PTM 7.30 2742 பின்னும் கரு நெடுங் கண் செவ் வாய் பிணை நோக்கின் * மின் அனைய நுண் மருங்குல் வேகவதி என்று உரைக்கும் கன்னி * தன் இன் உயிராம் காதலனைக் காணாது * தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏகத் தான் சென்று * அங்கு அன்னவனை நோக்காது அழித்து உரப்பி * 31
PTM 7.31 2743 வாள் அமருள் கல் நவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய் * பொன் நவிலும் ஆகம் புணர்ந்திலளே? * 32