1425 வேதவாய்மொழி அந்தணனொருவன்
எந்தை! நின்சரண், என்னுடைமனைவி *
காதல்மக்களைப்பயத்தலும்காணாள்
கடியதோர்தெய்வங்கொண்டொளிக்கு மென்றழைப்ப *
ஏதலார்முன்னேஇன்னருள் அவற்குச்செய்து
உன்மக்கள்மற்றிவரென்றுகொடுத்தாய் *
ஆதலால்வந்துஉன்னடியிணையடைந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே!