He Who Graced Sāndīpani
சாந்தீபினிக்கு அருள் புரிந்தவன்
1424 ஓதுவாய்மையும்உவனியப்பிறப்பும்
உனக்குமுன்தந்தஅந்தணனொருவன் *
காதலென்மகன்புகலிடம்காணேன் *
கண்டுநீதருவாயெனக்குஎன்று *
கோதில்வாய்மையினான்உனைவேண்டிய
குறைமுடித்துஅவன்சிறுவனைக்கொடுத்தாய் *
ஆதலால்வந்துஉன்னடியிணையடைந்தேன்
அணிபொழில்திருவரங்கத்தம்மானே!