RNA 69

என்னை ஆட்கொண்டவன் இராமானுசன்

3961 சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து * முன்னாள்
அந்தமுற்றாழ்ந்ததுகண்டு * அவைஎன்றனக்கன்றருளால்
தந்தவரங்கனும் தன் சரண்தந்திலன் தானதுதந்து *
எந்தை யிராமானுசன்வந்தெடுத்தனனின்றென்னையே.
3961 cintaiyiṉoṭu karaṇaṅkal̤ yāvum citaintu * muṉ nāl̤
antam uṟṟu āzhntatu kaṇṭu ** avai ĕṉ taṉakku aṉṟu arul̤āl
tanta araṅkaṉum taṉ caraṇ tantilaṉ * tāṉ atu tantu
ĕntai irāmānucaṉ vantu ĕṭuttaṉaṉ iṉṟu ĕṉṉaiye (69)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

3961. When my senses hurt and I could not survive, the lord Rangan did not come to me and give me his grace but now my father Rāmānujā has come and helps me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் நாள் ஸ்ருஷ்டிக்கு முன்பு; சிந்தையினோடு மனதோடு; கரணங்கள் இந்திரியங்களும்; யாவும் சிதைந்து எல்லாம் அழிந்து; அந்தம் உற்று அசேதனமாய்; ஆழ்ந்தது கண்டு இருப்பதைப் பார்த்து; என் தனக்கு அவை எனக்கு மனம் இந்திரியங்கள்; அன்று அருளால் ஆகியவற்றை தன் கிருபையால்; தந்த அரங்கனும் அருளின அரங்கனும்; தன் சரண் தன் திருவடிகளைக் காட்டி; தந்திலன் உய்விக்கும் வழியைத் தரவில்லை; எந்தை இராமாநுசன் எங்கள் இராமாநுசன்; தான் வந்து தாமாகவே வந்து; அது தந்து அந்தத் திருவடிகளைத் தந்து; இன்று என்னையே இன்று என்னை; எடுத்தனன் உய்வித்தார்
mun nāl̤ before the time of (ḥim) creating,; sindhaiyinŏdu along with the main faculty that is – mind,; karaṇangal̤ yāvum all the faculties/senses; sithaindhu (had) destructed,; anthamuṝu and got annihilated; āzhndhadhu and became ineffective without any difference from non-sentient,; kaṇdu seeing such state,; anṛu at that time,; aranganum periya perumāl̤,; arul̤āl thandha gave, only due to his kindness,; avai those faculties/senses; en thanakku to me who is like a non-sentient; than charaṇ thandhilan ­ ḥe did not give ḥis divine feet;; irāmānusan (but) emperumānār,; endhai as a father for me; vandhu came and; thān he (is the one who); adhu thandhu gave those divine feet (of emperumān) (to me, and); inṛu eduththanan he took out; ennai me who was drowning in the sea of material world; ŏh! what a help this is! is the thought.