PT 5.8.3

Araṅgan is He Who Protected Gajendra

கஜேந்திரனைக் காப்பாற்றியவன் அரங்கன்

1420 கடிகொள்பூம்பொழில்காமருபொய்கை

வைகுதாமரைவாங்கியவேழம் *

முடியும்வண்ணம்ஓர்முழுவலிமுதலை

பற்ற மற்றதுநின்சரண்நினைப்ப *

கொடியவாய்விலங்கின்னுயிர்மலங்கக்

கொண்டசீற்றமொன்றுண்டுளதறிந்து * உன்

அடியனேனும்வந்துஅடியிணையடைந்தேன்

அணிபொழில்திருவரங்கத்தம்மானே!

Text size