துக் காத்தவனுமான; தரம் அறிய இறைவனின் தன்மையை அறிய; ஒருவர்க்கு? ஆமோ என்றே ஒருவரால் இயலுமோ? என்று; அவர்கள் கூறிக் கொண்டு; தொழும் வணங்குகின்றவர்களான; தாமோதரன் எம்பெருமானின்; உருவாகிய உடலில் இடம் பெற்றுள்ள; சிவற்கும் திசைமுகற்கும் சிவனுக்கும் பிரமனுக்கும்; என் ஆழி வண்ணனையே கடல் வண்ணனான; எம்மானை எம்பெருமானை; தரம் அறிய ஆமோ அளவிட்டு அறிதல் கூடுமோ?
dhāmŏdharanai having the simplicity of showing total subservience towards his devotees [as krishṇa- dhāmŏdhara]; thani mudhalvanai having the greatness of being the singular cause for all worlds; gyālam uṇdavanai one who has the ability to protect all during pral̤ayam (annihilation); tharam analyse; aṛiya know; oruvarkku for anyone; āmŏ is it possible?; enṛu saying thus; thozhum avargal̤ those who worship; dhāmŏdharan for such dhāmŏdhara; uru āgiya servitors who are the prakāram (mode/form) of emperumān; sivaṛkum for rudhra; thisai mugaṛkum for brahmā; en in me; āzhi vaṇṇan placing his ocean of auspicious qualities; emmān my lord who accepted my service; tharam measure; aṛiya āmŏ is it possible to know?

TVM 2.7.13

2979 வண்ணமாமணிச்சோதியை அமரர்தலைமகனை *
கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன் *
பண்ணியதமிழ்மாலை ஆயிரத்துள்ளிவைபன்னிரண்டும் *
பண்ணிற்பன்னிருநாமப்பாட்டு அண்ணல்தாளணைவிக்குமே. (2)
2979 ## வண்ண மா மணிச் சோதியை * அமரர் தலைமகனை *
கண்ணனை நெடுமாலைத் * தென் குருகூர்ச் சடகோபன் **
பண்ணிய தமிழ் மாலை * ஆயிரத்துள் இவை பன்னிரண்டும் *
பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு * அண்ணல் தாள் அணைவிக்குமே (13)'
2979 ## vaṇṇa mā maṇic cotiyai * amarar talaimakaṉai *
kaṇṇaṉai nĕṭumālait * tĕṉ kurukūrc caṭakopaṉ **
paṇṇiya tamizh mālai * āyirattul̤ ivai paṉṉiraṇṭum *
paṇṇil paṉṉiru nāmap pāṭṭu * aṇṇal tāl̤ aṇaivikkume (13)'

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

These melodious songs, each presenting one of the Lord's twelve names, are part of the thousand Tamil hymns composed by Teṉkurukūr Caṭakōpaṉ. They express the intense and boundless love of Kaṇṇaṉ, who shines like a grand blue gem and is the Chief of Nithyasuris. For the chanters of these hymns, the songs will lead them to the Lord's feet and bind them to Him.

Explanatory Notes

In this end-stanza, the Lord's love, intense and unlimited, for His devotees is emphasized. This provides the impetus for the Lord looking upon His devotees as His sole objects of enjoyment. Contact with this decad (Thiruvaymoli) is enough to render one, such a beloved devotee of Lord Kecavan.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்ண மா மணி அழகிய பெருமையுடைய நீலமணி; சோதியை போன்ற ஒளியுடையவனான; கண்ணனை கண்ணனை; அமரர் தலைமகனை நித்யஸூரிகளின் தலைவனை; நெடுமாலை எம்பெருமானைக் குறித்து; தென் குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; பண்ணிய அருளிச்செய்த; தமிழ் மாலை தமிழ் மாலையாகிய; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; பண்ணில் பண்ணோடு கூடின; பன்னிரு நாமப் பாட்டு பன்னிரு நாமப் பாட்டான; இவை இந்த பன்னிரண்டு; பன்னிரண்டும் பாசுரங்களையும் ஓத வல்லவர்களை; அண்ணல் தாள் எம்பெருமானின் திருவடிகளை; அணைவிக்குமே அணையச்செய்யும்
vaṇṇam having beautiful complexion; most expensive; maṇi blue gem-s; chŏdhiyai having radiance like a bright light; amarar for nithyasūris (eternally free souls who are residents of paramapadham); thalai maganai being the great leader who is incomprehensible (even for such nithyasūris); kaṇṇanai being the one (as krishṇa) who enjoys his own devotees; nedumālai to reach emperumān who is having great love (which is the cause for enjoying his devotees); then beautiful; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; paṇṇiya sung by; thamizh mālai woven together in thamizh (dhrāvida) language which can be pursued by all without any restriction; āyiraththul̤ in the thousand pāsurams; paṇṇil fitting in the tune; panniru nāmap pāttu which are focussed on the twelve divine names of emperumān; ivai panniraṇdum these twelve pāsurams; aṇṇal sarvĕṣvaran (supreme lord); thāl̤ divine feet; aṇaivikkum will facilitate attainment