She is Describing Only the Limbs of Saurirāja
சவுரிராஜனின் அவயவங்களையே வர்ணிக்கின்றாள்
1652 அடித்தலமும்தாமரையே
அங்கைகளும்பங்கயமேயென்கின்றாளால் *
முடித்தலமும்பொற்பூணும்
என்நெஞ்சத்துள் ளகலாதென்கின்றாளால் *
வடித்தடங்கண்மலரவளோ
வரையாகத்துள்ளிருப்பாளென்கின்றாளால் *
கடிக்கமலம்கள்ளுகுக்கும்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?