She is Bewitched by the Beauty of Saurirāja
சவுரிராஜன் அழகில் இவள் மயங்கிவிட்டாள்
1654 செவ்வரத்தவுடையாடை
அதன்மேலோர்சிவளிகைக்கச்சென்கின்றாளால் *
அவ்வரத்தவடியிணையும்
அங்கைகளும்பங்கயமேயென்கின்றாளால் *
மைவளர்க்கும்மணியுருவம்
மரகதமோ! மழைமுகிலோ! என்கின்றாளால் *
கைவளர்க்குமழலாளர்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?