Sing These; Sins Will Fly Away
இவற்றைப் பாடுங்கள்; பாவம் பறந்தவிடும்
1427 மாடமாளிகைசூழ்திருமங்கை
மன்னன் ஒன்னலர்தங்களைவெல்லும் *
ஆடல்மாவலவன்கலிகன்றி
அணிபொழில்திருவரங்கத்தம்மானை *
நீடுதொல்புகழாழிவல்லானை
எந்தையைநெடுமாலைநினைந்த *
பாடல்பத்திவைபாடுமின்தொண்டீர்!
பாட நும்மிடைப்பாவம்நில்லாவே. (2)