RNA 70

இராமானுச! எனக்கு அருள் செய்வதுதான் நலன்

3962 என்னையும் பார்த்து என்னியல்வையும் பார்த்து * எண்ணில் பல்குணத்த
உன்னையும் பார்க்கில் அருள்செய்வதேநலம் * அன்றிஎன்பால்
பின்னையும் பார்க்கில் நலமுளதே? உன்பெருங்கருணை
தன்னையென்பார்ப்பர்? * இராமானுச! உன்னைச் சார்ந்தவரே.
3962 ĕṉṉaiyum pārttu ĕṉ iyalvaiyum pārttu * ĕṇ il pal kuṇatta
uṉṉaiyum pārkkil * arul̤ cĕyvate nalam ** aṉṟi ĕṉpāl
piṉṉaiyum pārkkil nalam ul̤ate? uṉ pĕruṅ karuṇai *
taṉṉai ĕṉ pārppar * irāmānuca uṉṉaic cārntavare? (70)

Ragam

Sahāna / ஸஹானா

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

3962. You have countless wonderful qualities and you saw me and my nature and came to help me. Even considering my confused nature you gave me your compassion, O Rāmānujā, your devotees look at my faults with compassion and forgive me.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இராமாநுச! இராமாநுசரே!; என்னையும் குணமில்லாத குற்றமே நிறைந்திருக்கும் என்னையும்; பார்த்து பார்த்து; என் இயல்வையும் பார்த்து என் தன்மையையும் பார்த்து; எண் இல் எண்ணிலடங்காத; பல் குணத்த பல நற்குணங்களுடைய; உன்னையும் பார்க்கில் உங்களையும் பார்க்குமளவில்; அருள் செய்வதே நலம் நீங்கள் அருள் செய்வதே நல்லது; அன்றி இதைத்தவிர; பின்னையும் பார்க்கில் மேலும் பார்க்கில்; என்பால் என்னிடத்தில் ஏதாவது; நலம் உளதே நல்லது உண்டோ என்று நினைத்தால்; உன்னைச் சார்ந்தவரே உம்மைச் சார்ந்தவர்கள்; உன் பெரும் கருணை தன்னை உம் கிருபையைப் பற்றி; என் பார்ப்பர்? தாழ்வாக நினைப்பார்கள் அன்றோ?
ennaiyum pārththu ḥaving used to involve in matters of my senses for time eternal, as said in rāmānujārya vishayeekrutha mapyahŏmām . bhūya: pradharshayathi vaishayikŏ vimŏha: [ṣrī vaikuṇta sthavam – 99] (even after being taken up by emperumānār, the illusion of pleasure to senses surrounds and takes me over), even after your highness has accepted me in, due to the strength of bad scent (of earlier deeds), ī am still having abundant interest in unfavorable matters – your highness seeing me of such state,; iyalvaiyum pārththu and seeing such bad ways (of me),; unnaiyum pārkkil if you see yourself (of); eṇṇil pal many innumerable; guṇaththa qualities,; arul̤ seyvadhĕ nalam it is better for you to show your kindness (and help me);; anṛi instead of this,; pinnaiyum pārkkil if investigating again; nalam ul̤adhĕ is there any goodness; en pāl in me;; unnaich chārndhavar those who have surrendered to your divine feet,; en pārppar what would be their finding about; perum karuṇai thannai unbounded kindness; un of your highness?;