Your browser does not support the audio element.
audio
1408 பண்டைநான்மறையும்வேள்வியும்கேள்விப்
பதங்களும்பதங்களின்பொருளும் *
பிண்டமாய்விரித்தபிறங்கொளியனலும்
பெருகியபுனலொடுநிலனும் *
கொண்டல்மாருதமும்குரைகடலேழும்
ஏழுமாமலைகளும்விசும்பும் *
அண்டமும்தானாய்நின்றஎம்பெருமான்
அரங்கமாநகரமர்ந்தானே. (2)
1409 இந்திரன்பிரமன்ஈசனென்றிவர்கள்
எண்ணில்பல்குணங்களே இயற்ற *
தந்தையும்தாயும்மக்களும் மிக்க
சுற்றமும்சுற்றிநின்றகலாப்
பந்தமும் * பந்தமறுப்பதோர்மருந்தும்
பான்மையும் பல்லுயிர்க்கெல்லாம் *
அந்தமும்வாழ்வுமாய எம்பெருமான்
அரங்கமாநகரமர்ந்தானே.
1410 மன்னுமாநிலனும்மலைகளும்கடலும்
வானமும்தானவருலகும் *
துன்னுமாயிருளாய்த்துலங்கொளிசுருங்கித்
தொல்லைநான்மறைகளும்மறைய *
பின்னும்வானவர்க்கும்முனிவர்க்கும்நல்கிப்
பிறங்கிருள்நிறங்கெட * ஒருநாள்
அன்னமாய்ன்றங்கருமறைபயந்தான்
1411 மாயிருங்குன்றமொன்றுமத்தாக
மாசுணமதனொடும்அளவி *
பாயிரும்பௌவம்பகடுவிண்டலறப்
படுதிரைவிசும்பிடைப்படர *
சேயிருவிசும்பும்திங்களும்சுடரும்
தேவரும்தாமுடன்திசைப்ப *
ஆயிரந்தோளால்அலைகடல்கடைந்தான்
1412 எங்ஙானேயுய்வர்? தானவர்நினைந்தால்
இரணியனிலங்குபூணகலம் *
பொங்குவெங்குருதிபொன்மலைபிளந்து
பொழிதரும்அருவியொத்திழிய *
வெங்கண்வாளெயிற்றோர்வெள்ளிமாவிலங்கல்
விண்ணுறக்கனல்விழித்தெழுந்தது *
அங்ஙனேயொக்கஅரியுருவானான்
1413 ஆயிரம்குன்றம்சென்றுதொக்கனைய
அடல்புரைஎழில்திகழ்திரள்தோள் *
ஆயிரந்துணியஅடல்மழுப்பற்றி
மற்றவனகல்விசும்பணைய *
ஆயிரம்பெயரால்அமரர்சென்றிறைஞ்ச
அறிதுயிலலைகடல்நடுவே *
ஆயிரம்சுடர்வாய்அரவணைத்துயின்றான்
1414 சுரிகுழல்கனிவாய்த்திருவினைப்பிரித்த
கொடுமையிற்கடுவிசையரக்கன் *
எரிவிழித்திலங்குமணிமுடிபொடிசெய்து
இலங்கைபாழ்படுப்பதற்கெண்ணி *
வரிசிலைவளைய அடிசரம்துரந்து
மறிகடல்நெறிபட * மலையால்
அரிகுலம்பணிகொண்டுஅலைகடலடைத்தான்
1415 ஊழியாய்ஓமத்துச்சியாய் ஒருகா
லுடையதேரொருவனாய் * உலகில்
சூழிமால்யானைத்துயர்கெடுத்து
இலங்கைமலங்கஅன்றுஅடுசரந்துரந்து *
பாழியால்மிக்கபார்த்தனுக்கருளிப்
பகலவனொளிகெட * பகலே
ஆழியால்அன்றங்குஆழியைமறைத்தான்
1416 பேயினார்முலையூண்பிள்ளையாய் ஒருகால்
பெருநிலம்விழுங்கி * அதுமிழ்ந்த
வாயனாய்மாலாய்ஆலிலைவளர்ந்து
மணிமுடிவானவர்தமக்குச்
சேயனாய் * அடியேற்குஅணியனாய்வந்து
என்சிந்தையுள்வெந்துயரறுக்கும் *
ஆயனாய்அன்றுகுன்றமொன்றெடுத்தான்
1417 பொன்னுமாமணியும்முத்தமும்சுமந்து
பொருதிரைமாநதிபுடைசூழ்ந்து *
அன்னமாடுலவும்அலைபுனல்சூழ்ந்த
அரங்கமாநகரமர்ந்தானை *
மன்னுமாமாடமங்கையர்தலைவன்
மானவேற்கலியன்வாயொலிகள் *
பன்னியபனுவல்பாடுவார் நாளும்
பழவினைபற்றறுப்பாரே. (2)