Chapter 8

Thiruvazhundur 4 - (செங் கமல)

திருவழுந்தூர் 4
Thiruvazhundur 4 - (செங் கமல)
The āzhvār, with a melting heart, sings in praise of Amaruviyappan of Thiruvazhundur, declaring Him to be the Lord who has taken the ten Avatars (Dasavataras).
திருவழுந்தூர் மேவிய ஆமருவியப்பனே தசாவதாரங்களை எடுத்த திருமால் என்று கூறி உள்ளம் உருகிப் பாடுகிறார் ஆழ்வார்.
Verses: 1618 to 1627
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: சீகாமரம்
Recital benefits: Will rule this world surrounded by the wide oceans under a royal umbrella and become gods in the sky
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 7.8.1

1618 செங்கமலத்திருமகளும்புவியும்
செம்பொன்திருவடியினிணைவருடமுனிவரேத்த *
வங்கமலிதடங்கடலுள் அநந்தனென்னும்
வரியரவினணைத்துயின்றமாயோன்காண்மின் *
எங்குமலிநிறைபுகழ்நால்வேதம் ஐந்து
வேள்விகளும்கேள்விகளும்இயன்றதன்மை
அங்கமலத்தயனனையார்பயிலும்செல்வத்து
அணியழுந்தூர் நின்றுகந்தஅமரர்கோவே. (2)
1618 ## செங் கமலத் திருமகளும் புவியும் செம் பொன் *
திருவடியின் இணை வருட முனிவர் ஏத்த *
வங்கம் மலி தடங் கடலுள் அநந்தன் என்னும் *
வரி அரவின் அணைத் துயின்ற மாயோன் காண்மின் **
எங்கும் மலி நிறை புகழ் நால் வேதம் * ஐந்து
வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை *
அம் கமலத்து அயன் அனையார் பயிலும் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 1
1618 ## cĕṅ kamalat tirumakal̤um puviyum cĕm pŏṉ *
tiruvaṭiyiṉ iṇai varuṭa muṉivar etta *
vaṅkam mali taṭaṅ kaṭalul̤ anantaṉ ĕṉṉum *
vari araviṉ aṇait tuyiṉṟa māyoṉ kāṇmiṉ- **
ĕṅkum mali niṟai pukazh nāl vetam * aintu
vel̤vikal̤um kel̤vikal̤um iyaṉṟa taṉmai *
am kamalattu ayaṉ aṉaiyār payilum cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-1

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1618. The Māyon who rests on Adisesha on the wide milky ocean rolling with waves, as Lakshmi and the earth goddess stroke his divine golden feet and sages praise him stays in beautiful, flourishing Thiruvazhundur where famous learned Vediyars skilled in the four Vedās perform the five sacrifices and are as divine as Nānmuhan himself.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எங்கும் மலி எங்கும் பரவிய; நிறை புகழ் நிறைந்த புகழுடைய; நால் வேதம் நான்கு வேதங்களும்; ஐந்து வேள்விகளும் ஐந்து வேள்விகளும்; கேள்விகளும் கேட்டறிய வேண்டியவைகளும்; இயன்ற இயற்கையாகவே; தன்மை அறிந்துகொள்ளக்கூடியவைகளும்; அம் கமலத்து அழகிய கமலத்தில் தோன்றிய; அயன் பிரமனையொத்தவரான; அனையார் வைதிகர்கள்; பயிலும் செல்வத்து சிறப்புடையவர்கள் வாழும்; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; செங் கமல செந்தாமரை மலரில்; திருமகளும் தோன்றிய திருமகளும்; புவியும் பூமாதேவியும்; செம் பொன் அழகிய பொன்மயமான; திருவடியின் திருவடிகளையும்; இணை வருட இரண்டையும் வருட; முனிவர் ஏத்த முனிவர்கள் துதிக்க; வங்கம் மலி அலைகள் நிறைந்த; தடங் கடலுள் பாற்கடலில்; அனந்தன் என்னும் அனந்தன் என்னும்; வரி அரவின் ரேகைகளுடைய பாம்பு; அணை படுக்கையில்; துயின்ற சயனித்திருக்கும்; மாயோன் மாயனைக்; காண்மின் கண்டு களியுங்கள்

PT 7.8.2

1619 முன்இவ்வுலகேழும்இருள்மண்டியுண்ண
முனிவரொடுதானவர்கள்திசைப்ப * வந்து
பன்னுகலைநால்வேதப்பொருளையெல்லாம்
பரிமுகமாய்அருளியஎம்பரமன்காண்மின் *
செந்நெல்மலிகதிர்க்கவரிவீசச்
சங்கமவைமுரலச்செங்கமலமலரையேறி *
அன்னமலிபெடையோடும்அமரும்செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1619 முன் இவ் உலகு ஏழும் இருள் மண்டி உண்ண *
முனிவரொடு தானவர்கள் திசைப்ப * வந்து
பன்னு கலை நால் வேதப் பொருளை எல்லாம் *
பரி முகம் ஆய் அருளிய எம் பரமன் காண்மின் **
செந்நெல் மலி கதிர்க் கவரி வீசச் *
சங்கம் அவை முரலச் செங் கமல மலரை ஏறி *
அன்னம் மலி பெடையோடும் அமரும் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 2
1619 muṉ iv ulaku ezhum irul̤ maṇṭi uṇṇa *
muṉivarŏṭu tāṉavarkal̤ ticaippa * vantu
paṉṉu kalai nāl vetap pŏrul̤ai ĕllām *
pari mukam āy arul̤iya ĕm paramaṉ kāṇmiṉ- **
cĕnnĕl mali katirk kavari vīcac *
caṅkam avai muralac cĕṅ kamala malarai eṟi *
aṉṉam mali pĕṭaiyoṭum amarum cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-2

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1619. When the eon ended and all the seven worlds were covered with darkness and the sages and the Asurans were terrified, our highest god took the form of a horse and brought all the four Vedās up from the ocean and taught them to the sages. See, the god of the gods stays happily in rich Thiruvazhundur where the ears of good paddy swing in the wind like fans and conches in the water sound and male swans sit with their mates on the lovely lotuses.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செந்நெல் செந்நெற் பயிரின்; மலி கதிர் நிறைந்த கதிர்கள்; கவரி வீச சாமரம் வீச; சங்கம் அவை முரல சங்குகள் ஒலிக்க; செங் கமல மலரை அழகிய தாமரையின்; ஏறி மேல் ஏறி; அன்னம் அலி அன்னங்கள்; பெடையோடும் பெடையோடு; அமரும் செல்வத்து வீற்றிருக்கும் சிறப்புடைய; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; முன் முன்பு; இவ் உலகு ஏழும் இந்த ஏழு உலகங்களையும்; இருள் அஞ்ஞான அந்தகாரம்; மண்டி உண்ண மிகுந்து உண்ண; முனிவரொடு முனிவர்களும்; தானவர்கள் அசுரர்களும்; திசைப்ப பிரமித்து நிற்க; வந்து பரமபதத்திலிருந்து வந்து; பன்னு கலை பரந்து விரிந்த; நால் வேத நான்கு வேதங்களின்; பொருளை எல்லாம் பொருளை எல்லாம்; பரி முகம் ஆய் ஹயக்ரீவமூர்த்தியாய்த் தோன்றி; அருளிய அருளிய; எம் பரமன் எம்பெருமானை; காண்மின் கண்டு களியுங்கள்

PT 7.8.3

1620 குலத்தலையமதவேழம்பொய்கைபுக்குக்
கோள்முதலைபிடிக்கஅதற்குஅனுங்கிநின்று *
நிலத்திகழும்மலர்ச்சுடரேய்சோதீ! என்ன
நெஞ்சிடர்தீர்த்தருளியஎன்நிமலன்காண்மின் *
மலைத்திகழ்சந்தகில்கனகமணியும்கொண்டு
வந்துந்திவயல்கள்தொறும்மடைகள்பாய *
அலைத்துவரும்பொன்னிவளம்பெருகும்செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1620 குலத் தலைய மத வேழம் பொய்கை புக்குக் *
கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று *
நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ என்ன *
நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின் **
மலைத் திகழ் சந்து அகில் கனகம் மணியும் கொண்டு *
வந்து உந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய *
அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 3
1620 kulat talaiya mata vezham pŏykai pukkuk *
kol̤ mutalai piṭikka ataṟku aṉuṅki niṉṟu *
nilat tikazhum malarc cuṭar ey cotī ĕṉṉa *
nĕñcu iṭar tīrttarul̤iya ĕṉ nimalaṉ kāṇmiṉ- **
malait tikazh cantu akil kaṉakam maṇiyum kŏṇṭu *
vantu unti vayalkal̤tŏṟum maṭaikal̤ pāya *
alaittu varum pŏṉṉi val̤am pĕrukum cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-3

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1620. When the strong crocodile caught Gajendra, the king of elephants, he called to you loudly, saying, “You are the shining light of the world, as bright as its flowers, ” and you, faultless, went and saved him and gave him your grace. See, you are the god of the gods and you stay happily in beautiful Thiruvazhundur where the Ponni river brings fragrant sandalwood from the mountains along with gold and jewels as it fills the fields and the channels with water and increases the richness of the place.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மலை மலையிலிருந்து; திகழ் சந்து சந்தன மரங்களையும்; அகில் அகில் கட்டைகளையும்; கனகம் பொன்னையும்; மணியும் கொண்டு மணியையும்; உந்தி வந்து தள்ளிக் கொண்டு வந்து; வயல்கள்தொறும் வயல்களிலெல்லாம்; மடைகள் பாய நீர்பாயும்; அலைத்து அலைகளோடு; வரும் பொன்னி வரும் காவேரி; வளம் பெருகும் வளம் பெருகும்; செல்வத்து செல்வத்தையுடைய; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; குலத் தலைய நல்ல குலத்தில் பிறந்த; மதவேழம் யானை; பொய்கை பொய்கையில்; புக்கு புகுந்தபோது; கோள் வலிமையுள்ள; முதலை பிடிக்க முதலை பிடித்ததினால்; அதற்கு அம்முதலைக்கு; அனுங்கி நின்று பயந்து நின்று; நிலத் திகழும் நிலா பரவிய; மலர் சந்திரனை ஒத்த; சுடர் ஏய் சோதீ! ஒளிமயமானவனே!; என்ன என்று துதிக்க; நெஞ்சு இடர் யானையின் துன்பத்தை; தீர்த்தருளிய போக்கிய; என் நிமலன் என் குற்றமற்ற பெருமனை; காண்மின் கண்டு களியுங்கள்

PT 7.8.4

1621 சிலம்புமுதல்கலனணிந்தோர்செங்கண்குன்றம்
திகழ்ந்ததெனத்திருவுருவம்பன்றியாகி *
இலங்குபுவிமடந்தைதனை இடந்துபுல்கி
எயிற்றிடைவைத்தருளியஎம்மீசன்காண்மின் *
புலம்புசிறைவண்டொலிப்பப்பூகம்தொக்க
பொழில்கள்தொறும்குயில்கூவமயில்களால *
அலம்புதிரைப்புனல்புடைசூழ்ந்துஅழகார் செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1621 சிலம்பு முதல் கலன் அணிந்து ஓர் செங்கண் குன்றம் *
திகழ்ந்தது எனத் திரு உருவம் பன்றி ஆகி *
இலங்கு புவி மடந்தை தனை இடந்து புல்கி *
எயிற்றிடை வைத்தருளிய எம் ஈசன் காண்மின் **
புலம்பு சிறை வண்டு ஒலிப்பப் பூகம் தொக்க *
பொழில்கள்தொறும் குயில் கூவ மயில்கள் ஆல *
அலம்பு திரைப் புனல் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 4
1621 cilampu mutal kalaṉ aṇintu or cĕṅkaṇ kuṉṟam *
tikazhntatu ĕṉat tiru uruvam paṉṟi āki *
ilaṅku puvi maṭantai-taṉai iṭantu pulki *
ĕyiṟṟiṭai vaittarul̤iya ĕm īcaṉ kāṇmiṉ **
pulampu ciṟai vaṇṭu ŏlippap pūkam tŏkka *
pŏzhilkal̤tŏṟum kuyil kūva mayilkal̤ āla *
alampu tiraip puṉal puṭai cūzhntu azhaku ār cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-4

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1621. He took the divine form of a strong-eyed boar that looked like a hill decorated with anklets and ornaments and dug up the earth and brought up the shining earth goddess on his tusks. See, he is the king of the gods who stays in beautiful rich Thiruvazhundur surrounded with water where areca nut trees grow and winged bees sing in the groves as cuckoo birds coo and peacocks dance.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பூகம் தொக்க பாக்கு மரங்கள் நிறைந்துள்ள; பொழில்கள் தொறும் சோலைகளெங்கும்; குயில் கூவ குயில் கூவ; மயில்கள் ஆல மயில்கள் ஆட; புலம்பு சிறை சிறகுகளையுடைய; வண்டு ஒலிப்ப வண்டுகள் ரீங்கரிக்க; அலம்பு திரைப் அலைகளையுடைய; புனல் காவேரி நீர்; புடை சூழ்ந்து எல்லா இடங்களிலும் சூழ்ந்து பாய; அழகு ஆர் செல்வத்து அழகு மிக்க சிறப்புடைய; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்து நின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; ஓர் செங்கண் சிவந்த கண்களையுடைய; குன்றம் ஒரு மலை; திகழ்ந்தது என இருப்பது போல்; சிலம்பு முதல் தண்டை சிலம்பு முதலான; கலன் அணிந்து ஆபரணங்களை அணிந்து; திருவுருவம் பன்றி ஆகி வராஹரூபமாக; இலங்கு விளங்கும்; புவி மடந்தை தனை பூமாதேவியை; இடந்து அண்டத்திலிருந்து; புல்கி குத்தி எடுத்து அணைத்து; எயிற்றிடை பற்களினிடையே; வைத்தருளிய வைத்தருளிய; எம் ஈசன் எம்பெருமானை; காண்மின் கண்டு களியுங்கள்

PT 7.8.5

1622 சினமேவும்அடலரியினுருவமாகித்
திறல்மேவும்இரணியன்தாகம்கீண்டு *
மனமேவுவஞ்சனையால்வந்தபேய்ச்சி
மாள உயிர்வெளவிய எம்மாயோன்காண்மின் *
இனமேவுவரிவளைக்கையேந்தும் கோவை
யேய்வாயமரகதம்போல் கிளியினின்சொல் *
அனமேவுநடைமடவார்பயிலும் செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1622 சினம் மேவும் அடல் அரியின் உருவம் ஆகித் *
திறல் மேவும் இரணியனது ஆகம் கீண்டு *
மனம் மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி
மாள * உயிர் வவ்விய எம் மாயோன் காண்மின் **
இனம் மேவு வரி வளைக் கை ஏந்தும் கோவை *
ஏய் வாய மரகதம்போல் கிளியின் இன் சொல் *
அனம் மேவு நடை மடவார் பயிலும் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 5
1622 ciṉam mevum aṭal ariyiṉ uruvam ākit *
tiṟal mevum iraṇiyaṉatu ākam kīṇṭu *
maṉam mevu vañcaṉaiyāl vanta peycci
māl̤a * uyir vavviya ĕm māyoṉ kāṇmiṉ- **
iṉam mevu vari val̤aik kai entum kovai *
ey vāya marakatampol kil̤iyiṉ iṉ cŏl *
aṉam mevu naṭai maṭavār payilum cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-5

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1622. As a heroic man-lion he split open the strong chest of Hiranyan, and when the devil Putanā came in the form of a mother to cheat him he drank her poisonous milk and killed her. See, he is the Māyon and he stays happily in rich Thiruvazhundur where beautiful women come with their friends, their arms ornamented with round bangles, walking like swans and teaching sweet words to their emerald-colored parrots with mouths like red kovvai fruits.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இனம் மேவு வரிசை வரிசையாக; வரி வளை வளையல்கள் அணிந்த; கை ஏந்தும் கைகளிலே வைத்திருக்கும்; கோவை கோவைப் பழம்; ஏய் வாய போன்ற வாயையுடைய; மரகதம் மரகதம் போன்ற; போல் பச்சை நிறமுடைய; கிளியின் கிளியைப் போன்ற; இன் சொல் இனிய சொற்களையும்; அனம் மேவு அன்னம் போன்ற; நடை நடையழகையுமுடைய; மடவார் இளம் பெண்களின்; பயிலும் செல்வத்து செல்வம் பெற்ற; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; சினம் மேவும் அடல் மிக்க சீற்றமுள்ள வலிய; அரியின் உருவம் ஆகி நரசிம்ம மூர்த்தியாய்; திறல் மேவும் மிக்க பராக்ரமமுள்ள; இரணியனது இரணியனின்; ஆகம் கீண்டு மார்பைப் பிளந்து; மனம் மனதில்; மேவு வஞ்சனையால் வஞ்சக எண்ணத்தோடு; வந்த பேய்ச்சி மாள வந்த பேய்ச்சி மாள; உயிர் வவ்விய அவள் உயிரை வாங்கிய; எம் மாயோன் எம் மாயோனை; காண்மின் கண்டு களியுங்கள்

PT 7.8.6

1623 வானவர்தம்துயர்தீரவந்துதோன்றி
மாணுருவாய்மூவடிமாவலியைவேண்டி *
தானமரஏழுலகும்அளந்த வென்றித்
தனிமுதல்சக்கரப்படைஎன்தலைவன்காண்மின் *
தேனமரும்பொழில்தழுவும்எழில்கொள்வீதிச்
செழுமாடமாளிகைகள்கூடந்தோறும் *
ஆனதொல்சீர்மறையாளர்பயிலும்செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1623 வானவர் தம் துயர் தீர வந்து தோன்றி *
மாண் உரு ஆய் மூவடி மாவலியை வேண்டி *
தான் அமர ஏழ் உலகும் அளந்த வென்றித் *
தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின் **
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதிச் *
செழு மாட மாளிகைகள் கூடம்தோறும் *
ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 6
1623 vāṉavar-tam tuyar tīra vantu toṉṟi *
māṇ uru āy mūvaṭi māvaliyai veṇṭi *
tāṉ amara ezh ulakum al̤anta vĕṉṟit *
taṉi mutal cakkarap paṭai ĕṉ talaivaṉ kāṇmiṉ- **
teṉ amarum pŏzhil tazhuvum ĕzhil kŏl̤ vītic *
cĕzhu māṭa māl̤ikaikal̤ kūṭamtoṟum *
āṉa tŏl cīr maṟaiyāl̤ar payilum cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-6

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1623. When the gods were afflicted by Māhabali, Thirumāl, my chief with an unmatched discus, went as a dwarf to Mahābali and asked for three feet of land, and when he received the boon, he measured the world and the sky with his two feet. He stays happily in prosperous, beautiful Thiruvazhundur surrounded with groves dripping with honey and filled with precious palaces where famous Vediyars, praised from the ancient times, recite the Vedās.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தேன் அமரும் தேன் நிறைந்த; பொழில் தழுவும் சோலைகளால் சூழ்ந்த; எழில் கொள் வீதி அழகிய வீதிகளும்; செழு மா செழித்த மாட; மாளிகைகள் மாளிகைகளும்; கூடம் தோறும் மற்றுமுள்ள இடங்களிலும்; ஆன தொல் சீர் ஆத்மகுணம் நிறைந்த பழைய; மறையாளர் புகழுடைய வைதிகர்கள் வாழும்; பயிலும் சிறப்புடைய; செல்வத்து செல்வம் நிறைந்த; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; வானவர் தம் வானவர்களின்; துயர் தீர துயர் தீர; மாண் உருவாய் வாமநனாய்; வந்து தோன்றி வந்து தோன்றி; மா வலியை மஹாபலியினிடத்தில்; மூவடி மூன்றடி நிலத்தை; வேண்டி வேண்டிப்பெற்று; ஏழ் உலகும் ஏழ் உலகும்; தான்அமர தன் திருவடிக் கீழ்அடங்கும்படி; அளந்த வென்றி அளந்து வெற்றி பெற்று; தனி முதல் ஒப்பற்ற திருவிக்கிரமனாக வளர்ந்ததால்; சக்கரப்படை சக்கராயுதத்தை கையிலுடையவனை; என் தலைவன் எம் தலைவனை; காண்மின் கண்டு களியுங்கள்

PT 7.8.7

1624 பந்தணைந்தமெல்விரலாள் சீதைக்காகிப்
பகலவன்மீதியங்காதஇலங்கைவேந்தன் *
அந்தமில்திண்கரம்சிரங்கள் புரண்டுவீழ
அடுகணையால்எய்துகந்தஅம்மான்காண்மின் *
செந்தமிழும்வடகலையும்திகழ்ந்தநாவர்
திசைமுகனையனையவர்கள் செம்மைமிக்க *
அந்தணர்தம்ஆகுதியின்புகையார்செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1624 பந்து அணைந்த மெல் விரலாள் சீதைக்கு ஆகிப் *
பகலவன் மீது இயங்காத இலங்கை வேந்தன் *
அந்தம் இல் திண் கரம் சிரங்கள் புரண்டு வீழ *
அடு கணையால் எய்து உகந்த அம்மான் காண்மின் **
செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் *
திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க *
அந்தணர் தம் ஆகுதியின் புகை ஆர் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 7
1624 pantu aṇainta mĕl viralāl̤ cītaikku ākip *
pakalavaṉ mītu iyaṅkāta ilaṅkai ventaṉ *
antam il tiṇ karam ciraṅkal̤ puraṇṭu vīzha *
aṭu kaṇaiyāl ĕytu ukanta ammāṉ kāṇmiṉ- **
cĕntamizhum vaṭakalaiyum tikazhnta nāvar *
ticaimukaṉai aṉaiyavarkal̤ cĕmmai mikka *
antaṇar-tam ākutiyiṉ pukai ār cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-7

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1624. To bring back his wife Sita who plays with a soft ball with her hands, our lord shot his killing arrows and cut off the indestructible arms and heads of Rāvana, the king of Lankā where the sun, the god of the day, cannot enter. He stays happily in rich Thiruvazhundur where good-natured Vediyars, skilled in pure Tamil and the northern arts, perform sacrifices with rising smoke and resemble Nānmuhan himself.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செந் தமிழும் சிறந்த தமிழ் மொழியிலும்; வடகலையும் ஸம்ஸ்க்ருத மொழியிலும்; திகழ்ந்த நாவர் தேர்ந்த நா வன்மை பெற்ற; திசைமுகனை அனையவர்கள் பிரமனை ஒத்த; செம்மை மிக்க நற்குணங்கள் நிறைந்த; அந்தணர் தம் வைதிகர்கள்; ஆகுதியின் செய்யும் யாகங்களின்; புகையார் ஆகுதியின் புகையால்; செல்வத்து நிறைந்த செல்வத்தையுடைய; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; பந்து அணைந்த பந்து பிடித்திருக்கும்; மெல் விரலாள் மெல்லிய விரல்க்ளையுடைய; சீதைக்கு ஆகி சீதையை அடையும் பொருட்டு; பகலவன் மீது ஸூர்யன் இலங்கைக்கு மேலே; இயங்காத இலங்கை போக இயலாத இலங்கை; வேந்தன் அரசனின்; அந்தமில் திண் எண்ணிறந்த வலிய; கரம் சிரங்கள் தோள்களும் தலைகளும்; புரண்டு வீழ புரண்டு வீழ; அடு கணையால் கொல்லவல்ல பாணத்தை; எய்து பிரயோகித்து; உகந்த அம்மான் உகந்த எம்பெருமானை; காண்மின் கண்டு களியுங்கள்

PT 7.8.8

1625 கும்பமிகுமதவேழம்குலையக்கொம்பு
பறித்து மழவிடையடர்த்துக்குரவைகோத்து *
வம்பவிழும்மலர்க்குழலாளாய்ச்சிவைத்த
தயிர்வெண்ணெயுண்டுகந்தமாயோன் காண்மின் *
செம்பவளமரதகம் நன்முத்தம்காட்டத்
திகழ்பூகம்கதலிபலவளம்மிக்கு எங்கும் *
அம்பொன்மதிள்பொழில்புடைசூழ்ந்துஅழகார்செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1625 கும்பம் மிகு மத வேழம் குலைய கொம்பு
பறித்து * மழ விடை அடர்த்துக் குரவை கோத்து *
வம்பு அவிழும் மலர்க் குழலாள் ஆய்ச்சி வைத்த
தயிர் வெண்ணெய் * உண்டு உகந்த மாயோன் காண்மின் **
செம் பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத் *
திகழ் பூகம் கதலி பல வளம் மிக்கு எங்கும் *
அம் பொன் மதிள் பொழில் புடை சூழ்ந்து அழகு ஆர் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 8
1625 kumpam miku mata vezham kulaiya kŏmpu
paṟittu * mazha viṭai aṭarttuk kuravai kottu *
vampu avizhum malark kuzhalāl̤ āycci vaitta
tayir vĕṇṇĕy * uṇṭu ukanta māyoṉ kāṇmiṉ- **
cĕm paval̤am maratakam nal muttam kāṭṭat *
tikazh pūkam katali pala val̤am mikku ĕṅkum *
am pŏṉ matil̤ pŏzhil puṭai cūzhntu azhaku ār cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-8

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1625. The Māyon broke the tusks of the elephant Kuvalayābeedam and killed it, conquered the young seven bulls, danced the Kuravai kuthu dance and ate the yogurt and butter that Yasodha kept, her hair adorned with fragrant flowers. He stays happily in rich Thiruvazhundur surrounded with precious golden walls and groves where banana and shining puham trees flourish everywhere and red corals and emeralds are bountiful.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செம்பவளம் சிவந்த பவழத்தையும்; மரகதம் மரகத பச்சையையும்; நல் முத்தம் வெண்ணிற முத்தும் தோன்றும்; காட்ட பாக்குமரங்களும்; திகழ் பூகம் பல வகை; கதலி பல வாழை மரங்களும்; வளம் மிக்கு வளத்தோடு; எங்கும் எல்லா இடங்களிலும்; அம் பொன் அழகிய பொன் மயமான; மதிள் மதிள்களாலும்; பொழில் சோலைகளாலும்; புடைசூழ்ந்து சூழ்ந்த; அழகு ஆர் அழகு நிறைந்த; செல்வத்து செல்வமுடைய; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; கும்பம் மிகு பெருத்த தலையையும்; மதவேழம் மதமுடைய யானை; குலை அழியும்படி; கொம்பு பறித்து அதன் கொம்பைப் பறித்து; மழ விடை இளமையான; அடர்த்து ஏழு எருதுகளை அடக்கி; குரவை ஆய்ச்சியரோடு குரவை; கோத்து கூத்தாடி; வம்பு அவிழும் நறுமணம் வீசும்; மலர்க் மலர்களொடு கூடின; குழலாள் கூந்தலையுடைய; ஆய்ச்சி ஆய்ச்சி யசோதை; வைத்த வைத்திருந்த; தயிர் தயிர்; வெண்ணெய் உண்டு வெண்ணெய் உண்டு; உகந்த மாயோன் உகந்த மாயனை; காண்மின் கண்டு களியுங்கள்

PT 7.8.9

1626 ஊடேறுகஞ்சனொடுமல்லும்வில்லும்
ஒண்கரியும்உருள்சகடும்உடையச்செற்ற *
நீடேறுபெருவலித்தோளுடையவென்றி
நிலவுபுகழ்நேமியங்கைநெடியோன்காண்மின் *
சேடேறுபொழில்தழுவும் எழில்கொள்வீதித்
திருவிழவில்மணியணிந்த திண்ணைதோறும் *
ஆடேறுமலர்க்குழலார்பயிலும் செல்வத்து
அணியழுந்தூர்நின்றுகந்தஅமரர்கோவே.
1626 ஊடு ஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும் *
ஒண் கரியும் உருள் சகடும் உடையச் செற்ற *
நீடு ஏறு பெரு வலித் தோள் உடைய வென்றி *
நிலவு புகழ் நேமி அங்கை நெடியோன் காண்மின் **
சேடு ஏறு பொழில் தழுவும் எழில் கொள் வீதித் *
திருவிழவில் மணி அணிந்த திண்ணைதோறும் *
ஆடு ஏறு மலர்க் குழலார் பயிலும் செல்வத்து *
அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர் கோவே 9
1626 ūṭu eṟu kañcaṉŏṭu mallum villum *
ŏṇ kariyum urul̤ cakaṭum uṭaiyac cĕṟṟa *
nīṭu eṟu pĕru valit tol̤ uṭaiya vĕṉṟi *
nilavu pukazh nemi aṅkai nĕṭiyoṉ kāṇmiṉ- **
ceṭu eṟu pŏzhil tazhuvum ĕzhil kŏl̤ vītit *
tiruvizhavil maṇi aṇinta tiṇṇaitoṟum *
āṭu eṟu malark kuzhalār payilum cĕlvattu *
aṇi azhuntūr niṉṟu ukanta amarar-kove-9

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1626. See, the tall wide-shouldered lord, the god of the gods, famous and victorious holding a discus in his beautiful hand, fought with the evil Kamsan and conquered the wrestlers sent by him, fought with the strong elephant Kuvalayābeedam and killed Sakatāsuran when he came as a cart. He stays happily in beautiful rich Thiruvazhundur with young groves and beautiful streets where the porches are studded with jewels and lovely women adorned with flowers in their hair learn dancing on those porches at festival times.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சேடு ஏறு இளம்; பொழில் தழுவும் சோலைகளால் சூழ்ந்த; எழில் கொள் அழகிய; வீதி தெருக்களிலே நடக்கின்ற; திருவிழவில் விழாக்களில்; மணி அணிந்த ரத்நங்கள் பதிக்கப்பெற்ற; திண்ணை தோறும் திண்ணைகளிலெல்லாம்; ஆடு ஏறு மணம் மிக்க; மலர் மலர்கள் அணிந்த; குழலார் கூந்தலுடைய பெண்கள்; பயிலும் செல்வத்து இருக்கும் சிறப்பான; அணி அழுந்தூர் அழகிய திருவழுந்தூரில்; நின்று வந்துநின்று; உகந்த அமரர் உகந்த அமரர்; கோவே தலைவன் எம்பெருமான்; ஊடு ஏறு மஞ்சத்தின் மத்தியில் ஏறியுள்ள; கஞ்சனோடு கம்ஸனும்; மல்லும் வில்லும் மல்லர்களும் வில்லும்; ஒண் கரியும் அழகிய யானையும்; உருள் சகடும் உருண்டு ஓடும் சகடமும்; உடையச் செற்ற உடையும்படி அழித்திட்ட; நீடு ஏறு பெரு நீண்டு உயர்ந்த பெரிய; வலி வலிமையுடைய; தோள் தோள்களையுடையவனும்; உடைய வென்றி வெற்றியினால்; நிலவு புகழ் புகழுடையவனுமான; நேமி அம் கை அழகிய சக்கர கைகளையுடைய; நெடியோன் நெடியோனை; காண்மின் கண்டு களியுங்கள்

PT 7.8.10

1627 பன்றியாய்மீனாகிஅரியாய்ப் பாரைப்
படைத்துக்காத்துண்டுமிழ்ந்தபரமன்தன்னை *
அன்றுஅமரர்க்கதிபதியும்அயனும்சேயும்
அடிபணிய அணியழுந்தூர்நின்றகோவை *
கன்றிநெடுவேல்வலவன்ஆலிநாடன்
கலிகன்றியொலிசெய்தஇன்பப்பாடல் *
ஒன்றினொடுநான்கும்ஓரைந்தும் வல்லார்
ஒலிகடல்சூழுலகாளும்உம்பர்தாமே. (2)
1627 ## பன்றி ஆய் மீன் ஆகி அரி ஆய்ப் * பாரைப்
படைத்துக் காத்து உண்டு உமிழ்ந்த பரமன் தன்னை *
அன்று அமரர்க்கு அதிபதியும் அயனும் சேயும் *
அடி பணிய அணி அழுந்தூர் நின்ற கோவை **
கன்றி நெடு வேல் வலவன் ஆலி நாடன் *
கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல் *
ஒன்றினொடு நான்கும் ஓர் ஐந்தும் வல்லார் *
ஒலி கடல் சூழ் உலகு ஆளும் உம்பர் தாமே 10
1627 ## paṉṟi āy mīṉ āki ari āyp * pāraip
paṭaittuk kāttu uṇṭu umizhnta paramaṉ-taṉṉai *
aṉṟu amararkku atipatiyum ayaṉum ceyum *
aṭi paṇiya aṇi azhuntūr niṉṟa kovai **
kaṉṟi nĕṭu vel valavaṉ āli nāṭaṉ *
kalikaṉṟi ŏlicĕyta iṉpap pāṭal *
ŏṉṟiṉŏṭu nāṉkum or aintum vallār *
ŏli kaṭal cūzh ulaku āl̤um umpar-tāme-10

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1627. He, the highest god and the king of the gods, who took the forms of a boar, a fish, and a man-lion and created, protected, swallowed and spat out the world stays in Aniyazundur happily while Indra, the king of the gods, Nānmuhan and Murugan worship his feet. Kaliyan the poet, the strong king of Thiruvāli with a long spear composed ten musical pāsurams on the god of Thiruvazhundur. If devotees learn and recite these ten pāsurams well they will be like gods and rule this world surrounded by the sounding oceans.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்று பன்றி ஆய் அன்று வராஹமாகவும்; மீன் ஆகி மீனாகவும்; அரி ஆய் நரசிம்மமாகவும்; பாரை படைத்து உலகை படைத்து; காத்து உண்டு காத்து உண்டு; உமிழ்ந்த உமிழ்ந்த; பரமன் தன்னை எம்பெருமானை; அமரர்க்கு தேவர்களுக்கு; அதிபதியும் தலைவனான இந்திரனும்; அயனும் பிரமனும்; சேயும் அவன் மகன் ருத்ரனும்; அடி உன் திருவடிகளை; பணிய வணங்கும்படி; அணி அழுந்தூர் திருவழுந்தூரில்; நின்ற கோவை நின்ற பெருமானைக் குறித்த; கன்றி நெடு கரை படிந்த நீண்ட; வேல் வேலாயுதத்தை; வலவன் பிடிக்க வல்லவரான; ஆலி நாடன் ஆலி நாடன் என்னும்; கலிகன்றி திருமங்கை ஆழ்வார்; ஒலி செய்த அருளிச்செய்த; இன்பப் பாடல் இந்த இனிய பாடல்களான; ஒன்றினொடு நான்கும் ஒன்றோடு கூடின நான்கும்; ஓர் ஐந்தும் ஓரைந்துமான பத்துப் பாசுரங்களையும்; வல்லார் ஓத வல்லார்; ஒலி கடல் சூழ் ஒலிக்கின்ற கடலால் சூழ்ந்த; உலகு ஆளும் இவ்வுலகங்களை ஆளவல்ல; உம்பர் தாமே தேவர்களாவர்