She is Describing the Appearance of Saurirāja
சவுரிராஜனின் தோற்றத்தை வர்ணிக்கின்றாள்
1650 துன்னுமாமணிமுடிமேல்துழாயலங்கல்
தோன்றுமாலென்கின்றாளால் *
மின்னுமாமணிமகரகுண்டலங்கள்
வில்வீசுமென்கின்றாளால் *
பொன்னின்மாமணியாரம்
அணியாகத்திலங்குமாலென்கின் றாளால் *
கன்னிமா மதிள்புடைசூழ்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ?