Chapter 1

Thirukannapuram 1 - (சிலை இலங்கு)

திருக்கண்ணபுரம் 1
Thirukannapuram 1 - (சிலை இலங்கு)
All the verses in this eighth decad are sung in praise of Thirukannapuram Sowriraja Perumal. The Thayar here is Kannapura Nayaki. The āzhvār, having surrendered his heart to Sowriraja Perumal, sings these verses, considering the Lord as the hero and himself as the heroine. The āzhvār has a deep preference for this type of expression, known as Nayaka-Nayaki + Read more
இந்த எட்டாம் பத்திலுள்ள எல்லாப் பாடல்களும் திருக்கண்ணபுர சவுரிராஜப் பெருமாள் விஷயமாகப் பாடப்பட்டனவே. ஈண்டுள்ள தாயாரின் பெயர் கண்ணபுர நாயகி. சவுரிராஜப் பெருமாளிடம் ஆழ்வார் தம் மனத்தைப் பறிகொடுத்தவர். பெருமாளைத் தலைவனாகவும், தம்மைத் தலைவியாகவும் பாவனை செய்துகொண்டு பாடுவதில் ஆழ்வாருக்கு + Read more
Verses: 1648 to 1657
Grammar: Aṟuchīr Āsiriya Viruththam / அறுசீராசிரியவிருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and become a king
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 8.1.1

1648 சிலையிலங்குபொன்னாழி
திண்படைதண்டொண்சங்கமென்கின்றாளால் *
மலையிலங்குதோள்நான்கே
மற்றவனுக்கெற்றேகாணென்கின்றாளால் *
முலையிலங்குபூம்பயலை
முன்போடஅன்போடியிருக்கின்றாளால் *
கலையிலங்குமொழியாளர்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ? (2)
1648 ## சிலை இலங்கு பொன் ஆழி * திண் படை தண்டு ஒண் சங்கம்
என்கின்றாளால் *
மலை இலங்கு தோள் நான்கே * மற்று அவனுக்கு எற்றே காண்
என்கின்றாளால் **
முலை இலங்கு பூம் பயலை * முன்பு ஓட அன்பு ஓடி
இருக்கின்றாளால் *
கலை இலங்கு மொழியாளர் * கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? 1
1648 ## cilai ilaṅku pŏṉ āzhi * tiṇ paṭai taṇṭu ŏṇ caṅkam
ĕṉkiṉṟāl̤āl *
malai ilaṅku tol̤ nāṉke * maṟṟu avaṉukku ĕṟṟe kāṇ
ĕṉkiṉṟāl̤āl **
mulai ilaṅku pūm payalai * muṉpu oṭa aṉpu oṭi
irukkiṉṟāl̤āl- *
kalai ilaṅku mŏzhiyāl̤ar * kaṇṇapurattu ammāṉaik
kaṇṭāl̤kŏlo?-1

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1648. My daughter’s breasts have become pale. She is in love with the ocean-colored god and she says, “A bow, a shining golden discus, a strong sword called Nandaham and a white conch!” She says, “Look, unlike his enemies, he has four arms strong as mountains. ” Did she see the god of Kannapuram where good Vediyars live reciting the beautiful Vedās?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிலை என் பெண்ணானவள் வில் என்றும்; இலங்கு பொன் ஆழி ஒளியுள்ள அழகிய ஆழி என்றும்; திண் வலிமை பொருந்திய; படை தண்டு வாட்படை கதை என்றும்; ஒண்சங்கம் அழகிய சங்கு என்றெல்லாம்; என்கின்றாளால் கூறுகிறாள்; மற்று அவனுக்கே மேலும் அவனுக்கு; மலை இலங்கு மலைபோன்ற; தோள் நான்கே தோள்களும்; எற்றே! காண் எப்படி அழகாயிருக்கின்றன பார்; என்கின்றாளால் என்றும் கூறுகிறாள்; முலை இலங்கு மார்பில் விளங்கும்; பூம் பயலை பசலை நிறம் பிரிவால்; முன்பு ஓட முன்பு ஓட; அன்பு ஓடி அதன் பின் அன்புடன் அவள் ஓடி; இருக்கின்றாளால் இருக்கிறாள்; கலை இலங்கு சாஸ்திரங்களில்; மொழியாளர் தேர்ந்தவர்கள் வாழும்; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில் இருக்கும்; அம்மானை சௌரிராஜப் பெருமானை; கண்டாள்கொலோ? கண்ணாரக் கண்டு வணங்கினாளோ?

PT 8.1.2

1649 செருவரைமுன்னாசறுத்த சிலையன்றோ?
கைத்தலத்ததென்கின்றாளால் *
பொருவரைமுன்போர்தொலைத்த
பொன்னாழிமற்றொருகைஎன்கின்றாளால் *
ஒருவரையும்நின்னொப்பா
ரொப்பிலர்என்னப்பா! என்கின்றாளால் *
கருவரைபோல்நின்றானைக்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ? (2)
1649 செருவரை முன் ஆசு அறுத்த * சிலை அன்றோ கைத்தலத்தது
என்கின்றாளால் *
பொரு வரை முன் போர் தொலைத்த * பொன் ஆழி மற்று ஒரு கை
என்கின்றாளால் **
ஒருவரையும் நின் ஒப்பார் * ஒப்பு இலா என் அப்பா
என்கின்றாளால் *
கரு வரைபோல் நின்றானைக் * கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? 2
1649 cĕruvarai muṉ ācu aṟutta * cilai aṉṟo kaittalattatu
ĕṉkiṉṟāl̤āl *
pŏru varai muṉ por tŏlaitta * pŏṉ āzhi maṟṟu ŏru kai
ĕṉkiṉṟāl̤āl **
ŏruvaraiyum niṉ ŏppār * ŏppu ilā ĕṉ appā
ĕṉkiṉṟāl̤āl- *
karu varaipol niṉṟāṉaik * kaṇṇapurattu ammāṉaik
kaṇṭāl̤kŏlo?-2

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1649. My daughter says, “Carrying a bow in his hands, he fought with his enemies and conquered them. ” She says, “In one hand he carries the golden discus that destroyed his enemies when they came fight him. ” She says, “There is no one equal to you, and you are my dear god. ” Did she see the dear dark mountain-like god of Kannapuram?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் செருவரை முன்பு எதிரிகளை; ஆசு அறுத்த தொலைத்த; சிலையன்றோ வில்லன்றோ; கைத்தலத்தது கையிலுள்ளது; என்கின்றாளால் என்கிறாள்; முன் போர் முன்பு போரில்; பொரு வரை போர் புரியும் மலைகளை; தொலைத்த தொலைத்த; பொன் ஆழி பொன்போன்ற சக்கரம்; மற்று ஒருகை மற்றொரு கையிலுள்ளது; என்கின்றாளால் என்கிறாள்; நின் ஒப்பார் உன்னோடொத்தவர்கள்; ஒருவரையும் ஒருவருமில்லை; ஒப்பு இலா என் அப்பா! ஒப்பற்ற என் அப்பனே!; என்கின்றாளால் என்கிறாள்; கரு வரை போல் கருத்த மலை போல்; நின்றானை நின்றவனான; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில் இருக்கும்; அம்மானை சௌரிராஜப் பெருமானை; கண்டாள்கொலோ? கண்ணாரக் கண்டு வணங்கினாளோ?

PT 8.1.3

1650 துன்னுமாமணிமுடிமேல்துழாயலங்கல்
தோன்றுமாலென்கின்றாளால் *
மின்னுமாமணிமகரகுண்டலங்கள்
வில்வீசுமென்கின்றாளால் *
பொன்னின்மாமணியாரம்
அணியாகத்திலங்குமாலென்கின் றாளால் *
கன்னிமா மதிள்புடைசூழ்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?
1650 துன்னு மா மணி முடிமேல் * துழாய் அலங்கல் தோன்றுமால்
என்கின்றாளால் *
மின்னு மா மணி மகர குண்டலங்கள் * வில் வீசும்
என்கின்றாளால் **
பொன்னின் மா மணி ஆரம் * அணி ஆகத்து இலங்குமால்
என்கின்றாளால் *
கன்னி மா மதிள் புடை சூழ் * கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? 3
1650 tuṉṉu mā maṇi muṭimel * tuzhāy alaṅkal toṉṟumāl
ĕṉkiṉṟāl̤āl *
miṉṉu mā maṇi makara kuṇṭalaṅkal̤ * vil vīcum
ĕṉkiṉṟāl̤āl **
pŏṉṉiṉ mā maṇi āram * aṇi ākattu ilaṅkumāl
ĕṉkiṉṟāl̤āl- *
kaṉṉi mā matil̤ puṭai cūzh * kaṇṇapurattu ammāṉaik
kaṇṭāl̤kŏlo?-3

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1650. My daughter says, “He wears a thulasi garland on his crown studded with precious diamonds. ” She says, “He wears beautiful shining emerald earrings on his ears, and a golden chain studded with precious diamonds shines on his chest. ” The dear god stays in Kannapuram surrounded with mighty walls. Did she see him there?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துன்னு சிறந்த அடர்ந்த; மா மணி ரத்னங்களிழைக்கப்பட்ட; முடி மேல் கிரீடத்தின் மீது; துழாய் அலங்கல் திருத்துழாய் மாலை; தோன்றுமால் தோன்றுகிறது; என்கின்றாளால் என்கிறாள்; மின்னு சிறந்த ஒளியுள்ள; மா மணி மணிகளிழைத்த; மகர குண்டலங்கள் காதணிகள்; வில்வீசும் பிரகாசிக்கின்றனவே; என்கின்றாளால் என்கிறாளே!; பொன்னின் ரத்னங்களாலான; மா மணி ஆரம் பொன் மாலைகள்; அணி அந்த மாலைகள் அணிந்தவனுக்கும்; ஆகத்து ஆபரணமாக இருக்கும் திருமார்பில்; இலங்குமால் மின்னுகிறதே; என்கின்றாளால் என்கிறாளே!; கன்னி மா அழிவில்லாத பெருமையுடைய; மதிள் புடை சூழ் மதிள்களால் சூழ்ந்த; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில் இருக்கும்; அம்மானை சௌரிராஜப் பெருமானை; கண்டாள்கொலோ? கண்ணாரக் கண்டு வணங்கினாளோ?

PT 8.1.4

1651 தாராயதண்துளப
வண்டுழுதவரைமார்பனென்கின்றாளால் *
போரானைக்கொம்பொசித்த
புட்பாகன்என்னம்மானென்கின்றாளால் *
ஆரானும்காண்மின்கள்
அம்பவளம்வாயவனுக்கென்கின்றாளால் *
கார்வானம்நின்றதிரும்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?
1651 தார் ஆய தண் துளப வண்டு * உழுத வரை மார்பன்
என்கின்றாளால் *
போர் ஆனைக் கொம்பு ஒசித்த புள்பாகன் * என் அம்மான்
என்கின்றாளால் **
ஆரானும் காண்மின்கள் * அம் பவளம் வாய் அவனுக்கு
என்கின்றாளால் *
கார் வானம் நின்று அதிரும் * கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? 4
1651 tār āya taṇ tul̤apa vaṇṭu * uzhuta varai mārpaṉ
ĕṉkiṉṟāl̤āl *
por āṉaik kŏmpu ŏcitta pul̤pākaṉ * ĕṉ ammāṉ
ĕṉkiṉṟāl̤āl **
ārāṉum kāṇmiṉkal̤ * am paval̤am vāy avaṉukku
ĕṉkiṉṟāl̤āl- *
kār vāṉam niṉṟu atirum * kaṇṇapurattu ammāṉaik
kaṇṭāl̤kŏlo?-4

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1651. My daughter says, “On his chest he wears a cool thulasi garland where bees swarm. My dear god who rides on an eagle broke the tusks of the elephant Kuvalayābeedam. See, he has a beautiful mouth red as coral. ” Did she see the god of Kannapuram where dark clouds in the sky roar?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தார் ஆய மலர்ந்த நல்ல; தண் துளப குளிர்ந்த துளசி மாலையிலுள்ள; வண்டு உழுத வண்டுகள் உலாவும்; வரைமார்பன் மலை போன்ற மார்பையுடையவனும்; என்கின்றாளால் என்கிறாள்; போர் ஆனைக் போர் புரிய நின்ற யானையின்; கொம்பு ஒசித்த கொம்புகளை முறித்தவனும்; புள்பாகன் கருடவாகனனானவன்; என் அம்மான் என்னுடைய பெருமான்; என்கின்றாளால் என்கிறாள்; ஆரானும் காண்மின்கள் யாராகிலும் பாருங்கள்; வாய் அப்பெருமானின் அதரம்; அம் பவளம் அழகிய பவளம் போல் சிவந்திருக்கிறது; அவனுக்கு என்கின்றாளால் என்று கூறுகிறாள்; கார் வானம் கறுத்த மேகம்; நின்று அதிரும் சப்திக்கும் அதிரும்; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில் இருக்கும்; அம்மானை சௌரிராஜப் பெருமானை; கண்டாள்கொலோ? கண்ணாரக் கண்டு வணங்கினாளோ?

PT 8.1.5

1652 அடித்தலமும்தாமரையே
அங்கைகளும்பங்கயமேயென்கின்றாளால் *
முடித்தலமும்பொற்பூணும்
என்நெஞ்சத்துள் ளகலாதென்கின்றாளால் *
வடித்தடங்கண்மலரவளோ
வரையாகத்துள்ளிருப்பாளென்கின்றாளால் *
கடிக்கமலம்கள்ளுகுக்கும்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?
1652 அடித்தலமும் தாமரையே * அம் கைகளும் பங்கயமே
என்கின்றாளால் *
முடித்தலமும் பொன் பூணும் * என் நெஞ்சத்துள் அகலா
என்கின்றாளால் **
வடித் தடங் கண் மலரவளோ * வரை ஆகத்துள் இருப்பாள்?
என்கின்றாளால் *
கடிக் கமலம் கள் உகுக்கும் * கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? 5
1652 aṭittalamum tāmaraiye * am kaikal̤um paṅkayame
ĕṉkiṉṟāl̤āl *
muṭittalamum pŏṉ pūṇum * ĕṉ nĕñcattul̤ akalā
ĕṉkiṉṟāl̤āl **
vaṭit taṭaṅ kaṇ malaraval̤o * varai ākattul̤ iruppāl̤?
ĕṉkiṉṟāl̤āl- *
kaṭik kamalam kal̤ ukukkum * kaṇṇapurattu ammāṉaik
kaṇṭāl̤kŏlo?-5

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1652. My daughter says, “He has beautiful lotus hands and feet. ” She says, “The beauty of his precious crown and his golden ornaments doesn’t go away from my mind. ” She says, “He has the long lovely-eyed Lakshmi on his mountain-like chest. ” Did she see the dear god of Kannapuram where fragrant lotus flowers bloom dripping honey?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடித்தலமும் திருவடிகளும்; தாமரையே தாமரையே; அம் கைகளும் அழகிய கைகளும்; பங்கயமே தாமரையே; என்கின்றாளால் என்கிறாள்; முடித்தலமும் திருமுடியும்; பொன் பூணும் ஆபரணமும்; என் நெஞ்சத்துள் என் நெஞ்சத்திலிருந்து; அகலா அகலவில்லையே; என்கின்றாளால் என்கிறாள்; வடி கூர்மையான; தடங் கண் கண்களையுடைய; மலரவளோ திருமகள்; வரை ஆகத்துள் மலைபோன்ற மார்பில்; இருப்பாள் இருப்பாளா; என்கின்றாளால் என்று கேட்கிறாள்; கடிக் கமலம் மணமுள்ள தாமரைப்பூக்கள்; கள் உகுக்கும் தேனைப் பொழியும்; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில் இருக்கும்; அம்மானை சௌரிராஜப் பெருமானை; கண்டாள்கொலோ? கண்ணாரக் கண்டு வணங்கினாளோ?

PT 8.1.6

1653 பேராயிரமுடையபேராளன் பேராளனென்கின்றாளால் *
ஏரார்கனமகரகுண்டலத்தன் எண்தோளனென்கின்றாளால் *
நீரார்மழைமுகிலே நீள்வரையேஒக்குமாலென்கின்றாளால் *
காரார் வயலமரும் கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?
1653 பேர் ஆயிரம் உடைய பேராளன் * பேராளன் என்கின்றாளால் *
ஏர் ஆர் கன மகர குண்டலத்தன் * எண் தோளன் என்கின்றாளால் **
நீர் ஆர் மழை முகிலே * நீள் வரையே ஒக்குமால் என்கின்றாளால் *
கார் ஆர் வயல் அமரும் * கண்ணபுரத்து அம்மானைக் கண்டாள்கொலோ? 6
1653 per āyiram uṭaiya perāl̤aṉ * perāl̤aṉ ĕṉkiṉṟāl̤āl *
er ār kaṉa makara kuṇṭalattaṉ * ĕṇ tol̤aṉ ĕṉkiṉṟāl̤āl **
nīr ār mazhai mukile * nīl̤ varaiye ŏkkumāl ĕṉkiṉṟāl̤āl *
kār ār vayal amarum * kaṇṇapurattu ammāṉaik kaṇṭāl̤kŏlo?-6

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1653. My daughter says, “He has a thousand names. He is generous, he is generous!” She says, “His ears are decorated with beautiful emerald earrings and he has eight arms. ” She says, “He has the color of a dark cloud that pours rain. He is like a tall mountain. ” Did she see the dear god of Kannapuram surrounded with flourishing fields?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேர் ஆயிரம் உடைய ஆயிரம் நாமங்களைக் கொண்ட; பேராளன் பெருமையுடைய பேராளன்; பேராளன் பேராளன் என்று பலமுறை; என்கின்றாளால் சொல்கிறாள்; ஏர் ஆர் கன அழகிய கனமான; மகரகுண்டலத்தன் மகரகுண்டலங்கள் உடையவன்; எண் தோளன் எட்டுத்தோள்களை உடையவன்; என்கின்றாளால் என்கிறாள்; நீர் ஆர் நீர் நிறைந்த; மழை முகிலே மழைகால மேகத்தையும்; நீள் வரையே பெரிய மலையையும்; ஒக்குமால் ஒத்திருப்பவன்; என்கின்றாளால் என்கிறாள்; கார் ஆர் கருத்த பயிர்களால் சூழ்ந்த; வயல் அமரும் வயல்கள் நிறைந்த; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில் இருக்கும்; அம்மானை சௌரிராஜப் பெருமானை; கண்டாள்கொலோ? கண்ணாரக் கண்டு வணங்கினாளோ?

PT 8.1.7

1654 செவ்வரத்தவுடையாடை
அதன்மேலோர்சிவளிகைக்கச்சென்கின்றாளால் *
அவ்வரத்தவடியிணையும்
அங்கைகளும்பங்கயமேயென்கின்றாளால் *
மைவளர்க்கும்மணியுருவம்
மரகதமோ! மழைமுகிலோ! என்கின்றாளால் *
கைவளர்க்குமழலாளர்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?
1654 செவ் அரத்த உடை ஆடை * அதன்மேல் ஓர் சிவளிகைக் கச்சு
என்கின்றாளால் *
அவ் அரத்த அடி இணையும் * அம் கைகளும் பங்கயமே
என்கின்றாளால் **
மை வளர்க்கும் மணி உருவம் * மரகதமோ? மழை முகிலோ?
என்கின்றாளால் *
கை வளர்க்கும் அழலாளர் * கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? 7
1654 cĕv aratta uṭai āṭai- * ataṉmel or cival̤ikaik kaccu
ĕṉkiṉṟāl̤āl *
av aratta aṭi-iṇaiyum * am kaikal̤um paṅkayame
ĕṉkiṉṟāl̤āl **
mai val̤arkkum maṇi uruvam * marakatamo? mazhai mukilo?
ĕṉkiṉṟāl̤āl- *
kai val̤arkkum azhalāl̤ar * kaṇṇapurattu ammāṉaik
kaṇṭāl̤kŏlo?-7

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1654. My daughter says, “He is wearing a red garment tied with a belt. ” She says, “His two fair beautiful feet and lovely hands are like lotuses. ” She says, “He has a dark sapphire-colored body. Is it emerald or is it a dark cloud?” Did she see the dear god of Kannapuram, where Vediyars live lighting sacrificial fires?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செவ் அரத்த சிவந்த சிறந்ததான; உடை ஆடை ஆடையும்; அதன்மேல் அதன்மேல்; ஓர் சிவளிகைக் ஓர் பொன்னாலான; கச்சு அழகிய கச்சும்; என்கின்றாளால் என்கிறாள்; அவ் அரத்த அப்படிப்பட்ட சிறந்த; அடிஇணையும் இரண்டு பாதங்களும்; அம் கைகளும் அழகிய கைகளும்; பங்கயமே தாமரைப் போன்றவை; என்கின்றாளால் என்கிறாள்; மை வளர்க்கும் மணி நீலமணி போன்ற; உருவம் மரகதமோ? சரீரம் மரகத மணியோ?; மழைமுகிலோ? மழைகால மேகமோ?; என்கின்றாளால் என்கிறாள்; கை வளர்க்கும் தமது கைகளால் ஹோமம் வளர்க்கும்; அழலாளர் அக்நியையுடைய வைதிகர்கள் வாழும்; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில் இருக்கும்; அம்மானை சௌரிராஜப் பெருமானை; கண்டாள்கொலோ? கண்ணாரக் கண்டு வணங்கினாளோ?

PT 8.1.8

1655 கொற்றப்புள்ளொன்றேறி
மன்னூடேவருகின்றானென்கின்றாளால் *
வெற்றிப்போரிந்திரற்கும்
இந்திரனேயொக்குமாலென்கின் றாளால் *
பெற்றக்கால்அவனாகம்
பெண்பிறந்தோமுய்யோமோ! என்கின்றாளால் *
கற்றநூல்மறையாளர்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?
1655 கொற்றப் புள் ஒன்று ஏறி * மன்றூடே வருகின்றான்
என்கின்றாளால் *
வெற்றிப் போர் இந்திரற்கும் * இந்திரனே ஒக்குமால்
என்கின்றாளால் **
பெற்றக்கால் அவன் ஆகம் * பெண் பிறந்தோம் உய்யோமோ?
என்கின்றாளால் *
கற்ற நூல் மறையாளர் * கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? 8
1655 kŏṟṟap pul̤ ŏṉṟu eṟi * maṉṟūṭe varukiṉṟāṉ
ĕṉkiṉṟāl̤āl *
vĕṟṟip por intiraṟkum * intiraṉe ŏkkumāl
ĕṉkiṉṟāl̤āl **
pĕṟṟakkāl avaṉ ākam * pĕṇ piṟantom uyyomo?
ĕṉkiṉṟāl̤āl- *
kaṟṟa nūl maṟaiyāl̤ar * kaṇṇapurattu ammāṉaik
kaṇṭāl̤kŏlo?-8

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1655. My daughter says, “He comes riding on a victorious eagle in the middle of a mandram in the village. ” She says, “For Indra himself who conquers all in battles, he is Indra. ” She says, “Couldn’t we born as women have the fortune of embracing his chest?” Did she see the dear god of Kannapuram where Vediyars, scholars of the Vedās, live?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொற்ற புள் வெற்றி கொள்ளும் ஒரு கருட; ஒன்று ஏறி பறவையின் மீது ஏறி; மன்றூடே வருகின்றான் வீதியிலே வருகின்றான்; என்கின்றாளால் என்கிறாள்; வெற்றிப் போர் வெற்றிப் போர் புரிவதில்; இந்திரற்கும் இந்திரனுக்கும்; இந்திரனே தலைவனே இவன்; ஒக்குமால் ஒப்பற்றவன் அன்றோ?; என்கின்றாளால் என்கிறாள்; பெற்றக் கால் அப்பெருமானின்; அவன் ஆகம் திருமார்பைப் பெற்றால்; பெண் பிறந்தோம் பெண்ணாகப் பிறந்த நாம்; உய்யோமோ? உய்ந்து போக மாட்டோமோ?; என்கின்றாளால் என்கிறாள்; கற்ற நூல் முறையாக சாஸ்திரங்களைக் கற்ற; மறையாளர் வைதிகர்கள் வாழும்; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில் இருக்கும்; அம்மானை சௌரிராஜப் பெருமானை; கண்டாள்கொலோ? கண்ணாரக் கண்டு வணங்கினாளோ?

PT 8.1.9

1656 வண்டமரும்வனமாலை
மணிமுடிமேல்மணநாறுமென்கின்றாளால் *
உண்டிவர்பாலன்பெனக்கென்று
ஒருகாலும்பிரிகிலேனென்கின்றாளால் *
பண்டிவரைக்கண்டறிவதுஎவ்வூரில்?
யாமென்றேபயில்கின்றாளால் *
கண்டவர்தம்மனம்வழங்கும்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?
1656 வண்டு அமரும் வனமாலை * மணி முடிமேல் மணம் நாறும்
என்கின்றாளால் *
உண்டு இவர்பால் அன்பு எனக்கு என்று * ஒருகாலும் பிரிகிலேன்
என்கின்றாளால் **
பண்டு இவரைக் கண்டு அறிவது * எவ் ஊரில்? யாம் என்றே
பயில்கின்றாளால் *
கண்டவர் தம் மனம் வழங்கும் * கண்ணபுரத்து அம்மானைக்
கண்டாள்கொலோ? 9
1656 vaṇṭu amarum vaṉamālai * maṇi muṭimel maṇam nāṟum
ĕṉkiṉṟāl̤āl *
uṇṭu ivarpāl aṉpu ĕṉakku ĕṉṟu * ŏrukālum pirikileṉ
ĕṉkiṉṟāl̤āl **
paṇṭu ivaraik kaṇṭu aṟivatu * ĕv ūril? yām ĕṉṟe
payilkiṉṟāl̤āl- *
kaṇṭavar-tam maṉam vazhaṅkum * kaṇṇapurattu ammāṉaik
kaṇṭāl̤kŏlo?-9

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Divya Desam

Simple Translation

1656. My daughter says, “His shining crown is adorned with fragrant garlands swarming with bees. ” She says, “ I love him so much that I will not be separated from him even a moment. ” She says, “Where did I see him before?” repeating the same question again and again. Did she see the dear god of Kannapuram that attracts everyone’s mind?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு அமரும் வண்டுகள் படிந்திருக்கும்; வனமாலை துளசிமாலை; மணி முடி மேல் ரத்ன கிரீடத்தின் மீது; மணம் நாறும் மணம் கமழ நிற்கிறது; என்கின்றாளால் என்கிறாள்; உண்டு இவர்பால் இவரிடத்திலே; அன்பு அன்பு உண்டு; எனக்கு என்று எனக்கு என்று; ஒருகாலும் சொல்லி ஒரு நொடிப்பொழுதும்; பிரிகிலேன் பிரிந்திருக்க முடியவில்லையே; என்கின்றாளால் என்கிறாள்; பண்டு இதற்கு முன்; இவரைக் கண்டு இவரைப் பார்த்து; அறிவது எவ் ஊரில்? அறிந்தது எந்த ஊரில்?; யாம் என்றே என்றே பலகாலும்; பயில்கின்றாளால் யோசித்துப் பார்க்கிறாள்; கண்டவர் தம் வணங்குபவர் அனைவரின்; மனம் வழங்கும் மனமும் அவனிடம் ஈடுபடும்; கண்ணபுரத்து திருக்கண்ணபுரத்தில் இருக்கும்; அம்மானை சௌரிராஜப் பெருமானை; கண்டாள்கொலோ? கண்ணாரக் கண்டு வணங்கினாளோ?

PT 8.1.10

1657 மாவளருமென்னோக்கி
மாதராள்மாயவனைக்கண்டாளென்று *
காவளரும்கடிபொழில்சூழ்
கண்ணபுரத்தம்மானைக்கலியன்சொன்ன *
பாவளரும்தமிழ்மாலை
பன்னியநூல்இவையைந்துமைந்தும்வல்லார் *
பூவளரும்கற்பகம்சேர்பொன்னுலகில்
மன்னவராய்ப்புகழ்தக்கோரே. (2)
1657 # #மா வளரும் மென் நோக்கி * மாதராள் மாயவனைக்
கண்டாள் என்று *
கா வளரும் கடி பொழில் சூழ் * கண்ணபுரத்து அம்மானைக்
கலியன் சொன்ன **
பா வளரும் தமிழ் மாலை * பன்னிய நூல் இவை ஐந்தும்
ஐந்தும் வல்லார் *
பூ வளரும் கற்பகம் சேர் * பொன் உலகில் மன்னவர் ஆய்ப்
புகழ் தக்கோரே 10
1657 # #mā val̤arum mĕṉ nokki * mātarāl̤ māyavaṉaik
kaṇṭāl̤ ĕṉṟu *
kā val̤arum kaṭi pŏzhil cūzh * kaṇṇapurattu ammāṉaik
kaliyaṉ cŏṉṉa **
pā val̤arum tamizh-mālai * paṉṉiya nūl ivai aintum
aintum vallār *
pū val̤arum kaṟpakam cer * pŏṉ ulakil maṉṉavar āyp
pukazh takkore-10

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Mother

Simple Translation

1657. Kaliyan the poet composed a beautiful garland of ten Tamil pāsurams on the god of Thirukkannapuram surrounded by a fragrant forest with good trees describing how a mother is worried that her daughter with soft doe-like eyes has fallen in love with the god and wonders whether she has seen him. If devotees learn and recite these pāsurams they will go to the golden world where the Karpaga tree blooms and stay there as famous kings.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா வளரும் மானின் பார்வை போன்ற; மென் மென்மையான; நோக்கி பார்வையை உடைய; மாதராள் நாயகியானவள்; மாயவனை மாயவனை; கண்டாள் என்று கண்டாள் என்று; பொழில் சூழ் சோலைகளில் வளரும் மணமானது; கா வளரும் கடி பூமியெங்கும் பரவ; கண்ணபுரத்து கண்ணபுரத்து; அம்மானை அம்மானைக் குறித்து; கலியன் சொன்ன திருமங்கையாழ்வாரருளிச் செய்த; பா வளரும் சந்தங்கள் நிறைந்த; தமிழ் மாலை தமிழ் மாலையாகிய; பன்னிய கொண்டாடத்தகுந்த; நூல் பாசுரங்களான; இவை ஐந்தும் ஐந்தும் இந்த ஐந்தும் ஐந்தும்; வல்லார் இப்பத்தையும் ஓதவல்லார்கள்; பூ வளரும் பூக்கள் நிறைந்த; கற்பகம் சேர் கற்பக விருக்ஷம் சேர்ந்திருக்கும்; பொன் உலகில் பரமபதத்தில்; மன்னவராய் மன்னவர்களாக; புகழ் தக்கோரே புகழோடு வாழ்வர்