PT 5.8.4

He Who Protected the Nāga Prince Named Sumukha

சுமுகன் என்ற நாககுமாரனைக் காத்தவன்

1421 நஞ்சுசோர்வதோர்வெஞ்சினவரவம்

வெருவிவந்துநின்சரணெனச்சரணா *

நெஞ்சில்கொண்டுநின்னஞ்சிறைப்பறவைக்கு

அடைக்கலம்கொடுத்து அருள்செய்ததறிந்து *

வெஞ்சொலாளர்கள்நமன்றமர்கடியர்

கொடியசெய்வனவுள * அதற்குஅடியேன்

அஞ்சிவந்துநின்னடியிணையடைந்தேன்

அணிபொழில்திருவரங்கத்தம்மானே!

Text size