PTM 8.32 2744 பூங் கங்கை முன்னம் புனல் பரக்கும் நல் நாடன் மின் ஆடும் * கொல் நவிலும் நீள் வேல் குருக்கள் குல மதலை * தன் நிகர் ஒன்று இல்லாத வென்றித் தனஞ்சயனை * பன்னாகராயன் மடப் பாவை * 33
PTM 8.33 2745 பாவை தன் மன்னிய நாண் அச்சம் மடம் என்று இவை அகல * தன்னுடைய கொங்கை முகம் நெரிய * 34
PTM 8.34 2746 தான் அவன் தன் பொன் வரை ஆகம் தழீஇக் கொண்டு போய் * தனது நல் நகரம் புக்கு நயந்து இனிது வாழ்ந்ததுவும் * முன் உரையில் கேட்டு அறிவது இல்லையே? * 36