Chapter 8

The daughter of Nagarajan of the snake world finding Arjuna - (பூங் கங்கை)

அர்ஜுனனைக் கண்டுபிடிக்கும் பாம்பு உலக நாகராஜனின் மகள்
Verses: 2744 to 2746
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PTM 8.32

2744 பூங்கங்கை
முன்னம் புனல்பரக்கும் நல்நாடன் * மின்னாடும்
கொன்னவிலும்நீள்வேல் குருக்கள் குலமதலை *
தன்னிகரொன்றில்லாத வென்றித்தனஞ்சயனை *
பன்னாகராயன் மடப்பாவை * -
2744 பூங் கங்கை
முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும் *
கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை *
தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை *
பன்னாகராயன் மடப் பாவை * 33
2744 pūṅ kaṅkai
muṉṉam puṉal parakkum nal nāṭaṉ miṉ āṭum *
kŏl navilum nīl̤ vel kurukkal̤ kula matalai *
taṉ nikar ŏṉṟu illāta vĕṉṟit taṉañcayaṉai *
paṉṉākarāyaṉ maṭap pāvai * 33

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2744. Arjunā the matchless hero, whose shining long spear killed his enemies, was the son in the famous Kuru dynasty where the Ganges flows with abundant water. The beautiful daughter of the king of snakes without shyness, fear or modesty embraced him, crushing her breasts on his mountain-like golden chest and took him to the snake world where she loved him and they lived happily. Haven’t we heard that story? (33 -36)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூங் கங்கை புனல் அழகிய கங்கை நதிக்கு; முன்னம் பரக்கும் முன்னால் பரந்துவிரிந்திருக்கும்; நல் நாடன் சிறந்த நாட்டுக்குத் தலைவனும்; மின் ஆடும் ஒளியுடைய; கொல் நவிலும் கூரிய; நீள் வேல் நீண்ட வேலையுடையவனும்; குருக்கள் குல குரு வம்சத்தில்; மதலை தோன்றினவனும்; தன் நிகர் ஒன்று இல்லாத தனக்கு நிகரில்லாத ஒப்பற்ற; வென்றி வெற்றி வீரனுமான; தனஞ்சயனை அர்ஜுனனை; பன்னாகராயன் கௌரவ்யன் என்னும் ஸர்ப்ப ராஜனுடைய; மடப் பாவை பெண்ணான உலூபி என்பவள்
pū gangai punal munnam parakkum nal nādan the head of the great country where the beautiful waters of the river gangā had earlier increased its flow abundantly; min ādum having radiance; kol navilum nīl̤ vĕl having a spear, which is long and which knows how to kill, in the hand; kurukkal̤ kula madhalai one who was born in the clan of kurus; than nigar onṛu illādha venṛi one with unparalleled victories; dhananjayanai arjuna; pannāgarāyan madam pāvai woman with timidity, ulūpi, who is the daughter of gauravya, a king of snakes

PTM 8.33

2745 பாவைதன்
மன்னியநாணச்சம் மடமென்றிவையகல *
தன்னுடைய கொங்கை முகம்நெரிய * -
2745 பாவை தன்
மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல *
தன்னுடைய கொங்கை முகம் நெரிய * 34
2745 pāvai taṉ
maṉṉiya nāṇ accam maṭam ĕṉṟu ivai akala *
taṉṉuṭaiya kŏṅkai mukam nĕriya * 34

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2744

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாவை தன் பெண்மைக்குரிய; மன்னிய நாண் அச்சம் மடம் அச்சம் மடம் நாணம் முதலிய; என்று இவை அகல குணங்கள் நீங்கப்பெற்று; தன்னுடைய கொங்கை தனது கொங்கையின்; முகம் நெரிய முகம் நெறிக்கப்பெற்று
pāvai than manniya nāṇ achcham madam ivai agala ridding herself of feminine qualities such as shyness, fear, timidity; thannudaiya kongai mugam neṛiya such that the face of her bosom became stiff

PTM 8.34

2746 தானவன்தன்
பொன்வரையாகம் தழீஇக்கொண்டுபோய் * தனது
நல்நகரம்புக்கு நயந்தினிதுவாழ்ந்ததுவும் *
முன்னுரையில் கேட்டறிவதில்லையே? * -
2746 தான் அவன் தன்
பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய் * தனது
நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் *
முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? * 36
2746 tāṉ avaṉ taṉ
pŏṉ varai ākam tazhīik kŏṇṭu poy * taṉatu
nal nakaram pukku nayantu iṉitu vāzhntatuvum *
muṉ uraiyil keṭṭu aṟivatu illaiye? * 36

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2744

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தான் வெட்கத்தை விட்டுத் தானாகவே விரும்பி; அவன் தன் அந்த அர்ஜுநனுடைய; பொன் வரை ஆகம் அழகிய மலைபோன்ற மார்பை; தழீ இக் கொண்டு போய் தழுவியவாறு; தனது நல் நகரம் தன்னுடைய நகரமான நாக லோகம்; புக்கு நயந்து இனிது போய்ச் சேர்ந்து ஆனந்தமாக; வாழ்ந்ததுவும் வாழ்ந்தாள் என்ற கதையை; முன் உரையில் மஹாபாரதத்தில்; கேட்டு நீங்கள் கேட்டு; அறிவது இல்லையே அறிந்ததில்லையோ?
thān (discarding her shyness) on her own; avan than that arjuna’s; pon varai āgam beautiful, mountain-like chest; thazheeikkoṇdu pŏy embracing; thanadhu her; nal nagaram pŏy pukku reaching beautiful place (in the land of snakes); nayandhu celebrating; inidhu vāzhndhadhuvum that she lived happily; mun uraiyil kĕttu aṛivadhillaiyĕ have you not heard of, in mahābhāratham?