She Will Not Be Separated from Saurirāja
சவுரிராஜனை இவள் பிரியமாட்டாள்
1656 வண்டமரும்வனமாலை
மணிமுடிமேல்மணநாறுமென்கின்றாளால் *
உண்டிவர்பாலன்பெனக்கென்று
ஒருகாலும்பிரிகிலேனென்கின்றாளால் *
பண்டிவரைக்கண்டறிவதுஎவ்வூரில்?
யாமென்றேபயில்கின்றாளால் *
கண்டவர்தம்மனம்வழங்கும்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?