PT 5.8.1

Araṅgan is He Who Befriended Guha

குகனைத் தோழமை கொண்டவன் அரங்கன்

1418 ஏழைஏதலன்கீழ்மகனென்னாது

இரங்கி மற்றவற்குஇன்னருள்சுரந்து *

மாழைமான்மடநோக்கியுன்தோழி

உம்பிஎம்பியென்றொழிந்திலை * உகந்து

தோழன்நீஎனக்குஇங்கொழியென்ற

சொற்கள்வந்து அடியேன்மனத்திருந்திட *

ஆழிவண்ண! நின்னடியிணையடைந்தேன்

அணிபொழில்திருவரங்கத்தம்மானே. (2)

Text size