She is Wonderstruck by the Valor of Saurirāja
சவுரிராஜனின் வீரத்தை இவள் வியக்கின்றாள்
1649 செருவரைமுன்னாசறுத்த சிலையன்றோ?
கைத்தலத்ததென்கின்றாளால் *
பொருவரைமுன்போர்தொலைத்த
பொன்னாழிமற்றொருகைஎன்கின்றாளால் *
ஒருவரையும்நின்னொப்பா
ரொப்பிலர்என்னப்பா! என்கின்றாளால் *
கருவரைபோல்நின்றானைக்
கண்ணபுரத்தம்மானைக்கண்டாள்கொலோ? (2)